வால் ஸ்டிரீட் போராட்டம் சரியானது ஆனால் அதன் இலக்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்க்காமல் பெருமுதலாளிகளான வால் ஸ்டீரீட் மட்டுமே முதலாளித்துவ பிரச்சனைகளுக்கு காரணம் என விசயத்தை மாற்றி யோசிக்கிறது இன்னிலையில் இதை பற்றி சுட்டிகாட்டாமல் எழுதப்பட்ட கட்டுரையான இது அந்த போராட்டத்தை புகழுவதோடு நின்று பின் அதன் திசைவழியில் இருக்கும் தவறை சொல்லவில்லை
1.முதலாளித்துவத்தை காப்பாற்றுவதும் அதை வாழவைப்பது முதலாளித்துவ அரசுதான்
2.அதை போலத்தான் ஏகாதிபத்திய அரசும்
http://www.vinavu.com/2011/11/04/occupy-wall-street/
//கடன் பாக்கிக்காக வீடுகளைப் பறிமுதல் செய்து எங்களை விரட்டுகின்றன வங்கிகள். வீட்டு வாடகை அல்லது மளிகை சாமான் இரண்டில் ஒன்று என நாங்கள் நெருக்கப்படுகிறோம். சோற்றுக்காக தெருவில் கிடக்கிறோம். வேலை இல்லை. இருந்தாலும் நியாயமான கூலி இல்லை. மருத்துவ வசதி இல்லை. ஒரு சதவீதத்தினருக்கு மட்டும் எல்லாம் இருக்கின்றது. எங்களுக்கு எதுவும் இல்லை. நாங்கள் 99% பேர். நாங்கள்தான் அமெரிக்கா!" என்று முழங்குகின்றனர் மக்கள்//
அவர்களின் கோரிக்கைகள் என்ன ?
----------------------------------------------------------------------------------------------------------
வால் தெரு ஆக்கிரமிப்பு இயக்கம் என்ற இணையதளத்தில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் :
1. சம்பள உயர்வு: தடையற்ற வர்த்தகத்தை முடிவுக்குக் கொண்டு வந்து உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும். ஒரு மணிநேரத்துக்கு 20 டாலர் என்ற வீதத்தில் சம்பளத்தை உயர்த்த வேண்டும்.
2. தனியார் நிறுவனங்களுக்குத் தடை: நாடு முழுவதுமான ஒரே ஒரு அரசு காப்பீட்டு நிறுவனம் மட்டுமே நிறுவப்பட வேண்டும். தனியார் நிறுவனங்கள் இதில் அடிக்கும் கொள்ளையை வால் தெருவில் உள்ள பங்குச் சந்தையில் பதுக்குவதால், அவற்றுக்கு காப்பீட்டுத் திட்டத்துக்குள் நுழையத் தடை விதிக்க வேண்டும்.
3. நிரந்தர ஊக்கத் தொகை: வேலைவாய்ப்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும், குறைந்த பட்ச ஊக்கத் தொகைக்கு உறுதியளிக்க வேண்டும்.
4. இலவசக் கல்வி: கல்லூரிக் கல்வி கட்டணங்களை அறவே நீக்க வேண்டும்.
5. புதுப்பிக்கத் தக்க எரிசக்தி: நிலக்கரி போன்ற புதைபடிவ எரிபொருட்களைக் கைவிட்டு, மாற்று வழியில் எரிசக்தி உற்பத்திக்கான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிட வேண்டும்.
6. உடனடிச் செலவு: குடிநீர், சாலைகள், கழிவுநீர்ப் போக்குவரத்து, ரயில், பாலங்கள், மின்கட்டமைப்பு ஆகியவற்றுக்காக உடனடியாக ஒரு டிரில்லியன் டொலர் செலவழிக்க வேண்டும்.
7. வனப் பாதுகாப்பு: அமெரிக்காவின் அனைத்து அணு உலைகளையும் மூடுதல், காடுகள் மற்றும் சதுப்பு நிலங்களை உருவாக்குதல், ஆறுகளின் இயற்கையான போக்கை தடுக்காதிருத்தல் போன்றவற்றிற்காக மேலும் ஒரு டிரில்லியன் டொலர் செலவு செய்ய வேண்டும்.
8. சம உரிமை: இனம் மற்றும் பாலியல் சம உரிமைகளுக்கான சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும்.
9. எல்லைச் சிக்கல்: நாட்டின் அனைத்து மாகாண எல்லைகளையும் திறந்து விட வேண்டும். இதன் மூலம் யாரும் எங்கு வேண்டுமானாலும் போய் வேலை செய்து வாழ வழி செய்தல்.
10. வாக்குச் சீட்டு: அமெரிக்கத் தேர்தல்களில் சர்வதேச நடைமுறைப்படி, வாக்குச் சீட்டைக் கொண்டு வர வேண்டும். சுயேச்சை மற்றும் கட்சி கண்காணிப்பாளர்கள் மத்தியில் வாக்குச் சீட்டுகள் எண்ணப்பட வேண்டும்.
11. கடன் தள்ளுபடி: வர்த்தகம், கல்வி, வீட்டு அடமானம் உள்ளிட்ட அனைத்துக் கடன்களையும் உடனடியாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். அதேபோல், உலக வங்கி அனைத்து நாடுகளுக்கும் வழங்கிய கடன், வங்கிகள் வங்கிகளுக்கு வழங்கிய கடன், அனைத்து கடன் பத்திரங்கள் மீதான கடன் என அனைத்தையும் உலகளவில் தள்ளுபடி செய்ய வேண்டும்.
12. விலக்கம்: அனைத்து கடன் மதிப்பீட்டு குறியீட்டு நிறுவனங்களுக்கும் சட்டப் பாதுகாப்பை விலக்க வேண்டும்.
13. தொழிலாளர் அமைப்பு: தொழிலாளர் அமைப்புகளின் தலைமையைத் தேர்ந்தெடுப்பதில், அனைத்து தொழிலாளர்களும் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். போன்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
அண்ணன் ஒபாமா என்ன சொல்றார்னா:
அதிபர் ஒபாமா கருத்து
போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிபர் ஒபாமா, மக்களின் கோபத்தின் மூலம் நமது நிதி அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பது தெரியவந்துள்ளது. என்று கூறியுள்ளார்
(ஹி ஹி அரசு வேறு முதலாளித்துவ கொள்ளை வேறுன்னு தனியா நின்னு போராடுகிறவர்கள் போலவே அண்ண்ன் ஒபாமாவும் தனியா நின்னுகிட்டு பதில் சொல்றார் )
//"ஒரு முனையில் செல்வம் குவிவதன் விளைவாக, அதே நேரத்தில் இன்னொரு முனையில் வறுமைத்துயர் குவிகிறது" என்றார் மார்க்ஸ். அந்த இன்னொரு முனைதான் வால் ஸ்டிரீட்டில் குவிந்து கொண்டிருக்கிறது. செல்வம் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்குப் பொசியும் என்ற முதலாளித்துவப் பித்தலாட்டம் அதன் தலைமையகத்திலேயே எள்ளி நகையாடப் படுகிறது.//
ஒரு முனையில் செல்வம் குவிந்தால் மறுமுனையில் வறுமை அதிகரிக்கும் எல்லாம் சரி அதில் ஏகாதிபத்தியத்தின் பங்கென்ன விளக்கமா கேட்டால் அமெரிக்க அரசின் பங்கென்ன ?
இதை சொல்ல வேண்டாமா? மார்க்ஸ் சொன்னமாதிரி போராட்டம் நடக்குது சரி எதிரி யார்னு லெனின் சொன்னாரே அவர்களுக்கு எதிராக அமெரிக்க மக்கள் கொந்தளிக்கவில்லை ஏன் ?
ஊழல் எதிர்ப்பு போராட்டம் இந்தியாவில் காங்கிரசுக்கு எதிராக என பலர் நினைத்து புரிந்து கொள்வதை போலத்தானே இது
விசயம் இங்கேதான் குறுகுகிறது
//தங்களுடைய உடைமைகளையும், உரிமைகளையும் பறித்துக் கொண்டது கார்ப்பரேட் முதலாளித்துவம்தான் என்ற கருத்து எங்கும் பரவி நிற்கிறது. //
அந்த முதலாளித்துவ அரசும்தான் என அவர்கள் நினைக்கவில்லை
அதை நீங்களும் சொல்லவில்லை( இங்கே கட்டுரையில் )
விசயம் இதுதான்
அன்னா ஹசாரே போன்று இந்தியாவில் ஊழலை ஒழிக்க போராட கிளம்புபவர்களின் மீது என் ஜி ஓ என்கிற முத்திரையும்
அவருக்கு ஆதரவாக கிளம்பிய இந்திய மத்திய தரவர்க்கத்தை சோம்பேறிகள் என்றும்
அமெரிக்காவில் போராடும் மத்திய தரவர்க்கத்தின் தெளிவற்ற பார்வையை சரியானது என்றும் போற்றி புகழ்வதன் மூலம்
திரு மருதையன் அவர்கள் தெளிவற்ற ஒரு பிரசாரத்தை மேற்கொள்கிறார்?
1.அமெரிக்காவில் 99% வீதம் பேர் வீடுகளை இழந்ததற்கு காரணம் ஏகாதிபத்திய அரசுதான் காரணம்ஏகாதிபத்தியத்தை முதல் எதிரியாக கொண்டு இந்த போராட்டம் நடத்தப்பட வேண்டும் என சொல்வதுதான் சரி
2.இந்தியா என்கிற ஏகாதிபத்தியத்துக்கு எதிரான ஒவ்வொரு போராட்டமும்
அது எந்த அளவு பிற்போக்கானவர்களால் நடத்தபட்டாலும் அதை கம்யூனிஸ்டுகள் கைபற்றி முன்னெடுத்து செல்ல தவறுவது வரலாற்று பிழை
--
தியாகு
-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================
occupy wall street
Posted by தியாகு on 2:20 PM


//இந்தியா என்கிற ஏகாதிபத்தியத்துக்கு எதிரான ஒவ்வொரு போராட்டமும்
அது எந்த அளவு பிற்போக்கானவர்களால் நடத்தபட்டாலும் அதை கம்யூனிஸ்டுகள் கைபற்றி முன்னெடுத்து செல்ல தவறுவது வரலாற்று பிழை//
கூடங்குளம் போராட்டத்தை கேலி செய்து நீங்களும் இதே வேலையே தான் செய்கிறீர்கள்... யப்பா ஏதாவது ஒரு நிலைப்பாடு எடுங்க... இல்லேன்னா நீங்களும் போலி தான் என்று நான் ஒதுங்க வேண்டி இருக்கும்
//கூடங்குளம் போராட்டத்தை கேலி செய்து நீங்களும் இதே வேலையே தான் செய்கிறீர்கள்...//
போராட்டத்தை கேலி செய்வது நல்ல கம்யூனிஸ்டுக்கு அழகல்ல நான் அப்படி எதாவது செய்து இருந்தால் அதை எனக்கு சுட்டி காட்டுங்கள்
மேலும் போராட்டங்களின் மீது விமர்சனம் வைப்பதும் கம்யூனிஸ்டுகளின் வேலையே
புலிகளின் போராட்டத்தின் மேல் கம்யூனிஸ்டுகள் இன்றுவரை விமர்சனம் வைக்கிறார்கள்
அதே நேரத்தில் போராடாமல் விமர்சனம் செய்கிறார்கள் என புலிகளும் கடைசிவரை கம்யூனிஸ்டுகள் சொன்னதை கேட்கவில்லை
அந்தந்த பகுதி மக்களின் போராட்டத்தை அந்தந்த பகுதி மக்களே தீர்மானிக்க வேண்டும் என்று கூறினார்கள் உழைக்கும் வர்க்க ஆசான்கள்... ஆகையால் இங்கு உட்கார்ந்து கொண்டு அந்த பகுதி மக்களின் போராட்டம் தவறு என்று கூறுவது எள்ளி நகயாடுவதர்க்கு சமமே தோழர்...
பெரும்பான்மை மக்கள் எந்தளவு பிற்போக்கானவர்கள் ஆனாலும் சரி... என்ற வாசகத்தை மீண்டும் படித்து கொள்ளவும் என்று சொல்வதை தவிர வேறு வழியில்லை போலிருக்கிறது... விடுங்க தோழர், வலிக்குது
மற்றொரு நாட்டின் போராட்டம் எந்த திசைவழியில் செல்கிறது என்பதை விமர்சனம் செய்வதற்கும் ஒரு எல்லை உண்டு அதை பொருத்தவரை நீங்கள் சொல்வது சரியே
ஆனால் எதுவுமே சொல்லகூடாது என்று யாரும் சொல்லவில்லை
”வால் ஸ்டிரீட் போராட்டம் சரியானது அதன் வர்க்க அடிப்படையில் ஆனால் எதிரி யார் என தீர்மானிக்கும் போது முதலாளிவர்க்க அரசை எதிரி அல்ல என தீர்மானிப்பது தவறுதானே அது சரியென்றால் எப்படி என சொல்லுங்கள் ”
//ஆகையால் இங்கு உட்கார்ந்து கொண்டு அந்த பகுதி மக்களின் போராட்டம் தவறு என்று கூறுவது எள்ளி நகயாடுவதர்க்கு சமமே தோழர்...//
இதுவும்
உலக தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்பதும் முரண்படுகிறதே
1.வெளிநாட்டில் நடக்கும் போராட்டத்தை விமர்சிப்பது எள்ளி நகையாடுவதற்கு சமம் என்றால்
2.அந்த தொழிலாளிவர்க்கத்துடன் நான் எப்படி ஒன்றிணைவது
“விமர்சனம் - சுயவிமர்சனம் “ என்ற அடிப்படையில்தான் எதையும் பார்க்க முடியும் தோழர் பரிசீலிக்கவும்
//http://libcom.org/forums/news/balanced-marxist-perspective-occupy-wall-street-related-phenomena-10102011//
தோழர், நீங்கள் வால் ஸ்ட்ரீட் போராட்டத்தை ஆதரித்ததை குறை கூறவில்லை... ஆனால் அதே ஊக்கத்தை இங்கே போராடும் மக்களுக்கும் கொடுக்க வேண்டும் என்று தான் கூறுகிறேன்... புரட்சி கிளம்புகிறது, இந்த புரட்சி சரியில்லை, இந்த புரட்சி சரியில்ல என்று கிளம்பினால் எந்த புரட்சியும் தங்காது... உலக தொழிலாளர்களே ஒன்று படுங்கள் என்பது அறைகூவல்... நீங்கள் போராடும் நோக்கம் சரியில்லை என்று கூறுவது அந்த அறைகூவலை தோற்கடித்து விடும் என்று தான் நான் சொல்கிறேன்... கொஞ்சம் யோசித்து பேசுங்கள்... இதை கூர்ந்து நோக்குபவர்கள் நிறைய நபர்கள் வருகிறார்கள்
//ஆனால் அதே ஊக்கத்தை இங்கே போராடும் மக்களுக்கும் கொடுக்க வேண்டும் என்று தான் கூறுகிறேன்... புரட்சி கிளம்புகிறது, இந்த புரட்சி சரியில்லை, இந்த புரட்சி சரியில்ல என்று கிளம்பினால் எந்த புரட்சியும் தங்காது... //
உண்மைதான் மக்கள் தெருவில் இறங்கி போராட வருவதே மிக கடினம் இதில் இந்த போராட்டத்தின் மீது விமர்சனங்கள் அதை முட்டுகட்டைதான் போடும் இதில் சந்தேகமில்லை
அதே நேரத்தில் மக்களுக்கு போதிக்கவும் உண்மையை எடுத்து சொல்லவும் வேண்டும்
1.ஈழத்தில் அரசியல் ரீதியா விவாதம் நடத்தவே முடியாத துப்பாக்கி அரசியலை புலிகள் உருவாக்கி விட்டார்கள்
என ஒரு தோழர் என்னிடம் குறை பட்டு கொண்டார்
போராட்டம் நடந்தாலே பெருசுன்னு ப்நிறை குறைகளை அலசாமல் இருந்துவிட்டோம்னா இந்த போராட்டம் ஓய்ந்ததும் மக்கள் அரசியல் ரிதியான போராட்டத்துக்கோ அரசியலற்ற போராட்டத்துக்கோ வரவே மாட்டாங்க
போராட்டமும் நடக்கனும் அது சரியான திசைவழியிலும் நடக்கனும் என்பதே எனது கோரிக்கை
1.வால்ஸ்டீர் போராட்டம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும் நடக்கனும் என்பதிலும்
2.கூடங்குளம் போராட்டம் இந்திய ஆளும் வர்க்கத்தினர் பாதுகாப்பு விசயத்தில் சரியான கவனம் செலுத்த சொல்லி வற்புறுத்துவதிலும் அமைய வேண்டுமே அல்லாது
---------------------
1.வால் தெரு போராட்டம் அமெரிக்காவில் பெரிய புரட்சியை கொண்டு வந்துவிடும் என்ற பொய்யான உறுதிமொழியை தருவதும்
2.கூடுங்குளத்தை மூடு என்பது சரியான பார்வை என்பது
தவறு என்பது எனது வாதம்
வவ்வால் சொல்லியது போல், நானும் நடந்து கொள்கிறேன்...
தோழமையுடன் விடை பெறுகிறேன்...
நன்றி
//வவ்வால் சொல்லியது போல், நானும் நடந்து கொள்கிறேன்...
தோழமையுடன் விடை பெறுகிறேன்...//
வவ்வால் சொன்னது அந்த போஸ்டுக்கு
நீங்கள் இந்த விவாதத்தில் நான் வைத்த கேள்விகளில் இருந்து போவது தனியா
தோழர் சூரிய ஜீவா,
எல்லா போராட்டங்களையும் ஒன்றாக்கி குழப்பிக்கிறீங்க எனினும் உங்களுடன் விவாதித்தது விசயங்களை வெளிக்கொண்டு வர ஏதுவானதாக இருந்தது நன்றி
அடுத்து இந்த விவாதத்தில் இருந்து நீங்கள் விலகி செல்வதற்கு சொல்லும் காரணத்தை மறுக்கிறேன்
எனினும் உங்களுக்கு விருப்பமில்லை என்பதால் முடித்து கொள்ளலாம் இந்த விவாதத்தை
மிக்க நன்றி
விவாதகன் கூற்று:
//போராட்டமும் நடக்கனும் அது சரியான திசைவழியிலும் நடக்கனும் என்பதே எனது கோரிக்கை
1.வால்ஸ்டீர் போராட்டம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும் நடக்கனும் என்பதிலும்
2.கூடங்குளம் போராட்டம் இந்திய ஆளும் வர்க்கத்தினர் பாதுகாப்பு விசயத்தில் சரியான கவனம் செலுத்த சொல்லி வற்புறுத்துவதிலும் அமைய வேண்டுமே அல்லாது
---------------------
1.வால் தெரு போராட்டம் அமெரிக்காவில் பெரிய புரட்சியை கொண்டு வந்துவிடும் என்ற பொய்யான உறுதிமொழியை தருவதும்
2.கூடுங்குளத்தை மூடு என்பது சரியான பார்வை என்பது
தவறு என்பது எனது வாதம்//
தொடர்ந்து விவாதத்தை கவனித்துக்கொண்டு வருகிறேன். என்னால் பங்கெடுக்க முடியவில்லை. ஆனாலும் மேற்கண்ட முடிவு சரியானது என்பதே எனது பார்வை. இன்னும் விவாதங்கள் தேவைப் படுகிறது. தொடர வாழ்த்துக்கள்....
//வருகிறேன். என்னால் பங்கெடுக்க முடியவில்லை. ஆனாலும் மேற்கண்ட முடிவு சரியானது என்பதே எனது பார்வை. இன்னும் விவாதங்கள் தேவைப் படுகிறது. தொடர வாழ்த்துக்கள்.... //
நன்றி தோழர்
Death to capitalism throughout the world on Wall Street had not been a movement in America.