Vladimir Lenin

1.A revolution is impossible without a revolutionary situation; furthermore, not every revolutionary situation leads to revolution.
Vladimir Lenin

2.
Any cook should be able to run the country.
Vladimir Lenin

3.
Crime is a product of social excess.
Vladimir Lenin

பிரியாணி மேட்டரும் தோழரின் கொந்தளிப்பும்




தல என அன்போடும் அழைக்கப்படும் அஜித் பிரியாணி போட்டதும் அதில் லெக் பீசுடன் போட்டதும் சமூக பொருளாதார விஞ்ஞான அளவு கோளில் வைத்து அளந்து பார்க்கும் போது மாபெரும் தவறான ஒரு செயலாக கருதப்படுகிறது.

இன்றைக்கு தமிழனும் அதற்கு மேலாக தொழிலாளி வர்கமும் தலைநிமிர முடியாதமைக்கு காரணம் லெக்பீசுடன் கூடிய பிரியாணிகளே என்றால் அது மிகையாகாது

கிராமங்களில் கறி விருந்து போட்டு ஓட்டு வாங்குவதும் தல லெக் பீஸ் பிரியாணி போடுவதும் ஒன்றுதான் அதான் சுரண்டல் இதன் மர்மம் புரியாமல் பெப்சி சங்கம் இருப்பது
தொழிலாளி வர்க்கம் இன்னும் நிறைய பாடம் படிக்கவேண்டும் என்பதை காட்டுகிறது

இன்னும் இந்த விசயத்தில் ஆராய்ந்து பேசுவோமானால் என்ன இருந்தாலும் அஜித் ஒரு தமிழன் என்பதால் ஒரு வகையில் அந்த பிரியாணியை ஏற்று கொண்டாலும் பத்ரி புகழுவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது

ஏனெனில் இவர்கள் ஒருவிசயத்தை புகழ்ந்தால் அதற்குள் ஆயிரம் காரணங்கள் இருக்கும் என்பதை அறிய மாட்டீர்கள்

பிரியாணிக்குள் ஒழிந்திருக்கும் காலைப்போல அல்ல வர்க்க உணர்வு அது நீங்கள் பிரியாணியை மறுக்கும் போது கூடவே லெக் பீஸ் இருந்தாலும் மறுக்கும் போதே உங்களிடம் இருந்து வெடித்து கிளம்பும் .

இன்று சினிமா தொழிலாளர்கள் சிக்கி சீரழியும் விசயங்களை ஆராய்ந்தால் அது பார்பன , முதலாளித்துவ சமூகத்தால் நடப்பதே அது போடும் லெக் பீஸ் பிரியாணியை சுவைப்பதால் ஏற்படுவதே

இந்த பார்ப்பன முதலாளிகள் எங்காவது லெக் பீசுடன் கூடிய விருந்துக்கு சென்று சாப்பிடுவார்களா மேலும் பிரியாணியை ஆராய்ந்தோமானால் அது அரபு நாடுகளில் இருந்து வந்த உணவு அது தமிழனுக்கோ திராவிடனுக்கோ ஏற்ற உணவல்ல

இந்தவகை உணவுகள் முதலில் உங்கள் ஜீரண உருப்பை பாதிக்கும் பிறகு உங்களை திடீரென எந்திருத்து போராட விடாமல் செய்துவிடும் கவனம் தேவை

அடுத்து மேலும் எப்போதுமே பிரியாணி திண்ணும் இந்த வலைபதிவர்கள் லெக் பீசை புகழ்ந்து ரீ சேர் செய்வதும்
அதிகம் கவனத்தில் பதிக்க வேண்டியதாகிறது

அதாவது இந்த ரீசேர் செய்யும் வலை பதிவர்களை பற்றி நாம் பேசாமல் விடமுடியாது வலை உலகமே பிரியாணிக்கு அடிமை என்றால் மிகையாகாது என்ன பிரியாணி என்றால் சினிமா பிரியாணி .........

நம்மை போல நமீதா பயணத்தை விமர்சனத்தோட பார்க்காமல் நமீதாவை புகழுபவர்கள் இந்த வலைபதிவர்கள் ஆகவே அவர்களையும் விமர்சிக்கனும்

இதன் மூலம் நாம் ஒரு நூலில் அனைத்து லெக் பீசுகளையும் கோர்த்து ஒரு முற்போக்கு பிரியாணியை படைத்து விட்டோம் ஆகவே தோழர்களே

இனிமேல் எங்கு பிரியாணி சாப்பிட்டாலும் அதன் வர்க்க உள்ளடக்கத்தை மன்னிக்கவும் லெக்பீசை பற்றி ஆராயாமல் சாப்பிடாதீர்கள்





--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================

7 Responses so far.

  1. அருமையாக பதிவு செய்து உள்ளீர்கள்... பல பேர் புரட்சிகரமான படங்களை போட்டு கொண்டு வர்க்க உணர்ச்சிகளை வியாபாரமாக்கிக் கொள்கிறார்கள்... அவர்களுக்கு சரியான சூடு

  2. நன்றி தோழர்

  3. தோழர் ஜீவா ,

    இந்த பதிவு ஒரு நையாண்டி பதிவு இந்த மேட்டர பத்தி எனது சொந்த கருத்து இதுதான்

    ----------உண்மையில் சினிமா தொழிலாளர்களின் பிரச்சனையை பேசும் போது அவர்களை எலும்பு துண்டுக்கு அலைபவர்களை போல சித்தரிப்பது சரியல்ல
    அவர்களின் கோரிக்கைகள் அவர்களது போராட்ட வரலாறு ஆகியவை குறித்த புரிதலும் அந்த போராட்ட பாதையில் அவர்கள் அடைந்திருக்கும் இடம் இன்னும் அடைய வேண்டியதை குறித்த பார்வை பற்றி பேசவும் வேண்டும் அவர்களே சினிமா பிரபலங்களை நம்பாமல் அவர்களை சாராமல் செய்துவரும் போது
    அவர்கள் என்னமோ நட்சத்திரங்களை நம்பி போராட்டம் செய்வதாகவோ அல்லது இந்த நட்சத்திரங்கள் ஆதரவு தெரிவிக்காததால் அவர்கள் போராட வில்லை என்றோ சொல்லி அவர்களை கொச்சை படுத்த கூடாது


    வினவுக்கு எந்த போராட்டம் எழுந்தாலும் அதன் மீது விமர்சனமும்
    போராட்டம் நடக்காத வேளைகளில் தனிமனிதர்கள் போராடவில்லை என்கிற அங்கலாய்ப்பும் நிரம்ப இருக்கும் என்னமோ இவர்கள் போராட தயாராக இருப்பது போன்றா பிலிம் இருக்கும் எழுத்தில் தப்பி தவறி ஒரு போராட்டம் எழுந்து விட்டால்

    போராடுபவன் நடுத்தரவர்க்கம் -அவன் நோக்கம் அது இதுன்னு அள்ளி விட்டு அந்த போராட்டத்தையும் ஆதரிப்பதில்லை

    இது ஒருமாதிரி சுய சொரிதல் மனநிலை

  4. Adavan says:

    appadiya ? ma.ka.eka. have done and doing lot of struggle against social injustice. eg : ambattur rally for ealan tamils, powerhouse stage propaganda for cinema labours etc. but you know only speak about marxism.

    marx said his job is not to describe world but to change it.

    first read marxism tham marxists should do their work in fied as well as enrich their knowlege not like u only speaking writing luxurly Adavan

  5. மக இகவின் போராட்டங்களை மெச்சுவது இருக்கட்டும்

    பிரியாணியை சாப்பிட்டு வர்க்க உணர்வு அற்று போய்விடுவார்கள் சினிமா தொழிலாளர்கள் என சொல்வது ஒரு கம்யூனிஸ்டு சொல்வதா என மட்டும் விளக்கவும்

  6. //first read marxism tham marxists should do their work in fied as well as enrich their knowlege not like u only speaking writing luxurly Adavan //

    தத்துவமும் நடைமுறையும்தான் மார்க்சியம் சரியே ஆனால் தத்துவம் சரியாக இல்லாமல் நடைமுறை எப்படி சரியாகும் மாதவன்

  7. பிரபாகரன் says:

    முரண்பாடுகளின் மூட்டையாக ம.க.இ.க
    ம .க.இ.க விற்கு ஒரு கேள்வி: நவீன பார்ப்பனர்களாக ஆர்.ஆர்.எஸ் இன் மறுபதிப்பாக அனைத்து கூட்டங்களுக்கும் தடியுடன் வளம் வருவது ஏன் ?
    2 .தமிழ்தேசியவாதிகளை வசை பாடும் நீங்கள் ராஜீவ் காந்தி கொலைக்கு காரணமான சாந்தன் , முருகன், விடுதலையை ஆதரிப்பது ஏன்?
    3 . பார்ப்பனர்களை வசைபாடும் நீங்கள் மருதையனை தலைவராக கொண்டு செயல்படுவது ஏன் ?