ஒரு விஞ்ஞானியை விமர்சிக்க குறைந்தளவாவது விஞ்ஞான அடிப்படை தரவுகள் இல்லாமல் ஒரு ஜோசியகாரரின் மனநிலைக்கு சென்று விமர்சிக்கும் ஞானியை போன்ற மத்தியதரவர்க்க குட்டி பூர்சுவா அறிவாளிகளால் நமது சமூகத்துக்கு எந்த பயனும் இல்லை :இவரது கட்டுரையில் இன்னும் நான் விமர்சிக்காத பகுதிகள் இருக்கிறது அவை தொடர்ந்து வரும்
-------------------
//நான் உங்கள் ரசிகன் அல்ல. விமர்சகன். “நல்லது செய்தல் ஆற்றீராயினும் அல்லது செய்தல் ஓம்புமின்” என்று உங்களை சில வாரம் முன்னால் இதே பக்கங்களில் கோரியிருந்தேன். நீங்கள் கேட்கவில்லை. உலகத்தில் விஞ்ஞானி என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் எவரும் செய்யத் துணியாத ஒரு பிரகடனத்தைச் செய்திருக்கிறீர்கள். கூடங்குளம் அணு உலை 100 சதவிகிதம் பாதுகாப்பானது என்று! அணுத் தொழில்நுட்பம் 100 சதவிகிதம் பாதுகாப்பானது என்று எந்த அணு விஞ்ஞானியும் சொல்லமாட்டார். நீங்கள் அணு விஞ்ஞானி இல்லை என்பது எனக்குத் தெரியும். எல்லாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அணு ஆயுத, ராணுவ ஆதரவாளரான நீங்கள் அணு உலைக்கு எதிராகப் பேசுபவர்கள் மீது அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேறு சொல்லியிருக்கிறீர்கள்.உங்கள் விருப்பப்படி உதயகுமாரன் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயத் தயாராக இருக்கிறது.
//
அப்துல்கலாம் அணுவிஞ்ஞானி இல்லை சரி நீங்கள் என்ன விஞ்ஞானி நீங்கள் எழுதிவிட்டால் அனைவரும் கேட்டுவிடனும் என எதிர்பார்பதுதப்பில்லை அப்படி நீங்க என்னவிதமான விஞ்ஞான ஆராய்ச்சியோடு எழுதி இருக்கீங்க
//அணு உலைகளை ஆதரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களோ நாங்களோ ஒருபோதும் சொல்வதில்லை. ஏனென்றால் நாங்கள் காந்திய வாதிகள். அதுதான் நமக்குள் அடிப்படை வித்தியாசம். நீங்கள் வெளியிட்டிருக்கிற அறிக்கைக் கட்டுரையில் பல முழு உண்மைகளை மறைக்கிறீர்கள். பல அரை உண்மைகளை அள்ளி வீசுகிறீர்கள். ஒவ்வொன்றாகப் பார்த்தால் இடம் போதாது. முடிந்த வரை இங்கே பார்ப்போம்.//
காந்தியவாதிகளின் சமூக முன்னேற்ற எண்ணங்களை உலகம் பார்த்துகொண்டுதான் இருக்கிறது அதில் ஒன்று
நீங்களோ உதயகுமாரோ பாதுகாப்பு காரணங்களை காட்டி கூடங்குளத்தை மூடச்சொல்லும் அதே வேளையில் வளர்ந்து வரும் மின்சார தேவைகளுக்கு மாற்று வழியை முன்வைக்கவில்லை இதுதான் உங்கள் நேர்மையா ஞானி
//செர்னோபில் விபத்தில் 57 பேர் மட்டுமே இறந்ததாகச் சொல்லியிருக்கிறீர்கள். அதைவிட அதிகமாக சாலை விபத்தில் பலர் சாவதாக ஓர் அபத்தமான ஒப்பீடு செய்திருக்கிறீர்கள். சாலைவிபத்து ஏற்பட்டால், விமான, ரயில் விபத்து ஏற்பட்டால், சுற்றிலும் 30 கிலோமீட்டர் சுற்றளவுக்கு மனித நடமாட்டமே அடுத்த பல வருடங்களுக்குக் கூடாது என்ற நிலைமை கிடையாது. ஆனால் அணு விபத்து ஏற்பட்டால், அடுத்த தலைமுறை வரை தொடரும். செர்னோபில் விபத்தினால் ஏற்பட்ட கதிரியக்கப் பாதிப்புகளில் இரண்டாயிரம் பேர் வரை செத்திருக்கிறார்கள் என்பதுதானே முழு உண்மை. அதை ஏன் சொல்லாமல் கேன்சர் கேஸ்கள் என்று //
செர்னோபில் விபத்தில் 57 பேருக்கு மேல் செத்தார்கள் என்பது உங்களின் கற்பனை ஞானி 2000 பேர் என்றோ இன்னும் சிலர் சொல்வதுபோல் 2 லட்சம் பேர் என்றோ சொல்வது அப்பாவிகளான கூடங்குளம் மக்களை குழப்ப மிகவும் உதவும்
//மழுப்புகிறீர்கள்? 1947லிருந்து 2008 வரை 76 அணு உலை விபத்துகள் உலகில் நடந்திருக்கின்றன. (இதில் 56 விபத்துகள் செர்னோபில்லுக்குப் பிறகு நடந்தவை.) அதாவது ஒவ்வோராண்டும் ஒரு பெரிய விபத்து. அதனால் ஏற்பட்ட உயிர், உடமை, வாழ்க்கைச் சேத நஷ்டங்களின் மதிப்பு மட்டும் வருடத்துக்கு சுமார் 332 மில்லியன் டாலர்கள். எம்.ஐ.டி. என்ற உலகப் புகழ் பெற்ற நிறுவனம் (நீங்கள் படித்த குரோம்பேட்டை எம்.ஐ.டி. அல்ல) 2005லிருந்து 2055க்குள் உலகில் நான்கு பெரும் அணு விபத்துகள் நடக்கும் என்று முன்கூட்டியே கணித்திருந்தது. அதில் ஒன்றுதான் 2011ல் நடந்த புகோஷிமா விபத்து.//
ஓகோ இப்போ ஜோசியம் வேறு சொல்ல ஆரம்பித்து விட்டீர்களா ஞானி கணிப்பு மிகவும் பலமானதாக இருக்கே
//விபத்து மட்டுமல்ல. அணு உலைகள் இயங்கும் இடங்களிலெல்லாம் கதிரியக்க ஆபத்து இருக்கத்தான் செய்கிறது. அதை மறுப்பவர் நீங்களும் உங்கள் கும்பலும் மட்டும்தான். அமெரிக்காவின் அணு உலைகள் இயங்கும் 65 இடங்களிலும் ரத்த, மூளைப் புற்று நோய்கள் அதிகரித்திருப்பதை அவர்களுடைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இங்கே கல்பாக்கத்தைச் சுற்றிலும் முறையான ஆய்வை சுதந்திரமான விஞ்ஞானிகள், மருத்துவர்களைக் கொண்டு நடத்த உங்கள் அரசும் அணுசக்தி நிர்வாகமும் ஏன் அனுமதிப்பதில்லை?இந்தியாவில் அணு உலைகளில் விபத்தே நடப்பதில்லை என்று இன்னொரு பொய் சொல்லியிருக்கிறீர்கள். உள்ளே என்ன நடக்கிறது என்பதை வெளியிடாமல் ரகசியமாக அல்லவா அணு சக்தி நிர்வாகம் இதுவரை இருக்கிறது? அதுவேதான் நிர்வாகம், அதுவேதான் கண்காணிக்கும் உயர் அமைப்பு. குற்றவாளியே நீதிபதியாகவும் இருக்கும் வேறு எந்தத் துறையும் இந்தியாவில் இல்லை. ஒரு விபத்து நடந்து அதுபற்றி பத்திரிகைகளில் செய்தி கசிந்து சூழல் ஆர்வலர்கள் குரலெழுப்பிய பின்னர் ஒப்புக்கொள்வதுதான் அணுசக்தித் துறையின் வாடிக்கை. இப்படி கல்பாக்கத்தில் விபத்துகள் நடந்து ஆறு மாதம் கழித்து அவர்கள் ஒப்புக் கொண்ட சில விபத்துகள் இதோ: 1987- எரி பொருள் நிரப்பும்போது ரியாக்டரின் கோர் பகுதி சேதமடைந்தது. 1991- கன நீரின் கதிரியக்கத்தால் ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர். 1999- 42 ஊழியர்களுக்குக் கடும் கதிர்வீச்சு ஏற்பட்டது. 2002 - கதிரியக்கம் உள்ள 100 கிலோ சோடியம் காற்று வெளிச்சூழலில் கலந்தது. 2003 - கடும் கதிர்வீச்சுக்கு 6 ஊழியர்கள் உள்ளானார்கள். ராஜஸ்தான் உலையில் 1991ல் கதிரியக்கம் உள்ள கனநீரைத் தவறாக ஒரு காண்ட்ராக்டர் பெயிண்ட் அடிக்கக் கலந்தார். அதிலேயே பெயிண்டர்கள் முகம் கழுவினார்கள். கர்நாடக கைகா உலையில் 2009ல் கதிரியக்கம் உள்ள டிரிட்டியம் கலந்த நீரைக் குடித்த 55 ஊழியர்கள் பாதிக்கப்பட்டார்கள். கைகா ரியாக்டர் கட்டப்பட்டபோது 1994ல், கதிரியக்கம் வெளியேறாமல் தடுக்கும் வட்ட வடிவ டோம் உடைந்து நொறுங்கி 120 டன் கான்க்ரீட் கீழே விழுந்தது.இந்த விபத்து அணு உலை இயங்கத்தொடங்கிய பிறகு நடந்திருந்தால், குட்டி செர்னோபில்தான்.
//
கதிரியக்க ஆபத்து இல்லாமல் மனித இனம் ஒரு வினாடி கூட கடக்க முடியாது என்பது உங்களுக்கு தெரியுமா ஞானி அய்யா
//அணுசக்தித் துறையின் பொறியாளர்களுக்கும் கட்டட காண்ட்ராக்டர்களுக்கும் இருக்கும் ‘நெருக்கமான உறவினால்’ டிஸைன்களின் தரத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டதால் இது ஏற்பட்டது என்று (நிஜமான) அணு விஞ்ஞானியும் அணுசக்தி ஒழுங்கமைப்பு வாரியத்தின் முன்னாள் தலைவருமான ஏ.கோபாலகிருஷ்ணன் சொல்லியிருக்கிறார். அதாவது ஊழல் நடந்திருக்கிறது. இதே போன்ற ஊழல் இந்த வருடம் ஜூலையில் ரஷ்யாவில் நடந்தது. லெனின்கிராடில் அணு உலை கட்டுமானம் நடக்கும்போது தடுப்புக் கவச சுவர் கான்க்ரீட் நொறுங்கி விழுந்தது. இந்த உலை கூடங்குளத்தில் ரஷ்யர்கள் அமைக்கும் உலையின் அடுத்த மாடல். ஊழல் மிகுந்த இந்தியாவில் எப்படி அணு உலை கட்டுமானம் பாதுகாப்பானது என்று நம்பமுடியும்?இந்தியாவில் போதுமான யுரேனியம் இருக்கிறது என்று சொல்லும் நீங்கள் அது என்னவோ இலவம்பஞ்சு போல ஆபத்தில்லாமல் எட்டிப் பறிக்கும் பொருள் போல பேசுகிறீர்கள். யுரேனிய சுரங்க விபத்து, ஆபத்து பற்றி எதையும் உங்கள் கட்டுரையில் சொல்லவில்லை. இந்தியாவில் ஜார்கண்ட் மாநிலத்தில் ஜாதுகோடா யுரேனிய சுரங்கப்பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களில், மலட்டுத்தன்மை, புற்று நோய், பிறவி ஊனம் எல்லாம் தேசிய சராசரியை விட அதிகமாகியிருப்பதை நோபல் பரிசு பெற்ற உலக அமைப்பான அணுப்போருக்கு எதிரான மருத்துவர் அமைப்பின் இந்தியக் கிளையின் ஆய்வு தெரிவித்திருக்கிறது.//
ருஸ்யாவின் விபத்துக்கு காரணம் மனித தவறு அதை விடுத்து அந்த கட்டுமானத்தில் காண்டிராக் இருந்தது என சொல்வது முழு பொய் ஏனெனில் அப்போது அந்த தொழில் எல்லாம் காண்டிராக்ட் இல்லை
ஞானிக்கு பதில்
Posted by தியாகு on 8:22 PM


http://en.wikipedia.org/wiki/Chernobyl_disaster
http://www.greenpeace.org/international/en/news/features/chernobyl-deaths-180406/
http://www.greenpeace.org/international/Global/international/planet-2/report/2006/4/chernobylhealthreport.pdf
http://www.guardian.co.uk/environment/2010/jan/10/chernobyl-nuclear-deaths-cancers-dispute
http://www.guardian.co.uk/environment/2006/mar/25/energy.ukraine
அணு உலையால் ஆபத்தே இல்லை என்று நீங்கள் சொல்லும் பொழுது, 1990 கலீல் இருந்து கூடங்குளம் அணு உலை எதிர்த்து வரும் ஞானி கூறுவது ஜோசியம் என்றால்... நீங்கள் சொல்வதும் ஜோசியம் தான்...
இந்திய முதலாளிகளுக்கும், ஏகாதிபத்திய அரசுக்கும் வக்காலத்து வாங்கி உழைக்கும் வர்க்கத்தின் எதிரியாய் திரியும் நீங்கள் குட்டி பூர்ஷ்வா இல்லையா?
சூரிய ஒளி சக்தி தான் மாற்று என்று அனைவரும் கூற ஆரம்பித்து விட்டார்கள்... விழித்துக் கொள்ளுங்கள்.. ஏகாதிபத்தியம் உங்களை ஏமாற்றி உங்கள் கொள்கைகளை புதைக்கும் முன், உண்மையான வர்க்கப் போராளியாய்... உலகத் தொழிலாளர்களே ஒன்று படுங்கள் என்று கூறுவதுடன் நிற்காமல் ஒன்று பட தோள் கொடுங்கள்...
தோழருக்கு நமது பழைய விவாதத்தின் படி தொடர விரும்புகிறேன்
நீங்கள் அனுப்பிய மடலை திரும்ப அனுப்ப இயலுமா
//நீங்கள் அனுப்பிய மடலை திரும்ப அனுப்ப இயலுமா//
எதுக்கு தோழர்?
உங்களிடம் நான் பதிலை எதிர்பார்க்கவில்லை... உங்கள் கட்டுரைகளை படிக்கும் உள்ளங்கள் குழம்பக் கூடாது என்று தான் மாற்றுக் கருத்தை பதிவு செய்கிறேன்.. நன்றி
/இந்திய முதலாளிகளுக்கும், ஏகாதிபத்திய அரசுக்கும் வக்காலத்து வாங்கி உழைக்கும் வர்க்கத்தின் எதிரியாய் திரியும் நீங்கள் குட்டி பூர்ஷ்வா இல்லையா?//
அனு உலைகளை எதிர்ப்பதன் மூலம் இந்திய தொழிலாளி வர்க்கத்துக்கு எப்படி நீங்கள் வக்காலத்து வாங்குகிறீர்கள் என தெரியவில்லை .
அனு உலை அந்த இடத்தில் அமைவது 1988ல் ராஜிவ் காந்தியும் கோர்பசேவும் போட்ட திட்டம்
அபோதிருந்து மக்கள் இதை எதிர்க்கவில்லை என்பதை சுட்டி காட்ட விரும்புகிறேன் .
இப்போது மட்டும் ஏன் இதை எதிர்க்கிறார்கள் இதன் பின்னனி என்னவெனவும் ஆராயவேண்டும்
அணு உலை என்றாலே வெடித்து விடும் என்கிறா பீதியை மக்களிடம் கிளப்பி போராட தூண்டுபவர்கள் அறிவு குள்ளர்கள் மற்றும் சுயநலவாதிகள்
ஒரு கணக்கு தெரியுமா உலகம் முழுவதும் 440 அணு உலைகள் உள்ளன அமெரிக்காவில் மூன்றில் ஒரு பங்கு அணு உலை உள்ளது
சரி சிறிய விபத்துகளை தவிர்த்துவிட்டு பார்த்தால் மொத்தம் மூன்று விபத்துகள் மட்டுமே இதுவரை ஐம்பது ஆண்டுகளில் நடந்துள்ளது .
1.அமெரிக்காவின் பென்சில் வேனியாவுக்கு அருகில் இருக்கும் மூன்று மைல் தீவு 1979
2.ருஸ்யாவில் செர்னோபில் 1986
3.ஜப்பானில் உள்ள புகுசிமா 2011 மார்ச்
முதல் விபத்து ஆரம்ப காலகட்டத்தில் நடந்தது இரண்டாம் விபத்தில் இறந்தவர்கள் 57 பேர் மூன்றாம் விபத்தில் இறந்தவர்கள் 10 பேருக்கும் குறைவு
சரி நீர் மின்நிலைய விபத்தில்லாததா அனல் மின்சாரம் விபத்தில்லாததா என்றால் மிகப்பெரிய விபத்து நிர் மின்சாரம் எடுக்கும் போது ஏற்பட்டது அதுதான் சீனாவின் 1975 நடந்த விபத்து 1 முக்கால் லட்சம் பேர் இறந்துள்ளார்கள்
//அனு உலைகளை எதிர்ப்பதன் மூலம் இந்திய தொழிலாளி வர்க்கத்துக்கு எப்படி நீங்கள் வக்காலத்து வாங்குகிறீர்கள் என தெரியவில்லை .//
எப்படி என்றால் அங்கு போராடி கொண்டிருக்கும் மக்கள் பாட்டாளி வர்க்க, தொழிலாளி வர்க்க மக்கள்.. ஓ உங்களுக்கு தொழிற்சாலையில் பனி புரிபவன் மட்டும் தான் தொழிலாளியை தெரிவானா?
//அபோதிருந்து மக்கள் இதை எதிர்க்கவில்லை என்பதை சுட்டி காட்ட விரும்புகிறேன் .//
எல்லா தொழிலாளர்கள் போராட்டமும் ஒரே நாளில் கூட்டம் கூடி விடுவதில்லை... ஒரு நாளைக்கு எட்டு மணி நேர வேலைக்காக போராடிய மக்கள் எத்தனை ஆண்டுகள் போராடினார்கள் என்பது தெரிந்திருக்கும்... இந்த திட்டம் கை எழுத்தான போதிலிருந்தே இந்த போராட்டம் தொடங்கி விட்டது... என்ன ஒன்று ரெண்டு நபர்கள் போராடிக் கொண்டிருந்தார்கள்... இப்பொழுது அந்த பகுதி மக்கள் அனைவரும் போராடுகிறார்கள்..
இன்னும் எத்தனை தடவை கேட்டாலும் இது தான் பதில்... திடீரென்று பரவ புரட்சி ஒன்றும் பெட்ரோல் இல்லை...
//அணு உலை என்றாலே வெடித்து விடும் //
என்றாலே வெடித்து விடும் என்று அல்ல, வெடித்தால் புல் பூண்டு கூட இருக்காது என்று தான் கூறப் படுகிறது... உடனே அனுமானிக்க நீங்கள் ஜோசியரா என்று திருப்பி கேட்டால்... வெடிக்காது என்று அனுமானிக்க நீங்கள் ஜோசியரா என்று நான் கேட்க்க வேண்டி இருக்கும்
செர்னோபில்லில் இறந்தது அதிகாரப் பூர்வமாக நீங்கள் சொல்லும் தொகை என்று வைத்துக் கொள்வோம்... எங்கள் கேள்வி என்ன என்றால் வேடித்தப் பிறகு அங்கு பாதிப்புடன் பிறந்த குழந்தைகள் எத்தனை பேர்? வெடித்த பிறகு பரவிய கதிர்வீச்சு எவ்வளவு தூரம் பயணித்தது?
more than 85,000 childrens were affected in the aftermath of chernobyl incident...
//என்றாலே வெடித்து விடும் என்று அல்ல, வெடித்தால் புல் பூண்டு கூட இருக்காது என்று தான் கூறப் படுகிறது... உடனே அனுமானிக்க நீங்கள் ஜோசியரா என்று திருப்பி கேட்டால்... வெடிக்காது என்று அனுமானிக்க நீங்கள் ஜோசியரா என்று நான் கேட்க்க வேண்டி இருக்கும்
செர்னோபில்லில் இறந்தது அதிகாரப் பூர்வமாக நீங்கள் சொல்லும் தொகை என்று வைத்துக் கொள்வோம்... எங்கள் கேள்வி என்ன என்றால் வேடித்தப் பிறகு அங்கு பாதிப்புடன் பிறந்த குழந்தைகள் எத்தனை பேர்? வெடித்த பிறகு பரவிய கதிர்வீச்சு எவ்வளவு தூரம் பயணித்தது//
டவெடிக்காதுன்னா வெடிக்கும்னு சொல்றீங்க வெடிச்சிருக்கிறது என சொல்றீங்க - வெடிக்க இருக்கும் வாய்ப்புகளை பட்டியலிடுங்களேன் கொஞ்சம் சரியாக இருக்கும் இல்லையேல் இது வளைய வளைய வருவது ஆகும்
தியாகு சார், மீண்டும் முதலில் இருந்தா... முடியல... நீங்க என்ன பண்ணுங்க? போய் கூகிள் வலைத்தளம் அப்படின்னு ஒரு இளிச்ச வாயன் இருப்பான்... உங்களை மாதிரி மூலதனம் வட்டி, வட்டியோட குட்டி பத்தி எல்லாம் யோசிக்காம... ஓசியில சேவை செய்வான்... அவன்கிட்ட போய் அணு உலை எதிர்ப்பு அப்படின்னு தட்டுங்க... தட்டி என்ன என்ன கட்டுரை இருக்கோ எல்லாத்தையும் படிச்சிட்டு வாங்க... நாம் பேசுவோம்...
Well put...Suryaji...
தோழர் தியாகு...
அணுசக்தி மூலம்...ஐம்பது வருடங்களாய் கோடிக்கணக்கில்(வருடத்துக்கு 70 பில்லியன்) ஏப்பம் விட்டு நாம் சாதித்தது...வெறும் 2.8 சதவீதம் மின்சாரம்...
வெட்கக்கேடு...இப்படிப்பட்ட ஒன்று தான் நம் பிரகாசமான எதிர்காலத்துக்கு ஒரே வழின்னு ஒருத்தர் சொல்றார்...கூடவே கும்மி அடிக்கிறீர்கள்...
அந்த பூனை கண்ணை மூடி விட்டு உலகம் இருட்டு என்கிறது...நம்ப எல்லாரும் கேனையர்களா?