Vladimir Lenin

1.A revolution is impossible without a revolutionary situation; furthermore, not every revolutionary situation leads to revolution.
Vladimir Lenin

2.
Any cook should be able to run the country.
Vladimir Lenin

3.
Crime is a product of social excess.
Vladimir Lenin

முற்றுகை போராட்டம் வெல்லட்டும்

தண்ணீருக்காக உலகயுத்தம் வருமா? என கேள்வி எழுப்புவோருக்கு இந்த போராட்டம் வரும் என்கிறது .

தேசஒற்றுமை என பேசிக்கொண்டே ஏமாற்றும் அரசியல் வாதிகளை மக்கள் தட்டி கேட்கவே மாட்டாரக்ளா? என கேட்பவர்களுக்கு பதிலாக இந்த போராட்டத்தை சொல்லலாம் .

கேரள மக்களுக்கு பாதுகாப்பு தமிழ்நாட்டு தண்ணீர் எனும் நயவஞ்சக பேச்சை மக்கள் நம்புவார்களா ? என்றால் இல்லை நம்பவில்லை என்பதை இந்த போராட்டம் காட்டுகிறது

கேரள மந்திரிகள் டெல்லியில் முகாமிட்டு பிரதமரை சந்தித்து பேசி பேசியே அணையை உடைத்துவிட முடியுமா ? முடியாது இதோ மக்கள் கிளர்ந்துவிட்டார்கள்

புரட்சி பற்றி பேசியும் எழுதியும் வரும் பிரபல புரட்சிகாரர்கள் மண்டைக்குள் இருந்துதான் மக்கள் புரட்சி செய்வார்களா இல்லை அப்படி நிகழாது அவர்கள் கடையில் வருவார்கள் என்பது போராட்டம் காட்டுகிறது

மக்கள் திரள் என்றாலே ஒன்றும் தெரியாதவர்கள் வன்முறையில் இறங்குவார்கள் லத்தி சார்ஜ் தான் வாங்குவார்கள் என்றால் இல்லை அவர்கள் தெளிவாக பேசுவதையும் பார்க்கலாம்

"எங்களுக்கு தண்ணீர் வேண்டும் இந்த போலீஸ் எங்களை பாதுகாக்க இருந்தால் இருக்கட்டும் இல்லாவிட்டால் இந்த போலீஸ் எங்களுக்கு தேவை இல்லை "

ஒரு பக்கம் கோர்ட்டில் வாதாடி கொண்டே இன்னொரு பக்கம் அணையை உடைக்க முயற்சி நடக்கும் போது என்ன செய்வார்கள் மக்கள் அடுத்த தேர்தல்வரை காத்திருக்க வேண்டுமா ? இல்லை திரண்டு வந்துவிடுவார்கள் என காட்டுகிறது போராட்ட காட்சி

போராட்ட காரர்கள் இனிமேல் போலீசுகளிடம் லத்திஅடி வாங்காமல் இருக்கவும் லத்திகளை பிடிங்கவும் செய்தால் நல்லா இருக்கும்

அடித்தால் ஓடாமல் லத்திகளை பிடுங்கும்படி மக்களுக்கு அங்கு தலைமையில் இருப்போர் சொல்லவேண்டும்

மக்கள் சக்திக்கு முன் அடக்குமுறை கருவி வேலை செய்யாது அது மக்கள் சக்தியை முறையாக பயன்படுத்தும் போது சுத்தமா வேலை செய்யவே முடியாது என்பதை காட்டவேண்டுமானால் கொஞ்சம் செயல்தந்திரத்துடன் போராடவேண்டும்

மக்கள் எல்லையில் முற்றுகை நடத்துகிறார்கள் அனைத்து எல்லைக்கும் விஸ்தரிக்கப்பட வேண்டும்

பதிவர்கள் இணைய வாசிப்பாளர்கள் தங்களால் முடிந்தது இந்த போராட்டத்தின் விசயங்களை மக்களிடம் கொண்டு செல்லவும் முடிந்தவர்கள் போராட்ட களத்திற்கு செல்லவும் வேண்டும்

திட்டமிடப்படாத போராட்டமாக இருக்கும் இதை திட்டமிடவும் கேரள மற்றும் மத்திய அரசை பணியவைக்கவும் செய்யவேண்டும்

அதே நேரத்தில் இங்கிருக்கும் சிபி எம்ம் பிஜே பி , அதிமுக காங்கிரஸ் கட்சி குண்டர்களை கேள்வி கேட்பதன்மூலம் மூலம் ஓட்டு அரசியலுக்கு பொய் சொல்வதை மூட்டைகட்ட வைக்க வேண்டும்

ஓவ்வொரு போலிக்கும் தாம் உதைபடுவோம் என்பது தெரியவேண்டும்
--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================

2 Responses so far.

  1. மக்கள் கலக்கம் செய்யும் மன நிலையில் இருக்கிறார்கள், அதை புரட்சியாக மாற்றும் விழிப்புணர்வு வேண்டும்... கோபம் சரியான திசையில் பயணிக்காமல் திசை திரும்புவதை தடுக்க வேண்டும்... இது ஆரம்பம் தான்... இது தொடர வேண்டும்

  2. மக்கள் கலகம் செய்யும் மனநிலையில் இருக்கிறார்கள் என்று திருத்திக் கொள்ளவும்