Vladimir Lenin

1.A revolution is impossible without a revolutionary situation; furthermore, not every revolutionary situation leads to revolution.
Vladimir Lenin

2.
Any cook should be able to run the country.
Vladimir Lenin

3.
Crime is a product of social excess.
Vladimir Lenin

கூடங்குளம் எதிர்ப்பு அதனளவில் என்ன குறைபாடு உடையது

கூடங்குளம் எதிர்ப்பு அதனளவில் என்ன குறைபாடு உடையது


சிலவிசயங்களை சிலர் எதிர்க்கிறார்கள் என்றால் அவர்களது அரசியல்காரணமாக இருக்கலாம் ஆனால் கம்யூனிஸ்டுகள் எதிர்கிறார்கள் எனில் அதே காரணம் இருப்பின் அதை நாம் அம்பலப்படுத்தாமல் விட கூடாது

கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடு என்கிற கோசம் விண்ணை பிளக்கையில்

சரி இந்தியாவின் மொத்த மின்சார தேவை எவ்வளவு என தெரியுமா என்கிற கேள்வியை நாம் வைக்கவேண்டியதாக இருக்கிறது

1.இந்தியாவின் தற்போதைய உள்நாட்டு உற்பத்தி 90,000 மெகா வாட் மின்சாரம்
2.பற்றாகுறை 11.5 சதவீதம்

(இந்தியா சுதந்திரமடையும்போது 1300 மெகாவாட் மின்சாரமே உற்பத்தி செய்தது.)

இதை எப்படி ஈடு செய்ய போகிறோம் சரி அணு மின் நிலையம் வேண்டாம் வேறு என்ன மாற்று யோசனை இருக்கு உங்க கிட்ட என்றால் நம்மை கடித்து குதறி விடுவார்கள் .

அணுமின்நிலையத்தை மூட சொல்வது மார்க்சியபடி சரியானதா?

எல்லாவற்றையும் இயக்கவியல் பொருள்முதல்வாத சிந்தனை படி ஆராயும் கம்யூனிஸ்டுகள் இந்த விசயத்தை
ஏன் கருத்தியல் ரீதியாக பார்க்கிறார்கள் எனபார்க்கனும்

வெடிச்சிட்டா என்னாகும்

அணுமின்சாரம் தயாரிக்க பயன்படும் அறிவியல் அதிலிருந்து பாதுகாப்பளிக்க பயன்படாதா?

ஏன் முடியாது என கேட்டால்

இல்லை நான் என்ன சொல்றேன்னான்னு இழுப்பார்கள்

அணுமின்சார உற்பத்தி அதன் பாதுகாப்பில் பலத்தை அறிவியல் முறைபடி அதிகரித்து மக்களுக்கு பாதுகாப்பளிக்க முடியும் அதை செய்ய சொல்லி கோருபவனே உண்மையான கம்யூனிஸ்டு


இந்தியாவின் பொருளாதாரம்:

-----------------

இந்தியா ஒரு வளரும் பொருளாதார நாடு என்பதை நாம் கணக்கில் எடுத்து கொள்ளவேண்டும் இந்த நாட்டின் உற்பத்தி சக்திகள் வளர்கிறது போக்கு வரத்து மட்டுமின்றி அனைத்து துறைகளும் மின்சாரத்தை நாடி உள்ளது இந்நிலையில் மொத்த மின் தேவையை இந்த நேரத்தில் வழங்குவதன் மூலம் மட்டுமே இந்தியாவை வளர்ச்சி பாதையை நோக்கி செலுத்த இயலும்

இதற்கு எதிராக செல்வது எல்லாமே இந்தியாவின் வளர்ச்சிக்கு எதிரானதாகவும் முடிவாக மக்களுக்கு விரோதமானதாகவும் அமையும்

வளரும் பொருளாதாரத்தில் பெட்ரோல்:
---------------------------
நாம் அதிகளவில் உபயோகிக்கிறோம் ஆனால் இந்தியாவிலோ பெட்ரோல் கிடையாது அப்போ பெட்ரோலை இறக்குமதி செய்தாக வேண்டும் மொத்த தேவையில் கச்சா பெட்ரோல் மட்டும் 1980 களில் 30 சதவீதமாக இருந்தது 2010 அது 90 சதவீதமாகிவிட்டது

இதில் பெட்ரோல் வாங்க டாலரை மட்டுமே பயனபடுத்த வேண்டும் என்பதால் முதலில் டாலரை வாங்கி பெட்ரோல் வாங்குகிறோம்

1.ஒரு பக்கம் எரிபொருள் வளமில்லாத அல்லது குறைந்தளவு கொண்ட இந்தியா

2.இன்னொரு பக்கம் நாளுக்கு நாள் எரிபொருள் தேவை அதிகரிக்கும் இந்தியா என சிக்கலில் இருக்கிறோம்


-----

இங்கிருந்த தவறான தகவல் நீக்கப்பட்டது

சரியான தகவல்:

பெட்ரோல் என்கிற மூலப்பொருள் அதன் கிடைக்கும் தன்மை நாளுக்கு நாள் குறைந்து வரும் சூழலில் மாற்று சக்தியாக அணுமின்சாரம் மட்டுமே கண்முன் தெரிகிறது


---------------------------

வளர்ந்த நாடுகள் அணு உலையை மூடுவது ஏன்:

உலகின் முக்கிய உற்பத்தி கேந்திரங்களாக முன்பு ஐரோப்பிய மேலை நாடுகள் இருந்திருக்கலாம் ஆனால் அந்த நாடுகளில் இருந்து தொழிலாளது இந்தியாவுக்கும் சீனாவுக்கும் மாறிவிட்டது என்பதை பார்க்கவேண்டும்
எனவே உற்பத்தியே செய்யாமல் நுகர்ந்து வரும் அந்த நாடுகளுக்கு அளவுக்கதிகமான மின்சாரம் தேவை இல்லை எனவே அவை ஈணுலைகளை மூடுவதற்கும் வளர்ந்துவரும் நமது நாடு ஈணுலைகளை மூடுவதற்கும் பாரிய வேறுபாடுகள் உள்ளன

பிரான்ஸ் மூட போவதாக அறிவித்துள்ளதை பேசிவருபவர்கள் கவனிக்கவேண்டும்

பாதுகாப்பு காரணங்களுக்காக வேண்டாம் என சொல்பவர்கள் :

உலகளாவிய அணுமின் நிலையங்களுக்கான பாதுகாப்பு வளையங்களை பற்றி சொல்லும் iAEA வின் யோசனைகளில் இருக்கும் ஓட்டைகளை பற்றி விரிவாக பேச தயாரா ? (http://www.iaea.org/)

இல்லையே

அது அப்படி நடந்து விட்டால் வெடித்து விட்டால் என பேசுபவர்கள் ஜோசியகாரர்களின் மனநிலையில் இருந்தே பேசுகிறார்கள் தவிர ஒரு அறிவியல் பார்வையும் கிடையாது

இந்தியாவில் தற்போது இருக்கும் அணுமின்சார உற்பத்தி மொத்தத்தில் 2.2 சதவீதமாக இருக்கிறது இதை உயர்த்தவேண்டும் என நினைக்கும் இந்த முதலாளித்துவ அமைப்புக்கு இருக்கும் லாபநோக்க அறிவியல் ஞானம் கூட நமக்கில்லை என்றால் என்னாகும்.

1.எல்லா போராட்டங்களையும் இரும்புகரம் கொண்டு ஒடுக்கும் ஜெயா அரசு இந்த போராட்டத்தை கண்டும் காணாமல் இருப்பது அதன் சுயலாபத்துக்கே
முக்கியமாக திமுகவை காங்கிரஸ் கழட்டி விடனும் அதை பணிய வைக்க இதை ஜெயா ஒரு கருவியாக கையாள்கிறார் மேலும் அவருக்கு தனிபட்ட முறையில் இருக்கிற கேஸ்களில் இருந்து வெளிவரனும் என்ற
காரணமும் இருக்கிறது

2.கூடங்குளம் எதிர்ப்பு குழுவே ஒரு கட்டத்தில் விஞ்ஞானிகளை வழிமறிக்க போலீசிடம் அனுமதி கோரும் சடங்கும் நடப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது

3.1980 துவங்கபட்ட திட்டத்துக்கு 2010ல் எதிர்ப்பு என்பது திடீரென தூங்கி எந்திரிச்சு எதிர்ப்பு காட்டுவது போல இருக்கிறது

4.சுற்று சூழல் ஆர்வலர்களின் காசினால் நடக்கும் இந்த போராட்டம் விரைவில் முடிவுக்கு வரும்

5.அரசிடம் மைய்யமாக வைக்கவேண்டிய கோரிக்கை
20 கிலோமீட்டருக்கு அப்புறப்படுத்தும் மக்களுக்கு மாற்று இடம் தருவது பற்றிய உறுதிபாடு மற்றும்
அணு உலைகளுக்கான பாதுக்காப்பு குறித்த தனிஒரு
அமைப்பின் அறிக்கை இவற்றை கேட்டு போராடுவதே சிறந்தது

6.குறுகிய அரசியல் லாபங்களுக்காக நீண்ட கால பயன்களை துரப்பது தற்கொலைக்கு ஒப்பாகும்






--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================

21 Responses so far.

  1. நாம் மின் உற்பத்தி செய்ய பெட்ரோலை உபயோகிக்கிறோம் ஆனால் இந்தியாவிலோ பெட்ரோல் கிடையாது அப்போ பெட்ரோலை இறக்குமதி செய்தாக வேண்டும் மொத்த தேவையில் கச்சா பெட்ரோல் மட்டும் 1980 களில் 30 சதவீதமாக இருந்தது 2010 அது 90 சதவீதமாகிவிட்டது

    இதில் பெட்ரோல் வாங்க டாலரை மட்டுமே பயனபடுத்த வேண்டும் என்பதால் முதலில் டாலரை வாங்கி பெட்ரோல் வாங்குகிறோம் எனவே இந்தியாவுக்கு தேவையான மின் உற்பத்தி என்பது மிகுந்த செலவு பிடிக்கும் ஒரு விசயமாகிவிட்டது

    1.ஒரு பக்கம் எரிபொருள் வளமில்லாத அல்லது குறைந்தளவு கொண்ட இந்தியா

    2.இன்னொரு பக்கம் நாளுக்கு நாள் எரிபொருள் தேவை அதிகரிக்கும் இந்தியா என சிக்கலில் இருக்கிறோம்


    ஆகையால் வளரும் பொருளாதாரத்தில் பெட்ரோலை கொண்டு மின்சாரம் தயாரிப்பது இனிமேல் சாத்தியமற்றதாகவிடும் ஒன்று விலைஉயர்வின் அடிப்படையில்

    மேலும் பூமிக்கடியில் இருக்கும் பெட்ரோல் 200 வருடத்துக்குத்தான் வரும் அதுக்கு பிற்பாடு என்ன செய்வீர்கள்

    பின்னால் வருபவனை பூதம் பிடிக்கட்டும் என்பீர்களா
    // சாணவாயு, சூரிய வெளிச்சம், காற்றாலை, ஆற்றிலிருந்து மின்சாரம், கடலிருந்து மின்சாரம், வீண் கழிவுகளிலிருந்து மின்சாரம் // எல்லாம் சேர்த்தால் 1.5 சதவீதம் தான் வருகிறது

    மிச்சம் இருக்கிற 98.5 சதவீதம் பெட்ரோல் உபயோகித்து மின்சாரம் தயாரிப்பதே//

    தியாகு,

    என்ன இது ம்ம் என்ன இதுனு கேட்கிறேன் அய்யா? , மண்டபத்தில யாராவது எழுதி தந்த கட்டுரையா? அதுல என்ன எழுதி இருக்குனு கூடப்படிக்காம போட்டுடிங்களா?

    98.5 சதவீதம் பெட்ரோல் ல இருந்து மின்சாரம் தயாரிக்கிறாங்களா இந்தியாவில அய்யோ அய்யோ! அப்போ ஆளுக்கு ஒரு ஜெனரேட்டர் வச்சு இருக்காங்களா? இதுல அணு உலைப்பத்தி நீங்க பேசுரத கேட்கலைனா கம்யூனிஸ்ட் இல்லையா? முடியலை அவ்வ்வ்!!

    கொஞ்சம் இணையத்தீல நல்லா தேடிப்பாருங்க, இல்லைனா என்கிட்டே சொன்னா நானே தேடித்தறேன், வேணும்னா கட்டுரையா எழுதிக்கூட தறேன், ஆனால் இனிமே இப்படிலாம் காமெடிப் பண்ணக்கூடாது சொல்லிட்டேன் :-))

  2. This comment has been removed by the author.
  3. நல்ல நகைச்சுவை பதிவு... நீங்கள் வள்ளுவனை கடைசியில் துணைக்கு அழைத்திருப்பதால்
    கற்க கசடற கற்பவை கற்ற பின்
    நிற்க அதற்க்கு தக.

    அணு விஞ்ஞானிகளே மிரண்டு போயிருக்காங்க தோழர்.
    கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் இருந்து வெளியேறும் கதிர் வீச்சால் புற்று நோயால் பதிக்கப் பட்டுள்ளனர் சாதாரண மக்கள். அவர்களுக்கு புற்று நோய் தான் வந்திருக்கிறது என்று தெரிந்து கொள்ளும் அளவுக்கு கூட விழிப்புணர்வு இல்லை..
    ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உரானிய கழிவில் இருந்து வெளியேறும் ராடான் என்னும் கதிர்வீச்சு உள்ள வாயுவால் ஆண்டுக்கு சராசரியாக அமெரிக்காவில் மட்டும் இருபத்தி ஓராயிரம் மக்கள் இறந்து போகின்றனர்..

    அணு மின்சாரம் தாயாரிப்பின் பின் உள்ள திரை மறைவு வேலை என்ன என்று பார்த்தால் அது அணு ஆயுதங்கள் தயாரிக்கவே...

    அணு ஆயுதங்கள் தயாரிக்க மார்க்சியம் சரி என்று சொல்கிறது என்று எங்கும் நான் படிக்கவில்லை..
    நீங்கள் படித்திருந்தால் சொல்லுங்கள், பார்க்கிறேன்

  4. //அணு ஆயுதங்கள் தயாரிக்க மார்க்சியம் சரி என்று சொல்கிறது என்று எங்கும் நான் படிக்கவில்லை..
    நீங்கள் படித்திருந்தால் சொல்லுங்கள், பார்க்கிறேன் //

    அணு பிள்வால் அணு ஆயுதமும் தயாரிக்கலாம் அணுகுண்டும் தயாரிக்கலாம் ஆக்க சக்தியும் செய்யலாம்

    ஏன் அணுகுண்டு மட்டும் செய்ய முடியும்னு நினைக்கிறீங்க

  5. //8.5 சதவீதம் பெட்ரோல் ல இருந்து மின்சாரம் தயாரிக்கிறாங்களா இந்தியாவில அய்யோ அய்யோ! அப்போ ஆளுக்கு ஒரு ஜெனரேட்டர் வச்சு இருக்காங்களா? இதுல அணு உலைப்பத்தி நீங்க பேசுரத கேட்கலைனா கம்யூனிஸ்ட் இல்லையா? முடியலை அவ்வ்வ்!!//

    வவ்வால் இந்த பிழையை சுட்டிகாட்டியமைக்கு நன்றி பெட்ரோல் பொருட்களை வாங்குவதற்கு ஆகும் செலவுக்கு நாம் அணுசக்தி மூலம் இயங்கும் பொருட்களை உருவாக்கினால் மட்டுமே தப்பிக்க முடியும் என எழுதுவதற்கு பதிலாக

    பெட்ரோல் மூலம் மின்சாரத்தின் உற்பத்தி என தவறாக எழுதிவிட்டேன் சுட்டி காட்டியமைக்கு நன்றி

    மேலும் அனுமின்நிலையம் ஏன் மூட தேவை இல்லை என்கிற எனது அடிப்ப்டையான கேள்விக்கு நீங்கள் இன்னும் பதிலளிக்கவில்லை

  6. தல உங்களுக்கு ஒரு தகவல்:

    Nuclear power plants are more efficient than ever before. New technology has made them more reliable (they break down less often) and safer. People for nuclear power argue that this is evidenced by more and more nations (such as China) building nuclear power plants.
    Reduce greenhouse gas emissions. This is a contentious issue. Proponents of nuclear power argue that, as no coal or fossil fuels are burnt, no carbon dioxide is released into the air. However, uranium has to be mined and transported to the nuclear plant. Both these activities require burning of fuels, so carbon dioxide is released. Also, producing nuclear fuel from the uranium requires a lot of energy, which also contributes to the emission of greenhouse gases.
    Although the initial cost of building nuclear plants is high, the running costs are relatively low.
    One reason the costs are low is that nuclear plants need only a small amount of uranium to produce a lot of energy. In fact, if the cost of uranium doubled, costs would only be increased by 7%. 1 truck of uranium produces as much energy as 1000 trucks of coal!
    Reduces dependence on foreign oils and natural gas (like biofuels). America, for instance, imports a lot of oil and natural gas from other countries. The price of these products is volatile, and change very quickly. If the price increases quickly, consumers have to pay more for their electricity (which they may not be able to afford). Building more nuclear power plants means that Americans will not be susceptible to price rises in oil and gas. President Barack Obama supports this idea of ‘energy independence’.
    Nuclear wastes can be safely stored underground (another debated issue).Edi

  7. நீங்க என் கருத்தை புரிந்து கொள்ளவில்லை... அணு மீள் சுழற்சி மூலம் அணு ஆயுதங்கள் தயாரிக்கப் படுகின்றன... இந்த அணு மீள் சுழற்சி செய்ய உறனியம் மின்சாரம் தயாரிக்க பயன்படுவது போல் நாடகமாடி ஆயுதங்கள் தயாரிக்கிறார்கள் என்கிறேன்.. இன்னும் புரியவில்லை என்றால் என்னிடம் இதற்க்கு மேல் விளக்கம் இல்லை...

  8. //Nuclear wastes can be safely stored underground (another debated issue).Edi//

    it is not another debated issue.. nobody had ever planned what to do with the nuclear waste.. after enrichment of used uranium you will get nuclear waste.. still no scientist had ever came to conclusion of what to do with this.. your so called intelligent corporate company in france had let nuclear waste in ground water, and got a penalty of 40,000 euro... just a meagre 40,000 euro for endangering the livelihood of people for another 2.5 million years... come on man... if you are going to buy the concept of corporates nobody can save us

  9. /இந்த அணு மீள் சுழற்சி செய்ய உறனியம் மின்சாரம் தயாரிக்க பயன்படுவது போல் நாடகமாடி ஆயுதங்கள் தயாரிக்கிறார்கள் என்கிறேன்.. இன்னும் புரியவில்லை என்றால் என்னிடம் இதற்க்கு மேல் விளக்கம் இல்லை... //

    இதற்கு ஆதாரங்கள் தரவுகள் ஏதும் கைவசம் இருக்கா வெறும் கற்பனையா

  10. hazard என்று பார்த்தீர்கள் என்றால் நிறைய அழிக்க முடியாதவை இருக்கிறது அதற்கெல்லாம் தீர்வு இல்லாமலேயே நாம் பயன்படுத்தி கொண்டுள்ளோம்

    ஆனால் விஞ்ஞானத்தின் மூலம் தீர்வு கிடைக்கும் என்கிற முன்னேற்ற பாதையிலேயே

    உதாரணம் பிளாஸ்டிக் கழிவுகள்

    இவற்றை அழிக்க முடியாது மண்ணுக்கு மாபெரும் தீமை ஆனால் இவற்றை ஏன் இன்னும் உபயோகிக்கிறோம்

  11. சூரிய ஜீவா நீங்கள் சொல்லும் அணு கழிவு ஒரு பிரச்சனையே

    http://www.ccg.leeds.ac.uk/teaching/nuclearwaste/nuclearwaste.html

    அதே நேரத்தில் வளர்ந்து வரும்
    நமது எரிசக்தி தேவைக்கான வேற மாற்று வழிகள் என்ன

  12. தியாகு,

    //மேலும் அனுமின்நிலையம் ஏன் மூட தேவை இல்லை என்கிற எனது அடிப்ப்டையான கேள்விக்கு நீங்கள் இன்னும் பதிலளிக்கவில்லை//

    எடுத்ததும் பதிவே காமெடியாக இருக்கவும் என்னத்த பதில் சொல்றதுனு போய்டேன்
    மேலும் ஏற்கனவே ஒரு பதிவு போட்டு இருக்கேன் , இந்த அணு உலை பிரச்சினைப்பற்றி,அத நீங்க படிச்சாலே ஏன் மூடனும் என்பது புரியும். மேலும் போராட்டத்தின் பின்னணியையும் சொல்லி இருக்கேன். நீங்க சொன்ன அரசியல் காரணத்தை போன வாரமே நான் சொல்லிட்டேன்.பார்க்கவும்.

    கூடன்குளம் அணு உலை அரசியலும், சுயநலமும்- ஒரு மாற்றுப்பார்வை

    http://vovalpaarvai.blogspot.com/2011/10/blog-post.html

    மேலும் அணு உலைக்கழிவுகளை பாதுகாப்பாக பராமரிப்பதன் செலவு என்ன, என்பதை யாரும் வெளிப்படையாக சொல்வதில்லை. அதன் தீமைகளும் அதிகம். அனல் மின்நிலையங்கள் குரோனிக் பாய்சனிங்க் எனலாம், அணு மின் நிலையம் அக்யூட் பாய்சனிங், உடனே உயிர் போகும், வெளிநாடுகளில் பெரிய தொழில்நிறுவனங்கள் அவங்கள் மின்பயன்ப்பாட்டில் 10 சதவீதம் மரபுசாரா எரிப்பொருள் மூலம் பெறற மின்சாரமாக இருக்க வேண்டும் என சட்டம் கூட உள்ளது.

    BMW லேண்ட் ஃபில் மூலம் மித்தேன் தயாரித்து தனது மின் தேவையின் பெரும் பகுதியை பூர்த்தி செய்துக்கொள்கிறது.
    இது போல பல பெரிய நிறுவனங்கள் தங்களுக்கு மாற்று மின்சக்தி தயாரித்து தர மினுற்பத்தி நிறுவனங்களுக்கு முதலீடு தருகின்றன.

    மேலை நாடுகளில் எல்லாவற்றிலும் உஷாராக தான் இருக்காங்க.



    http://vovalpaarvai.blogspot.com/2011/10/blog-post.html

  13. தல ,

    உங்கள் பதிவுகளை படிக்கவில்லை நிச்சயம் படிக்கிறேன் பிறகு விவாதிப்போம்

    //0 சதவீதம் மரபுசாரா எரிப்பொருள் மூலம் பெறற மின்சாரமாக இருக்க வேண்டும் என சட்டம் கூட உள்ளது.//

    நீங்கள் சொல்கிற அனல் புனல் அலை எல்லாம் நமது மின் தேவையில் 1 சதவீதத்தை தான் பூர்த்தி செய்யும் தல

    எந்த நாட்டிலாவது அதற்கான உதாரணங்கள் இருந்தால் எடுத்து போடுங்கள் பேசலாம்

  14. தியாகு,

    நன்றி,

    //நீங்கள் சொல்கிற அனல் புனல் அலை எல்லாம் நமது மின் தேவையில் 1 சதவீதத்தை தான் பூர்த்தி செய்யும் தல//

    ஆமாம் இத எங்கே பார்த்திங்க ஒரு சதம் தான் அனல்,புனல்னு சொல்றிங்க :-))

    விக்கில போட்ட சதவீத கணக்கைப்பாருங்க, அணு ஆற்றல் உற்பத்தி இந்தியாவில 2.7 சதம் தான் அதாவது
    சுமார் 6500 மெஹாவாட் அளவு தான். உலக அளவிலும் ஒரு சில நாடுகளை தவிர மத்த எல்லாம் அனல்,புனலை தான் அதிகம் நம்பி இருக்கு.

    //About 65.34%[1] of the electricity consumed in India is generated by thermal power plants, 21.53%[2] by hydroelectric power plants, 2.70% by nuclear power plants.[3] and 10.42% by Renewable Energy Sources. More than 50% of India's commercial energy demand is met through the country's vast coal reserves.[4] The country has also invested heavily in recent years in renewable energy utilization, especially wind energy.[5] In 2010, India's installed wind generated electric capacity was 14,550 MW.[6] Additionally, India has committed massive amount of funds for the construction of various nuclear reactors which would generate at least 30,000 MW.[7] In July 2009, India unveiled a $19 billion plan to produce 20,000 MW of solar power by 2022.[8]//

    உலக அளவில மின் உற்பத்தி சதவீதங்களை இங்கே காணலாம், 1995 டேட்டா அது இப்போவும் ரொம்ப மாறலை.

    http://www.ieer.org/ensec/no-1/glbnrg.html

    நான் சொன்ன 10 சதவீதம் மரபுசாரா மின்சாரக்கொள்கை பத்தி டிஸ்கவரில எப்போவோ பார்த்தது, தேடி லின்க் போடுறேன்.

  15. அணு மீள் சுழற்சி என்றோ, uranium enrichment என்றோ வலைதளங்களில் தேடி பாருங்கள்... விடை கிடைக்கும்... ஆதாரம் இருக்கா கற்பனையா என்ற கேள்வி எதற்கு? மாற்று வழி சூரிய ஒளி சக்தி... dont say that it is very expensive. per unit cost of solar power is just 3 rupees, which i had deduced from the sale price of solar panels of private companies. if it is undertaken by government it will be less expensive than what i am telling...
    உங்கள் நடுவண் அரசு சூரிய சக்தியால் வரும் மின்சாரம் ஒரு அளவை [unit] பதினைந்து ரூபாய் என்கிறது, யோசித்தால் எங்கு பிரச்சினை என்று தெரியும்...

  16. தியாகு,

    பல வெளிநாடுகளில் இப்படி சட்டம் இருக்கு அமெரிக்காவில பொதுவாகவும், புராவின்ஸ் வகையாகவும் சட்டம் போட்டுக்கிறாங்க, கலிஃபோர்னியாவில 33% டாrகெட் வச்சு இருக்காங்க,
    அடியில் விவரம்.

    //to get 20% of its electricity from renewable sources (not including big hydro) by 2010, so it has contracted with Brightsource Energy for 3 new solar-thermal power plants in the Mojave desert, one of the best spots for solar power in the world.

    "Solar thermal energy is an especially attractive renewable power source because it is available when needed most in California – during the peak mid-day summer period," said Fong Wan, vice president of energy procurement at PG&E.; These first three plants will add up to 500 megawatts of capacity, but PG&E; has also signed contracts for options on an additional 400 megawatts, which could bring the total to 900 megawatts.//

    http://www.treehugger.com/renewable-energy/brightsource-to-build-500-megawatts-of-solar-thermal-power-in-mojave-desert.html
    ----------------------------------------------------------------------------------------
    //California Gov. Jerry Brown signed a new law today requiring power companies to generate 33 percent of all electricity from renewable energy sources like wind and solar power by 2020.

    The new law is a major incentive for clean technology companies in the state to begin ramping up their production of clean energy sources. Previous laws required power companies to fill 20 percent of their output with renewable energy sources by 2010 with a 3-year grace period.//
    http://venturebeat.com/2011/04/12/calif-renewable-energy-law/
    --------------------------------------------------------------------------

    இது போல நிறுவனங்கL மாற்று மினுற்பத்தியில் ஈடுபட்டால் வரிச்சலுகை உண்டு.இந்தியாவிலும் உண்டு இன்ஃபோசிஸ் காற்றாலை நிறுவியுள்ளது. சர்க்கரை ஆலைகள் கோஜெனெரேஷன் முறையில் தங்கள் மின்சாரத்தை தயாரித்துக்கொள்கின்றன.
    Since 2002, BMW's assembly plant in Spartanburg, SC has been using methane captured from a nearby landfill site to fuel electrical generators. As part of the current expansion of the plant to support the addition of X3 production, BMW has invested another $12 million to expand power generation from methane. The original system of four turbines has been replaced by two larger, more efficient turbines. The result is that the turbines can now generate 30% of the plant's electricity needs from the same amount of methane, up from 14% with the old system. The co-generation system also uses hot water in addition to the electricity to provide 60% of all the energy required for the entire plant.

    Since its inception, the methane power generation has saved BMW $5 million a year in energy costs. The methane is provided from the Palmetto landfill through a 9.5 mile pipeline. The two turbines can generate 11 MW of electricity.
    http://green.autoblog.com/2009/06/11/bmw-expands-landfill-methane-electrical-generation-at-spartanbur/

    ---------------------------------------------
    eid parry,
    //he Nellikuppam is an integrated sugar complex – where there are two other processes arising out of the main process of manufacture of sugar. Operating with 542 personnel, it is one of the few integrated sugar factories in the country producing co-generated power (24.5 MW), rectified spirit (45KL/day) and organic manure products. Some of the salient features of the integrated sugar complex are://

    http://www.eidparry.com/IntegratedSugarComplex.asp

  17. அருண் மற்றும் சூரிய ஜீவா புதிய பதிவில் பதில் சொல்லி இருக்கிறேன்
    http://thiagu1973.blogspot.com/2011/11/blog-post_02.html

    நான் கேட்ட அடிப்படை கேள்விக்கு இருவரும் பதில் சொல்லவில்லை

    மாற்று ஏற்பாடு என்ன பரிந்துரைக்கிறீர்கள் என்பதை குறித்து யோசியுங்கள்

  18. //
    உதாரணமாக ரஷ்ய தயாரிப்பு தொலைக்காட்சிகளை அருகில் இருந்து பார்க்க கூடாது...ஏன் கண் கெட்டு விடுமா? இல்லை உயிரே போய் விடும் , எப்போது வேண்டுமானாலும் வெடித்து விடும்.
    தொலைக்காட்சிப்பெட்டியில் சிஆர்டி திரை சூடு ஆவதை தடுக்க ஒரு மின்சுற்று உள்ளது இது காப்புரிமை பெறப்பட்ட தொழில்நுட்பம், இதனை வாங்கி பயன்ப்படுத்தாமல், தூரமா உட்கார்ந்து பாருங்க, ரொம்ப நேரம் டீவி பார்க்காதிங்க 85;ு எச்சரிக்கை நோட்டிஸ் கொடுத்துட்டாங்க.//

    தல இது உங்க பதிவில் இருந்து எடுக்கப்பட்டது மேஜர் ருசியன் பிராண்டு டிவி எது நீங்க சொல்றது எந்த பிராண்டு கிட்ட உக்கார்ந்து பார்த்தால் கண்ணு கெட்டு போயிடும்

  19. இன்னொரு தகவல் அங்க மேஜர் விற்பனையாவது ஓனிடா டிவீன்னு சொல்றீங்க rubin என்கிற மாடல்தான் அதிக விற்பனை

    //அங்கே அதிகம் விற்பனையாகும் டீவி நம்ம ஊரு ஒனிடா டீவி தான். பத்துலட்சம் பெட்டிகளுக்கு மேல் விற்று சாதனைப்படைத்துள்ளது ஒனிடா! இதனை ஒனிடா டீவி தளத்தில் காணலாம்.

    இதனை எதற்கு சொன்னேன் என்றால் சாதாரணமான டீவிக்கே இப்படினா அவங்க அணு உலை எப்படி இருக்கும்? அவங்க வெடிக்காதுனு சொல்றதுக்கு என்ன உத்திரவாதம்...கியாரண்டியோ, வாரண்டியோ கொடுக்க நாங்க என்ன பிரஷ்ஷர் குக்கரா விக்கிறோம்னு சொல்லிவிட்டு போய்க்கிட்டே இருப்பாங்க./


    இந்த சுட்டியை பாருங்க

    //The commercial brand Rubin is the largest Russian brand of television technology. Having long history, the television sets Of rubin use the deserved confidence of users, because of their outstanding characteristics and quality, which is not inferior to foreign analogs. Since 1999 fundamental production base joint stock company "MTZ ruby" was concentrated at the Voronezh plant "Videophone". Volume of output reached 12 thousand television sets per month. In 2001 volumes of the production of plant reached 200 thousand per year. A total of 865 thousand television sets were produced in 2004, after increasing this index by 11,7% in comparison with the previous year. At the end 2005 at the plant "Videophone" is past the solemn ceremony, dedicated to the production of the three-millionth television set. By 2005 United Russia had 28 deputies in the new City Duma, up from 20 before the elections. The new faces included businessmen Alexander Milyavsky, director of the Rubin television factory. Company "Rubin" actively collaborates with such respected companies as: LG; Philips Semiconductors; LG Philips Display; Toshiba; Samsung Electronics; LG Cable; BASF; BP; Sanyo; Daewoo Electronics; and ST (Semiconductors Tomson). This partnership makes possible for company to create high-quality digital products, to improve its production, to derive all progressive technological models of different technology for the market, to enlarge the commercial rule of output.//

    http://www.globalsecurity.org/military/world/russia/tv1.htm


    ஏன் தல இப்படி தவறான தகவல் கொடுத்தீங்க சொல்லுங்க தல சொல்லுங்க

  20. Anonymous says:

    Hello, well done. I do agree with your point of view. cialis to buy

  21. Anonymous says:

    After reading your post, I realized that Maria Mitchell was right while saying "Study as if you were going to live forever; live as if you were going to die tomorrow." where to buy cialis