Vladimir Lenin

1.A revolution is impossible without a revolutionary situation; furthermore, not every revolutionary situation leads to revolution.
Vladimir Lenin

2.
Any cook should be able to run the country.
Vladimir Lenin

3.
Crime is a product of social excess.
Vladimir Lenin

அன்னா ஹசாரேவின் மீதான அருந்ததி ராயின்விமர்சனம் சரியா ?

அருந்ததி ராயின் கட்டுரைக்கான சுட்டி :http://puyarparavai.blogspot.com/2011/08/blog-post_27.html

 

//அவரது வழிமுறை வேண்டுமானால் காந்தியமாக இருக்கலாம், ஆனால் அவரது கோரிக்கைகளில்

கண்டிப்பாக காந்தியம் எதுவும் இல்லை. அன்னாவின் கருத்துக்கு மாறாக, காந்தி அதிகாரத்தை

மையப்படுத்துவதற்கு எதிராக நின்றார். அதிகாரக் குவியலை எதிர்த்து, அதை -மத்தியத்துவப்படுத்த

காந்தி விரும்பினார். லோக்பால் மசோதாவோ காந்தியத்துக்கு ஒவ்வாத - அதிகாரம் மத்தியத்துவப்படுத்தப்பட்ட ஒரு கொடுமையான ஊழல் எதிர்ப்புச் சட்டம்//

 

காந்தி அதிகாரத்தை மைய்யப்படுத்துவதை எதிர்த்தார் ஆனால் அன்னாஹசாரே அதிகாரத்தை

மைய்யபடுத்துகிறார் என்கிற குற்றச்சாட்டு சரியா இதற்கு நீங்கள் காந்தி எழுதி யங் இந்தியாவில் வெளிவந்த சில கட்டுரைகளை படித்தால் போது காந்தி ஒரு  கிராமத்தின் தேவைகளை அந்த மக்களின் உடல் உழைப்பின் மூலம் பெறுவதிலும் , பெரும்பாலும் நவீன உற்பத்தி கருவிகளின் மூலம் செய்யப்படும் உற்பத்தியானது பண்ட குவிப்பு , சுரண்டல் சொத்து சேர்ப்பு இவைகளில் கொண்டு போய் விடும் என கருதி நவீன உற்பத்தி முறைகள் உற்பத்தி உறவுகளுக்கு எதிராக வரலாற்று சக்கரத்தை பின்னோக்கி சுழற்ற முயன்றார் என்பதை காணலாம் அது காந்தியின் கொள்கையில் உள்ள குறைபாடே , ஆகவே காந்தியாக யாரும் இருக்க வேண்டியதில்லை அவரது புரிதல் தவறு மிக கேடனாது நவீன உற்பத்தி கருவிகள் இல்லை அது யார் கையில் இருக்கவேண்டும் என்பதே .இப்படி காந்தியை விமர்சனமின்றி இழுத்து அவரை அன்னா ஹசாரேவுடன் இணைத்து வைத்து விமர்சிப்பது அன்னா ஹசாரேவை எதிர்க்க விமர்சிக்க உதவாது

 

//கோகோ கோலாவில் இருந்தும், லேமென் பிரதர்ஸில் (Lehman Brothers) இருந்தும் தாரளமாய் நிதி

வாங்கிக் கொண்ட அரசு சாரா நிறுவனங்களை நடத்துபவர்கள்தான், அன்னாவின் கிளர்ச்சிப்

பிரச்சாரத்தை முன்னின்று நடத்துபவர்கள். அன்னா அணியில் முக்கியப் பிரமுகர்களான அரவிந்த கெஜிர்வாலும் மணிஜ் சிசோடியாவும் நடத்தும் கபீர் நிறுவனம், போர்ட் பெளன்டேசனிடம் இருந்து மூன்று வருடங்களுக்கு முன்பு, 4 லட்சம் டாலர்களைப் பெற்றுள்ளது. "ஊழலுக்கு எதிரான இந்தியா" பிரச்சாரத்திற்கு நன்கொடை அளித்தவர்களில், அலுமினியம் ஆலைகளுக்குச் சொந்தமான நிறுவனங்க‌ளும் பெளன்டேசன்களும், பல துறைமுகங்களைக் கட்டிய நிறுவனங்க‌ளும், பல சிறப்புப் பொருளாதார பகுதிகளைக் கட்டிய நிறுவனங்க‌ளும், அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்புடைய பல

கோடிக்கணக்கிலான நிதி சாம்ராஜ்யத்தை நடத்துபவர்க‌ளும், ரியல் எஸ்டேட் நிறுவனங்க‌ளும்

அடக்கம். அவர்களுக்கு நன்கொடை கொடுத்தவர்களில் பலர் ஊழலில் ஈடுபட்டதற்காக கண்காணிப்பில்

இருப்பவர்களாகவும் மற்றும் பலவித கிரிமினல் செயற்களில் ஈடுபட்டவர்களாகவும் உள்ளார்கள். இவர்கள்

அனைவரும் ஏன் அன்னாவுடன் இவ்வளவு உற்சாகத்துடன் பங்கெடுக்கிறார்கள்/

 

மிக சரியான சந்தேகம் ஏன் இவர்களுக்கு அன்னா ஹசாரேவுடன் கூட்டனி என்பதை கேட்கலாம்

ஊழல் ஒழிந்தால் அவர்களுக்கு அரசியல் வாதிகளுக்கு கமிசன் கொடுக்காமல் தனியார் மயம் செய்யலாம் என்கிற நோக்கம் இருக்கலாம் இந்த நோக்கத்துக்காக நாம் இந்த போராட்டத்தை நிராகரிக்க முடியாது . எந்த நோக்கத்துக்கு யார் ஊழலை அழிக்க முயன்றாலும் ஊழல் அழிவதும் ஊழலுக்கு சட்டபடியான ஒரு தடை இருப்பதும் நல்லதுதானே

 

மேலும் இந்த விசயத்தில் ஒட்டுமொத்த பொதுஜனங்களின் கருத்து குவிந்துள்ளதை மறுக்க முடியாது ஏனெனில் லஞ்சம் ஊழலால் பாதிக்கப்படாதவன் என்று யாரும் இல்லையே இங்கு

 

//முற்றிலும் வெவ்வேறு காரணங்களுக்காக, முற்றிலும் வெவ்வேறு வழிகளில், மாவோயிஸ்டுகளும் ஜன்

லோக்பால் மசோதாகாரர்களும் ஒரே பொதுவான அம்சத்தை வலியுறுத்தி வருகின்றனர் என்று நம்மால்

கண்டிப்பாகச் சொல்ல முடியும். இருவருமே இந்திய அரசைத் தூக்கி எறிய முயல்கிறார்கள். ஒருவர்,

ஏழைகளிலும் ஏழைகளான ஆதிவாசிகளினால் உருவாக்கப்பட்ட இராணுவத்தின் துணை கொண்டு,

ஆயுதப் போராட்டத்தின் மூலம், கீழிருந்து தூக்கி எறிய முயல்கிறார். மற்றொருவர் மேலிருந்து, நகரம் சார்ந்த

ஆனால் நிச்சயமாக நல்ல பொருளாதாரப் பின்புலம் கொண்டவர்களால் உருவாக்கப்பட்ட இராணுவத்தைக்

கொண்டு, புத்துணர்வு கொண்ட ஒரு சாதுவின் தலைமையின் கீழ், இரத்தம் சிந்தாத காந்திய

ஆட்சிக்கவிழ்ப்பு மூலம், அரசைத் தூக்கி எறியப் பார்க்கின்றனர். (இந்த முறையில் அரசு நிர்வாகமும்

தன்னைத் தானே தூக்கி எறிந்து கொள்ள, அனைத்தையும் செய்து உடந்தையாக உள்ளது)//

 

அடுத்த ஒரு தவறான புரிதல் மாவோயிஸ்டுகளை போல அன்னாஹசாரே அரசாங்கத்தை தூக்கி எறிய

முயலவில்லை இருக்கிற அரசாங்கத்தின் திருத்தங்களை சட்டத்தின் மூலம் கொண்டு வரலாம் என நினைக்கும் நபர்களில் ஒருவர் என்பதால் அவரக்கு சமூக மாற்றம் கோரும் மாவோயிஸ்டுகளோ எந்த சம்பந்தமும் இல்லை

/அம்மையத்திற்குக் காவல்துறையினருக்கு உள்ள அதிகாரம் உண்டு; அவர்கள் பிரதம மந்திரியில் இருந்து,

நீதித்துறையைச் சார்ந்தவர்களில் இருந்து, பாராளுமன்ற உறுப்பினர்களிருந்து, அதிகார மட்டத்திலுள்ள கீழ்மட்ட அரசு அதிகாரிகள் வரை, அனைவரையும் கண்காணிக்கலாம். லோக்பாலுக்கு ஒன்றை ஆய்வு செய்து

துப்புத் துலக்கவும், கண்காணிக்கவும், அவர்கள் மேல் வழக்குத் தொடரவும் அதிகாரம் உண்டு. லோக்பாலிடம்

சிறைச்சாலை மட்டும்தான் இல்லை. அதைத் தவிர அது ஒரு தனிப்பட்ட நிர்வாக அமைப்பாக, கணக்கில்

அடங்காமல் சொத்து வைத்திருப்பவர்களையும், அளவுக்கு அதிகமாக ஊதிப் பெருத்தவர்களையும், ஊழல்

பேர்வழிகளையும் எதிர்கொள்ளும் வகையில் செயற்படும்.//

 

இப்படி செயல்படுதால் என்ன பிரச்சனை ஒரு அரசு செயல்படாமல் அல்லது வர்க்க நலன் சாந்து செயல்படும் போது அந்த வர்க்கத்தின் நலன்களுக்குள்ளேயேமோதல் எழலாம் அருந்ததிராயின் கூற்றுபடி அது ஆளும் வர்க்கத்துக்குள் உள்ள சண்டையாகவே இருக்கட்டும் பயன் பெற போவது நிச்சயம் ஆளும் வர்க்கமல்ல.

 

அரசு என்பது எப்போதுமே வர்க்க நலன் சார்ந்த அரசு அதில் பிரச்சனை வருகிறாதென்றால் ஆளும்

வர்க்கத்துக்குள் அடிதடி வருகிறதென்றால் அது ஊதி அணைக்கப்பட கூடாது

ஒரு பக்கம் இந்த அமைப்பை வைத்து சுரண்டுபவர்கள் இன்னொரு பக்கம் இந்த அமைப்பை பாதுகாப்பவர்கள் இருவரும் ஒரு முடிவுக்கு வரட்டும் இப்போது நாம் இந்த அமைப்பை பாதுகாப்பவர்கள் பக்கம் நிற்கவேண்டுமா வேண்டாமா?

 

(இது ஒருவேளை அன்னா ஹசாரே இன்னொரு ஆளும் வர்கத்தின் நலன் சார்ந்து இயங்கினால்)

 

//இந்த மசோதா பயன் தருமா, தராதா என்பது நாம் ஊழலை எப்படிப் பார்க்கிறோம் என்பதைப் பொறுத்தே

உள்ளது. ஊழல் என்பது வெறுமனே சட்ட சம்பந்தப்பட்டப் பிரச்சினையா? ஊழல் என்பது வெறுமனே நிதி மோசடியும் லஞ்ச லாவண்யமும் உள்ள பிரச்சினையா? அல்லது அதிகாரம் என்பது மிகச் சிறுபான்மையினரின் கையில் குவிந்து கிடக்கும் இந்தச் சமத்துவமற்ற சமுதாயத்தில், ஊழல் என்பது சமூக பட்டுவாடாவுக்கான கரன்சி நோட்டா? ஒரு உதாரணத்திற்கு நான் சொல்வதைச் சிந்தித்துப் ருங்கள்! பெரிய பெரிய ஷாப்பிங் மால் உள்ள ஒரு நகரத்தில், வீதிகளில் கூவி விற்கும் சில்லறை வியாபராம் தடை செய்யப்பட்டுள்ளது என்று எடுத்துக் கொள்ளுங்கள். இருப்பினும் இந்தச் சில்லறை வியாபாரி இந்த ஷாப்பிங் மாலின் விலைக்கு ஈடு கொடுத்து வாங்க முடியாத வாடிக்கையாளர்களுக்கு, தனது பொருளை விற்க வேண்டுமானால் கண்டிப்பாகச் சட்டத்தை மீறித்தான் செயற்பட வேண்டும். அதற்காக அங்குள்ள போலிஸிக்கும் முனிசிபாலிடி ஆளுக்கும் அவர் சிறு தொகையைக் கொடுக்கிறார் என்று வைத்துக் கொள்ளுவோம். அப்படிச் செய்வது ரொம்ப மோசமான செயலா? எதிர்காலத்தில் இந்தச் சில்லறை வியாபாரி தனது வணிகத்தைச் செய்ய இந்த லோக்பால் பிரதிநிதிகளுக்கும் கொஞ்சம் பணம் கொடுக்க வேண்டுமா? சாதாரண மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வு என்பது அமைப்புரீதியான

சமத்துவமின்மைக்குத் தீர்வு காண்பதிலேயே உள்ளது. அப்படிச் செய்யாமல், அதற்குப் பதில், மக்கள்

இன்னுமொரு அதிகார மையத்தை எதிர்கொள்ளட்டும் என்று விட்டு விடுவது எப்படி நியாயமாக இருக்கும்?//

 

ஊழல் என்பது நாம் பார்க்கும் விதத்திலேயே உள்ளது என்பது மிக மிக முக்கியமான கருத்து முதல் வாதம்

இதற்கு பதிலாக ஊழலாக பார்க்காதீர்கள் என ஒரே பதிலில் விடை கூறிவிடலாம் .

இவர் சொன்ன உதாரணத்தின் விடை இந்த சமூக அமைப்பு இருக்கும் வரை ஊழல் இருக்கும் என்பதாகும்

இதுதான் பிற்போக்குதனம் நாம் கையை கட்டி உக்கார்ந்து கொண்டு இந்த அமைப்பு தானாக மாறும் என இருக்க கூடாது

 

அதற்கான முயற்சியில் இறங்க வேண்டும் அதற்காகத்தான் அன்னாவின் பின் இளைஞர்கள் திரண்டுள்ளார்கள்

 

 

--

தியாகு

 

-

""

எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்

மெய்பொருள் காண்பதறிவு

-வள்ளுவர்

வலைப்பூ:www.thiagu1973.blogspot.com

============================

 


18 Responses so far.

  1. Anonymous says:

    விவாதகன்,

    அன்னாவினை எப்படிப்பார்ப்பது. லஞ்சத்தை எப்படிப்பார்ப்பது. அன்னாவின் பிரச்சினையில் லஞ்சம் என்பது என்ன?
    அன்னா ஒரு ஜனநாயகவாதியா.

    அவர் ஒரு தனிமனிதரும் அல்ல. அவர் பல்வேறு என்.ஜி.ஓக்களின் பிரதிநிதி. அவருக்கு என்ன வேலை, அல்லது அவர்களைப் போன்றவர்களுக்கு இங்கே என்ன வேலை. திடீர் என்று நாட்டுப்பற்று பொங்கி வருவதற்கான காரணம் என்ன. உண்மையில் அவர் லஞ்சத்தை எதித்துத்தான் போராடினாரா யாரின் பிரதிநிதியாக.

    அன்னா அமெரிக்க நாட்டினது, பன்னாட்டு நிறுவனங்களதும் பிரதிநிதியாய் தன் செயல்களத்தை விரிவுபடுத்திக்கொண்டிருக்கிறார். ஏன்?

    இன்று உலகம் முழுவதும் அங்குள்ள ஜனநாயகமற்ற ஆட்சியை எதிர்த்து மக்கள் கிளந்தெழுந்துக் கொண்டிருக்கிறார்கள். தினமும் ஏதாவதொரு நாட்டில் கலகம் நிகழ்ந்துகொண்டிருப்பதை செய்திகளில் பார்க்கலாம். அவர்கள் அனைவரும் ஆட்சி மாற்றத்தை கோருகிறார்கள். ஆனால் அந்த நாட்டில் ஜனநாயகத்தினை அடைவதற்கு அந்த ஆளும் மையங்களை எதிர்த்து மக்கள் போராடினானல் அதற்கு எதிராக ஏகாதிபத்தியங்கள் கூட்டுவைத்துக்கொண்டு காப்பாற்றிக்கொண்டிருக்கிறது. மக்கள் இப்படி எழுந்து போராடும்போது அவைகள் ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும் கிளர்ந்து எழுந்து விடுவார்களோ என்ற பிரச்சனை அச்சம் அந்த ஏகாதிபத்திய நாடுகளுக்கு உண்டு. ஆகையால் அப்படி எழும் போராட்டங்களை தமக்கு எதிராகவும் தமது மூலதனத்திற்கு எந்த விதத்திலும் பாதிக்காமலும் இருக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு அரசியல் தந்திரங்களை கையாள்கிறது.

    அதை புரிந்துகொள்ள வேண்டுமென்றால், பிரிட்டிஷ் காரரை வைத்து எப்படி காங்கிரஸ் கட்சி இந்தியாவில் தொடங்கி அதையே அதிகாரமாற்றமாக நிகழ்த்தி ஏகாதிபத்தியங்கள் இந்தியாவில் மூலதனத்தை தக்கவைத்துகொண்டார்களோ, அதேபோல் அப்படி கிளர்ந்தெழும் நாடுகளிலும், அதற்கு வாய்ப்புள்ள நாடுகளிலும் தமக்கு தோதான அமைப்புகளை நிறுவவேண்டிய அவசியம் ஏகாதிபத்தியங்களுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது. அதற்கான தகவல்கள் இன்று நாளிதழ்களில் நிறைய வந்துக்கொண்டிருக்கிறது.

    ஆகையால், அவர்கள் நிதி கொடுத்து போராட அதற்கான என்.ஜி.ஓ,க்களை ஏற்படுத்தி வருகிறார்கள். 400 பேருக்கு ஒரு என்.ஜி.ஓ வீதம் இந்தியாவில் உருவாக்கியிருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இதுதான் அமெரிக்கா வகுத்துள்ள திட்டமும் கூட.

    தொடரும்...

  2. Anonymous says:

    விவாதகன்,

    அடுத்தது, ஏகாதிபத்தியத்தின் நலனை ஒரு நாடு மீறுமானால், அல்லது பணிந்துபோக சிறிதளவு சிந்தனை செய்தாலே உடனே என்.ஜி.ஓ.க்களை வைத்து திரட்டி பணிய வைக்க முயற்சிசெய்யும். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் அமெரிக்கா தன் நலனிலிருந்து ஒரு திட்டத்தை கொண்டுவந்தால், ரஷ்யாவோ, ஜெர்மனியோ, பிரான்சோ தன் சார்பான என்.ஜி.ஓ.க்களை வைத்து போராட்டம் நடத்தி தடுக்க முயற்சி செய்கிறது. ரஷ்யா ஒரு திட்டத்தை இந்தியாவில் தன் நலனுக்காக கொண்டுவந்தால் மற்ற ஏகாதிபத்திய நாடுகளின் என்.ஜி.ஓ.க்களை வைத்து தடுக்க முயற்சி செய்யும். இதுதான் அனைகளை எதிர்த்த போராட்டம், அணு ஒப்பந்தத்தில் நடந்த போராட்டம், கூடங்குளம் போராட்டத்தில் கூட அப்படி இருக்குமோ என்று அரசாங்கமே கூறுகிறது. அந்தளவுக்கு என்.ஜி.ஓ க்கள் கூட பல்வேறு ஏகாதிபத்தியங்களின் அடியொற்றி அவரவர்களின் நலனிலிருந்து இயக்க முயற்சி செய்யும். ஆனால் எந்த காலத்திலும் நம்மை சுயமாக முன்னேற விடாது இவைகள்.

    சரி ஊழல் விசயத்துக்கு வருவோம். இன்று கார்ப்பரேட் ஊழல் என்று கூறுகிறார்கள். அது ஒரு கம்பெனி நடத்தும் ஊழலா. இல்லை அவை ஏகாதிபத்தியங்கள் தங்கள் மூலதனத்தை உள்ளே கடை விரிக்க பரப்ப அவரவர்கள் சக்திக்கு ஊழல் மூலமாக வருகிறார்கள். இந்த நாட்டை மூலதனத்தின் மூலமாக காலனியாக்க முயற்சி செய்கிறார்கள். இது தான் இன்று பிரதானமாக முக்கியமாக கவனிக்கபட வேண்டியதாகும். இதற்கு இணையாக இங்குள்ள பெரும் நிறுவனங்கள் ரிலையன்ஸ், டாட்டா, பிர்லா போன்ற ஏகாதிபத்தியத்தினை சார்ந்த நிறுவனங்கள் இங்குள்ள மூலப்பொருளை கொள்ளை அடிக்க, ஒட்டு மொத்த செல்வ வளங்களையும், உற்பத்தி லாபத்தையும் வளர்த்துக்கொள்ள இந்த அரசாங்கத்தினையே லஞ்சத்தின் மூலம் கட்டுப்படுத்தித்தான் சாதிக்கிறது. இதைத்தான் டாடா பகிரங்கமாக இன்றைய உலகமய போட்டியின் காலகட்டத்தில் (2ஜி போல்) நெருக்கடி தந்தால் நாம் உலக அளவில் போட்டி போடமுடியாது என்று சொல்கிறார்.

    இதை உண்மையில் புரிந்துகொள்ள வேண்டும் என்றால் கூகி வான் தியாங்கோ அவர்களின் ஆப்ரிக்க நாவலான சிலுவையில் தொங்கும் சாத்தானையும் கொஞ்சம் படிப்பது உயிரோட்டமாக புரிந்துகொள்ள உதவியாக இருக்கும்.

    ஆக ஏகாதிபத்தியம் இந்த நாட்டை கொள்ளையடிப்பதற்கும், இங்குள்ள பெரும் நிறுவனங்களை நம் நாட்டின் வளங்களை கொள்ளையடித்து அந்நிய ஏகாதிபத்திய நாட்டிற்கு சேவை செய்வதற்கும் பயன்படுத்தும் முறையே இந்த லஞ்சமாகும். இது நெல்லுக்கு பாயும்போது புல்லுக்கும் கொஞ்சம் பாயும் என்று சொல்வது போல, அந்த அரசு அதிகார மையத்தில் சேவகம் செய்யும் அனைவருக்கும் லஞ்சம் சென்று சேருகிறது. இதில் மக்கள் நேரடியாக கொடுக்கும் லஞ்சம் உடனடியாக உணருகிறார்கள். மற்றவை அரசியல் ரீதியாக மக்களுக்கு உணர்த்தும்போதுதான் புரிந்துகொள்கிறார்கள். இந்த முறையைதான் அரசை கட்டுப்படுத்த ஆளும் வர்க்கங்கள் கையாளும் முறை என்பதை புரிய வைக்க வேண்டும்.

    தொடரும்....

  3. Anonymous says:

    விவாதகன்,

    இப்போது அன்னா அசாரேவிற்கு வருவோம். இவர் அரசு அதிகார மையம் வாங்கும் லஞ்சத்தையும், அரசியல்வாதிகள் வாங்கும் லஞ்சத்தையும் பேசுகிறார். ஆனால் ஏகாதிபத்திங்கள் தங்கள் நாட்டின் மூலதனத்தை இங்கே கொட்டி இங்குள்ள மூலப்பொருளையும், செல்வ வளங்களையும், மலிவான உழைப்பினையும், இறுதியாக மிகப் பெரிய அளவில் மூலதனத்தையும் கொள்ளையடித்து போக கொடுக்கும் லஞ்சத்தை பற்றி பேசத் தயாரில்லை. அவர்களை இந்த சட்டத்தில் சேர்க்க தயாரில்லை.

    உள்நாட்டில் இருக்கும் இயற்கைவளங்களையும், உற்பத்தியையும், இதரவைகளையும் மிக குறைந்த விலையில் லஞ்சத்தை கொடுத்து பெற்று அதை மிக அதிகமான விலைக்கு நம் மக்களுக்கு கொடுத்து மிகப் பெரிய கொள்ளையடிக்கும் இந்த பெரும் நிறுவனங்களை இந்தச் சட்டத்தில் சேர்க்கச் சொல்லவில்லை.

    இப்படி லஞ்சம் கொடுத்து காரியத்தை சாதித்துக் கொள்ளும் இவர்களை தண்டிக்க கோர இந்த சட்டத்தில் என்ன சொல்ல வேண்டும் என்பது யாரும் திரும்பிப் பார்த்திரக் கூடாது. இவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வதைக் கூட சொல்வதற்கு இடமில்லை.

    அவர் ஏதோ ஒரு படியில் காலடி வைத்திருக்கிறார் என்று நினைத்தோமானால் நாம் தான் இந்த உலகத்தின் மிகச் சிறந்த முட்டாளாக இருக்கமுடியும். ஏனென்றால் அப்படி இங்கே மூலதனத்தை இறக்கி கொள்ளையடித்து கொண்டுபோகும் ஃபோர்ட் பவுண்டேசன், ராக்பில்லர் போன்ற ஏகாதிபத்திய நிறுவனங்களிடமிருந்துதான் அவர் நிதி உதவி பெற்று இந்த இயக்கத்தையே நடத்துகிறார். இப்படி அவர்களால், அல்லது அவர்களின் அடிவருடிகளால் நடத்தப் பெறும் ஊடக நிறுவனங்கள்தான் அதற்கு விளம்பரம் செய்யும். அப்போதுதான் ஆபத்தில்லாம ஏகாதிபத்தியங்களால் பயனம் செய்ய முடியும். இங்குதான் அருந்ததி ராயும் புரிந்துகொள்ள வேண்டும். இங்கு என்ன வழியில் போராடினார் என்பதையே மையமாக பேசுகிறார். எதற்காக போராடவேண்டும் என்று அவர் பேசத் தயாரில்லை. இவரும் ஏன் ஏகாதிபத்தியங்கள் அன்னா அசாரேவிற்கு பணம் கொடுத்து இந்த இயக்கத்தை நடத்தச் சொல்கிறது என்று கூறத் தயாரில்லை. இவையனைத்தும் தெரிந்தும் அதற்கு எதிராக இயக்கம் எதுவும் நடத்த தயாரில்லை. அதற்கும் மேலாக மக்கள் தங்கள் இயலாமையால் போராடி தீர்க்க முடியும் என்று நம்பிக்கை இல்லாத நிலையில் வேறு வழியில்லாம லஞ்சம் கொடுத்து சாவதை வைத்து வக்காலத்து வாங்குகிறார்.

    மக்கள் போராடக்கூடாது? இறுதியாக இந்த கேள்விதான் எல்லா ஊசலாட்டங்களுக்கும் மையம். மக்கள்தான் இந்த எல்லா லஞ்சத்திலும் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே ஏதோ ஒரு கிராமத்திலோ, மாநிலத்திலோ லஞ்சத்தை எதிர்த்து தனித்தனியாக போராடிக்கொண்டிருக்கத்தான் செய்கிறார்கள். இப்படி தன்னியல்பான போராட்டத்தை ஒழுங்குபடுத்தப்பட்ட போராட்டமாக புரட்சிகர கட்சிகள் பின்னால் திரட்டி போராட வைக்க எப்போது சாதிக்கிறோமோ அப்போதுதான் சிறிய அளவில் கூட முன்னேற முடியும். அதற்காக மக்களை உணர்வு ரீதியாக பயிற்றுவிக்க வேண்டும். அதற்கு மையமான ஊழலால் ஏகாதிபத்தியம் எப்படி காலனியாக்குகிறது என்பதும், எப்படி இங்குள்ள பெரும் நிறுவனங்கள் அவர்களுக்கு சேவை செய்து கொள்ளையடிக்கிறது என்பதையும் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும்.

    வெறும் பொருளாதாரவாதமாக கார்பரேட் நிறுவனங்கள் என்று கூறி கம்பெனிதான் எல்லாம் என்று சொல்லி ஏகாதிபத்தியத்தையும், பெரும் முதலாளிகளையும், அதற்கு பங்காளியாக இருக்கும் பண்ணை உடமையாளர்களையும் மறைக்கக் கூடாது. இது நாட்டை அடிமைப் படுத்தும் பிரச்சினை, நாட்டை ஜனநாயகப் படுத்தவேண்டியப் பிரச்சினை. எல்லாவற்றையும் உடைத்து உடைத்து தனித்தனியான விசயமாக பார்த்தால் தோல்வியும், அதனால் விரக்தியும் மட்டுமே மிஞ்சும்.

    விடுதலையிலும், ஜனநாயகத்திலும் எந்தளவுக்கு முன்னேறுகிறோமோ அந்தளவுக்கு அதன் பகுதியாக இருக்கிற அத்தனை விசயத்தினையும் அடித்து நொறுக்கி நமக்கானதை பெற்றுக்கொண்டே செல்ல முடியும். அல்லது எப்படி பெறுவது என்ற நம்பிக்கையை பெறமுடியும். முழுமையை நோக்கி மக்களை நகர்த்த வேண்டும். அதற்குத்தான் ஊழல் போன்ற பல்வேறு பிரச்சினைகளை கையிலெடுக்க வேண்டும். இது சீர்திருத்தப் பிரச்சனையல்ல. ஒர அரசையே ஆளும் வர்க்கங்கள் எவ்வாறு கட்டுப்படுத்துகிறது என்ற பிரச்சினை. இதைதான் மையப் பிரச்சினை என்று கூறுகிறோம். லஞ்சத்தை ஒழிப்பது என்பது ஏகாதிபத்தியத்துக்கு எதிரானது, இங்குள்ள பெரும் நிறுவனங்களுக்கெதிரானது, அதிகாரவர்க்கத்தின் அனைத்துப் பிரிவினருக்கு எதிரானது, பண்ணை உடமையாளருக்கு எதிரானது, ஆகையால்தான் இவர்களை ஒழிப்பதற்கு எப்பொழுது போராடிகிறோமோ, இவர்களை எந்தளவுக்கு பலவீனமாக்குகிறோமோ, வெற்றிகொள்கிறோமோ அந்தளவுக்குத்தான் லஞ்சத்தை ஒழிக்க முடியும், அதுபோன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு வழிகாண முடியும்.

  4. நண்பரே உங்களுக்கு விரைவில் நானும் தோழர்களும் பதிலளிக்கிறோம்

    என்னை விவாதகன் என தவறாக அழைக்கிறீர்கள் என நினைக்கிறேன் என் பெயர் தியாகு

  5. Anonymous says:

    விவாதகன்,

    என்.ஜி.ஓ. செயல்பாடுகளை புரிந்துகொள்ள ஒரு கட்டுரை முடிந்தால் மொழிபெயர்த்து வெளியிடவும்

    http://www.frontlineonnet.com/fl2819/stories/20110923281901900.htm

    பொறுமையாக படித்து விமர்சனம் செய்யவும். உணர்ச்சி வசப்படவேண்டாம். விமர்சனம் செய்ய வேண்டுமே என்ற கட்டாயம் இருப்பதாக உங்கள் பதிலின் வரிகள் இருக்கிறது. விவாதங்களை தொடரும்வோம்.

  6. Anonymous says:

    விவாதகன்,

    மேலும் சில தகவல்கள் உங்கள் பார்வைக்கு எனது கருத்தினை வலு சேர்ப்பதற்கு

    http://www.outlookindia.com/article.aspx?278264

    http://www.outlookindia.com/article.aspx?278265

    இதையும் தெரிந்து கொள்ளவும்

  7. //அன்னாவினை எப்படிப்பார்ப்பது. லஞ்சத்தை எப்படிப்பார்ப்பது. அன்னாவின் பிரச்சினையில் லஞ்சம் என்பது என்ன?
    அன்னா ஒரு ஜனநாயகவாதியா.

    அவர் ஒரு தனிமனிதரும் அல்ல. அவர் பல்வேறு என்.ஜி.ஓக்களின் பிரதிநிதி. அவருக்கு என்ன வேலை, அல்லது அவர்களைப் போன்றவர்களுக்கு இங்கே என்ன வேலை. திடீர் என்று நாட்டுப்பற்று பொங்கி வருவதற்கான காரணம் என்ன. உண்மையில் அவர் லஞ்சத்தை எதித்துத்தான் போராடினாரா யாரின் பிரதிநிதியாக.

    அன்னா அமெரிக்க நாட்டினது, பன்னாட்டு நிறுவனங்களதும் பிரதிநிதியாய் தன் செயல்களத்தை விரிவுபடுத்திக்கொண்டிருக்கிறார். ஏன்?

    இன்று உலகம் முழுவதும் அங்குள்ள ஜனநாயகமற்ற ஆட்சியை எதிர்த்து மக்கள் கிளந்தெழுந்துக் கொண்டிருக்கிறார்கள். தினமும் ஏதாவதொரு நாட்டில் கலகம் நிகழ்ந்துகொண்டிருப்பதை செய்திகளில் பார்க்கலாம். அவர்கள் அனைவரும் ஆட்சி மாற்றத்தை கோருகிறார்கள். ஆனால் அந்த நாட்டில் ஜனநாயகத்தினை அடைவதற்கு அந்த ஆளும் மையங்களை எதிர்த்து மக்கள் போராடினானல் அதற்கு எதிராக ஏகாதிபத்தியங்கள் கூட்டுவைத்துக்கொண்டு காப்பாற்றிக்கொண்டிருக்கிறது. மக்கள் இப்படி எழுந்து போராடும்போது அவைகள் ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும் கிளர்ந்து எழுந்து விடுவார்களோ என்ற பிரச்சனை அச்சம் அந்த ஏகாதிபத்திய நாடுகளுக்கு உண்டு. ஆகையால் அப்படி எழும் போராட்டங்களை தமக்கு எதிராகவும் தமது மூலதனத்திற்கு எந்த விதத்திலும் பாதிக்காமலும் இருக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு அரசியல் தந்திரங்களை கையாள்கிறது.

    அதை புரிந்துகொள்ள வேண்டுமென்றால், பிரிட்டிஷ் காரரை வைத்து எப்படி காங்கிரஸ் கட்சி இந்தியாவில் தொடங்கி அதையே அதிகாரமாற்றமாக நிகழ்த்தி ஏகாதிபத்தியங்கள் இந்தியாவில் மூலதனத்தை தக்கவைத்துகொண்டார்களோ, அதேபோல் அப்படி கிளர்ந்தெழும் நாடுகளிலும், அதற்கு வாய்ப்புள்ள நாடுகளிலும் தமக்கு தோதான அமைப்புகளை நிறுவவேண்டிய அவசியம் ஏகாதிபத்தியங்களுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது. அதற்கான தகவல்கள் இன்று நாளிதழ்களில் நிறைய வந்துக்கொண்டிருக்கிறது.

    ஆகையால், அவர்கள் நிதி கொடுத்து போராட அதற்கான என்.ஜி.ஓ,க்களை ஏற்படுத்தி வருகிறார்கள். 400 பேருக்கு ஒரு என்.ஜி.ஓ வீதம் இந்தியாவில் உருவாக்கியிருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இதுதான் அமெரிக்கா வகுத்துள்ள திட்டமும் கூட.//


    1.ஊழல் என்பது அன்னாவின் பிரச்சனை அல்ல அது மொத்த இந்தியாவின் பிரச்சனை என்பதை நீங்கள் ஏன் உணரவில்லை
    2. அன்னா ஹசாரே என்.ஜி .ஓ அல்ல அவருடன் சில என் ஜி ஓக்கள் இருக்கலாம்
    3.அன்னாவின் பார்வையில் ஊழல் என்றால் என்ன என்பதை பார்ப்பதை விட உங்கள் பார்வையில் ஊழல் என்றால் என்ன அதை எதிர்க்க என்ன இயக்கம் எடுத்துள்ளீர்கள்
    4.ஏகாதிபத்தியம் இந்திய அரசை மிரட்டுவதாகவும் அதற்கு பயந்துதான் இந்தியா பம்முவதாகவும் எழுதுகிறீர்கள் (இந்த்தியா ஒரு ஏகாதிபத்தியம்தானே அதன் ஊழல் என்பது சர்வ நிச்சயமாக அனைத்து மக்களின் எதிரான செயல்தானே )
    அப்படி மிரட்டாவில்லால் இந்தியா என்கிற அதிகாரவர்க்க ம் அதன் அரசு அதன் உறுப்புகள் இந்தியாவில் வாழும் மக்களுக்கு நன்மையை ஊழலற்ற ஆட்சியை செய்து விடுமா செய்யாதென்றால் ஏன் செய்யாது
    இந்தியாவில் எங்கு மக்கள் ஜனநாயகத்தை அடைய போராடி கொண்டு இருக்கிறார்கள் என தெளிவு படுத்துங்கள்

  8. Anonymous says:

    விவாதகன்:

    1.
    //இது நாட்டை அடிமைப் படுத்தும் பிரச்சினை, நாட்டை ஜனநாயகப் படுத்தவேண்டியப் பிரச்சினை.//

    //ஒர அரசையே ஆளும் வர்க்கங்கள் எவ்வாறு கட்டுப்படுத்துகிறது என்ற பிரச்சினை. இதைதான் மையப் பிரச்சினை என்று கூறுகிறோம். லஞ்சத்தை ஒழிப்பது என்பது ஏகாதிபத்தியத்துக்கு எதிரானது, இங்குள்ள பெரும் நிறுவனங்களுக்கெதிரானது, அதிகாரவர்க்கத்தின் அனைத்துப் பிரிவினருக்கு எதிரானது, பண்ணை உடமையாளருக்கு எதிரானது//

    இதில் ஜனநாயகப் படுத்தப்பட வேண்டியப் பிரச்சினை என்பதும், ஆளும் வர்கப் பிரச்சினை என்பதும், அதிகாரவர்க்கத்தின் அனைத்துப் பிரிவினரின் பிரச்சினை என்பது இந்தியப் பிரச்சினை இல்லையா. அதுமட்டுமல்ல அனைத்து நாட்டிலும் அரசை கட்டுப்படுத்தும் முறைபற்றிய பிரச்சினை.

    2.
    //India Against Corruption (IAC), the NGO that spearheaded the Anna Hazare-led Jan Lokpal Bill movement, has been a kind of by-product of the coming together of a number of organisations that have advanced both operational social work and advocacy-oriented initiatives. The leaders of IAC, such as Arvind Kejriwal and Kiran Bedi, are associated with a number of NGOs that promote both advocacy and operational social work. - Front line Sep. 10-23, 2011//

    //Manish Sisodia, Founder, Kabir
    Promoting RTI for transparency & accountability; Anna Hazare supporter$3,97,000 - Outlook, Sep 19, 2011//

    நான் ஏற்கெனவே கொடுத்துள்ள விமர்சன பகுதியில் உள்ள லிங்கை படிக்கவும். அதே போல் நீங்கள் வலைதளத்தைதானே பயன்படுத்துகிறீர்கள். அவர் எப்படி என்.ஜி.ஓ வாக இயங்குகிறார் என்பதைத்தான் கொஞ்சம் தெரிந்துகொள்ளலாமே. பிடிவாதம் வேண்டும்.

    3.
    //ஏகாதிபத்தியத்தையும், பெரும் முதலாளிகளையும், அதற்கு பங்காளியாக இருக்கும் பண்ணை உடமையாளர்களையும் மறைக்கக் கூடாது. இது நாட்டை அடிமைப் படுத்தும் பிரச்சினை, நாட்டை ஜனநாயகப் படுத்தவேண்டியப் பிரச்சினை.//

    //இது சீர்திருத்தப் பிரச்சனையல்ல. ஒர அரசையே ஆளும் வர்க்கங்கள் எவ்வாறு கட்டுப்படுத்துகிறது என்ற பிரச்சினை. இதைதான் மையப் பிரச்சினை என்று கூறுகிறோம். //

    மேற்கண்ட பார்வைதான் தெளிவாக கூறிவிட்டேனே.

  9. Anonymous says:

    4.
    //ஏகாதிபத்தியம் தனக்கு அடிப்பணியாத போது மிரட்டும். இங்குள்ள ஆளும் கும்பலை மாற்றி வேறொரு ஆளும் கும்பலை தயார் செய்யும். அதிலும் கூட ஒவ்வொரு ஏகாதிபத்தியமும் ஆளுக்கு ஒரு கும்பலை பிடித்து தன் ஆதிக்கத்தை செலுத்த விரும்பும். அது இந்தியா பம்முவதும். அதில் ஆளும் கட்சி பம்முவதும் எல்லாம் நடக்கும். நடக்கிறது. அணு ஒப்பந்தத்தைப் பார்த்தப் பிறகும் கூடவா, நம் ஒன்னும் தெரியாத கல்லுளிமங்கன் ‘மண்’மோகன் சிங்கை பார்த்த பிறகும் கூடவா, உங்களுக்கு இன்னும் அரசியல் தெரியாமல் இருந்துகொண்டிருக்கிறீர்கள்.

    ஊழல் என்பது அனைத்து மக்களுக்குமான செயல் என்பதை என் கட்டுரை முழுக்க சொல்லியும் கூட என்ன விமர்சனம் என்பது புரியவில்லை.

    //ஊழலால் ஏகாதிபத்தியம் எப்படி காலனியாக்குகிறது என்பதும், எப்படி இங்குள்ள பெரும் நிறுவனங்கள் அவர்களுக்கு சேவை செய்து கொள்ளையடிக்கிறது என்பதையும் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும்.//

    //இவர்களை ஒழிப்பதற்கு எப்பொழுது போராடிகிறோமோ, இவர்களை எந்தளவுக்கு பலவீனமாக்குகிறோமோ, வெற்றிகொள்கிறோமோ அந்தளவுக்குத்தான் லஞ்சத்தை ஒழிக்க முடியும்//

    என்று கூறியுள்ளதை படிக்கவும். மீண்டும் மீண்டும் அதே பின்னூட்டத்தையே தந்து சலிப்பூட்டுவதை தவிர்க்க முடியவில்லை.
    எந்த அரசு என்றாலும் மூலதனத்தை கைக்கொண்டிருப்பவர்கள், அதிகாரத்தைக் கைக்கொண்டிருப்பவர்கள் மற்ற அரசு உறுப்புகளை லஞ்சத்தின் மூலம்தான் கட்டுப்படுத்துவார்கள். இதுதான் அரசு பற்றிய மையப் பிரச்சினை என்பதை மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

    இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விசயம் இருக்கிறது. இந்தியா ஒரு ஏகாதிபத்தியம்தானே.

    கண்டிப்பாக கிடையாது. ஆனால் இந்தக் கேள்வியை தெரிந்தே புலம்புடிக்க கேட்கிறீர்கள் என்பது எனக்கு நன்கு தெரியும். இருந்தும் உங்கள் அறியாமையில் இருத்தியே இந்தக் கேள்விக்கு ஆவன்னா பதிலை தரவேண்டியிருக்கிறது. அதற்கு நாணவேண்டியது நீங்கள்தான்.

    இந்தியா ஒரு துணைமேலாதிக்க வல்லரசு. இந்த தெற்காசியாவின் ஒரு ரவுடி அரசு. இங்கு ஏகாதிபத்திய நலனிலிருந்து தன்நலனை வளர்த்துக்கொள்ளும் ஒரு அரசு. ஒரு அகண்ட பாரதத்தை கட்டியமைக்க வேண்டும் என்று கனவு கண்டுக்கொண்டிருக்கிற அரசு.

    ஏகாதிபத்தியத்தின் பண்பு நலன் ஏதும் இதற்கு கிடையாது.

    பல்வேறு தேசிய இனங்களை ஒடுக்கி இந்த ஆளும் வர்க்கம் வளர்ப்பதால் இது ஏகாதிபத்தியம் என்று நீங்கள் வந்திருக்கலாம் (என் கணிப்பு) அப்படி என்றால் ஈழத் தமிழ் தேசிய இனத்தினை அடிமைப் படுத்திய சிங்கள் தேசிய இன அரசு ஒரு ஏகாதிபத்தியமே என்ற தவறான முடிவிற்கே வரவேண்டியிருக்கும்.

    பல்வேறு தேசிய இனங்களை கொண்ட நாடு உலகத்தில் பல இடங்களில் உண்டு. அது ரஷ்ய, சீனா தொடங்கி இந்திய குட்டி நாடான நேபாளம் வரை உண்டு. இங்கெல்லாம் பல்வேறு தேசிய இனங்களை கொண்ட நாடு. இதை பார்த்து ஏகாதிபத்தியம் என்ற முடிவுக்கு வரக்கூடாது.

    அடுத்த பக்கத்து நாட்டினை நோக்கி தன் அதிகாரத்தை, ஆக்கிரமிப்பை விரிவுபடுத்தினால் ஏகாதிபத்தியம் என்றால் (என் கணிப்பு), பாகிஸ்தான் ஆசாத் காஷ்மீரையும், பஞ்சாப் பகுதியினை ஒரு பகுதியினையும், ஆப்கானிஸ்தா பகுதியினையும் ஆக்கிரமிக்கப்பட்டோ, முயற்சி செய்துகொண்டோ இருக்கிறது அதை ஏகாதிபத்தியம் என்ற தவறான வரையறைக்கே வரவேண்டியிருக்கும். அதெ போல் குவைத்தை, ஈரானை ஆக்கிரமித்த ஈராக்கையோ ஏகாதிபத்தியம் என்ற தவறான வரையறைக்கு வரவேண்டியிருக்கும்.

    அப்படியென்றால் ஏகாதிபத்தியம் என்றால் என்ன பண்போடு இருக்க வேண்டும்:

    ஏகாதிபத்தியத்தின் பின்வரும் ஐந்து அடிப்படை இயல்புகளும் உள்ளடங்குமாறு அதற்கு இலக்கணம் கூறியாக வேண்டும்:

    அ) பொருளாதார வாழ்வில் தீர்மானகரமான பங்காற்றும் ஏகபோகங்களைத்ட் ஹோற்றுவிக்கும்படியான உயர்ந்த கட்டுத்துக்கு உற்பத்தியின், மூலதனத்தின் ஒன்றுகுவிப்பு வளர்ந்துவிடுதல்

    ஆ) வங்கி மூலதனம் தொழில் துறை மூலதனத்துடன் ஒன்றுகலத்தலும், இந்த “நிதி மூலதனத்தின்” அடிப்படையில் நிதியாதிக்கக் கும்பல் உருவாதலும்;

    இ) பண்ட ஏற்றுமதியிலிருந்து வேறுபடுத்தப்பட வேண்டியதாகிய மூலதன ஏற்றுமதி தனி முக்கியத்துவம் பெறுதல்

    ஈ) சர்வதேச ஏகபோக முதலாளித்துவக் கூட்டுகள் உருவாகி, உலகையே இவை தமக்கிடையே பங்கிட்டுக்கொள்ளுதல்;

    உ) மிகப் பெரிய முதலாளித்துவ அரசுகளிடையே அனைத்து உலகப் பரப்பும் பங்கிடப்பட்டுக் கொள்ளுதல் நிறைவுறுகிறது;

    என்ற லெனின் ஏகாதிபத்தியம் முதாளித்துவத்தின் உச்சகட்டம் என்ற நூலிலிருந்து எடுத்து தந்துள்ளேன்.

  10. //விடுதலையிலும், ஜனநாயகத்திலும் எந்தளவுக்கு முன்னேறுகிறோமோ அந்தளவுக்கு அதன் பகுதியாக இருக்கிற அத்தனை விசயத்தினையும் அடித்து நொறுக்கி நமக்கானதை பெற்றுக்கொண்டே செல்ல முடியும். அல்லது எப்படி பெறுவது என்ற நம்பிக்கையை பெறமுடியும். முழுமையை நோக்கி மக்களை நகர்த்த வேண்டும். அதற்குத்தான் ஊழல் போன்ற பல்வேறு பிரச்சினைகளை கையிலெடுக்க வேண்டும். இது சீர்திருத்தப் பிரச்சனையல்ல. ஒர அரசையே ஆளும் வர்க்கங்கள் எவ்வாறு கட்டுப்படுத்துகிறது என்ற பிரச்சினை. இதைதான் மையப் பிரச்சினை என்று கூறுகிறோம். லஞ்சத்தை ஒழிப்பது என்பது ஏகாதிபத்தியத்துக்கு எதிரானது, இங்குள்ள பெரும் நிறுவனங்களுக்கெதிரானது, அதிகாரவர்க்கத்தின் அனைத்துப் பிரிவினருக்கு எதிரானது, பண்ணை உடமையாளருக்கு எதிரானது, ஆகையால்தான் இவர்களை ஒழிப்பதற்கு எப்பொழுது போராடிகிறோமோ, இவர்களை எந்தளவுக்கு பலவீனமாக்குகிறோமோ, வெற்றிகொள்கிறோமோ அந்தளவுக்குத்தான் லஞ்சத்தை ஒழிக்க முடியும், அதுபோன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு வழிகாண முடியும். //

    மேற்கண்ட வரிகள் லஞ்சம் ஊழலை எதிர்த்து சமரசமற்ற முறையில் போராடியே தீரவேண்டும் என்கிறது உங்கள் குரல்

    //ஏகாதிபத்தியம் இந்த நாட்டை கொள்ளையடிப்பதற்கும், இங்குள்ள பெரும் நிறுவனங்களை நம் நாட்டின் வளங்களை கொள்ளையடித்து அந்நிய ஏகாதிபத்திய நாட்டிற்கு சேவை செய்வதற்கும் பயன்படுத்தும் முறையே இந்த லஞ்சமாகும். இது நெல்லுக்கு பாயும்போது புல்லுக்கும் கொஞ்சம் பாயும் என்று சொல்வது போல, அந்த அரசு அதிகார மையத்தில் சேவகம் செய்யும் அனைவருக்கும் லஞ்சம் சென்று சேருகிறது. இதில் மக்கள் நேரடியாக கொடுக்கும் லஞ்சம் உடனடியாக உணருகிறார்கள். மற்றவை அரசியல் ரீதியாக மக்களுக்கு உணர்த்தும்போதுதான் புரிந்துகொள்கிறார்கள். இந்த முறையைதான் அரசை கட்டுப்படுத்த ஆளும் வர்க்கங்கள் கையாளும் முறை என்பதை புரிய வைக்க வேண்டும். //

    இரண்டு வகையான லஞ்சத்தை பற்றி பேசுகிறீர்கள்
    என்பதை புரிந்து கொள்ள முடிகிறது

    ஆனால் பெரு நிறுவனங்களுக்கு உதவும் லஞ்சமும்
    தனிமனிதன் ஒரு சர்டிபிகேட் வாங்க கொடுக்கும் லஞ்சமும் அளவு ரீதியில் வேறானவை ஆனால் பண்பு ரீதியில் ஒன்றானவை என்கிறேன் .

    இந்த அரசானது லஞ்ச ஊழலால் சிக்கி தனது போலி ஜனநாயகத்தை கூட நகர்த்தி செல்ல முடியாமல் கிடப்பதை நாம் எல்லாருமே உணரமுடியும் .


    அதென்ன பண்புரீதியில் ஒன்றாக இருக்கிறது என்பதை உணருகிறீர்களா

    100 ரூபாய் கொடுப்பது லஞ்சம் அல்ல என சொன்னால் நீங்கள் 1 கோடி ரூபாய் லஞசத்தையும் சரி என்றுதான் சொல்லவேண்டும்

    அளவு மாற்றமே இடையில் உள்ளது

    லஞ்சம் நீங்கள் சொல்வதை போல ஏகாதிபத்தியம் இந்த நாட்டை கொள்ளை அடிப்பதற்கு தரும் லஞ்சம்
    என்றே வைத்து கொள்வோம் இந்த லஞ்சத்தின் மூலமே
    ஏகாதிபத்தியம் நமது நாட்டை கட்டுபடுத்துவதாகவே கொள்வோம்

  11. 1. நீங்கள் சொல்ல வருவது இந்த லஞ்சபணத்தை குறைக்கவே லஞ்ச ஒழிப்பு என்கிற போராட்டத்தை அன்னா ஹசாரே மூலம் செய்கிறது


    “நான் சொல்வது ஏகாதிபத்தியம் லஞ்சம் கொடுத்து சாதிக்க வேண்டிய காரியத்தை “
    லஞ்சம் கொடுக்காமல் சாதிக்க நினைக்காது என்கிறேன்
    அதற்கான போராட்டதை எல்லாம் அது செய்யாது
    இது முற்றிலும் கற்பனையான வாதம் என்கிறேன்



    2.லஞ்சதத்தின் மக்களை பாதிக்கும் அம்சங்களில் இருந்துதான் இந்த போராட்டத்துக்கு முழுமையானா ஆதாரவு என்பது எழுகிறது .


    3. நீங்கள் சொல்வதுபோல லஞ்சம் ஒரு பிரச்சனை என ஏகாதிபத்தியம் கருதினாலும் எத்தனை என் ஜி ஓக்களை அனுப்பினாலும் அந்த பிரச்சனை மக்கள் அனைவரையும் பீடிக்க கூடிய நிகழ்கால பிரச்சனையாக இல்லாத பட்சத்தில் அப்படி ஒரு போராட்டத்தை அன்னா ஹ்சாரே ஆரம்பித்தாலும் எந்த ஆதரவுக் கிடைக்காது என்பதே உண்மை

    4.அடுத்து ஏகாதிபத்தியம் லஞ்சத்தை கொடுத்து காரியம் சாதிப்பதை தடுக்க என்ன போராட்டம் நாம் செய்துள்ளோம் என்ற கேள்வி உங்களை நோக்கி இப்போது எழுகிறது
    அல்லது இந்த பிரச்சனையை இதற்கு முன் அதாவது அன்னாஹசாரே மூவ்மெண்டு வருவதற்கு முன்பு
    ஏன் சொல்லவில்லை அல்லது போராடவில்லை .

    5.இப்போது மிக சிக்கலான நிலமையில் நீங்கள் நிற்கிறீர்கள் அதாவது லஞ்சம் என்பது தனிமனிதன் பிரச்சனையாக இருந்தாலும் அதற்கெதிராக போராடினால் அது ஏகாதிபத்தியத்தின் நலனுக்கு சாதகமாகிடும் என்பதால் போராடாமல் வாலாதிருப்பது என்கிற நிலைபாட்டை நீங்கள் எடுக்கலாம்

    6.//னமும் ஏதாவதொரு நாட்டில் கலகம் நிகழ்ந்துகொண்டிருப்பதை செய்திகளில் பார்க்கலாம். அவர்கள் அனைவரும் ஆட்சி மாற்றத்தை கோருகிறார்கள். ஆனால் அந்த நாட்டில் ஜனநாயகத்தினை அடைவதற்கு அந்த ஆளும் மையங்களை எதிர்த்து மக்கள் போராடினானல் அதற்கு எதிராக ஏகாதிபத்தியங்கள் கூட்டுவைத்துக்கொண்டு காப்பாற்றிக்கொண்டிருக்கிறது. மக்கள் இப்படி எழுந்து போராடும்போது அவைகள் ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும் கிளர்ந்து எழுந்து விடுவார்களோ என்ற பிரச்சனை அச்சம் அந்த ஏகாதிபத்திய நாடுகளுக்கு உண்டு. ஆகையால் அப்படி எழும் போராட்டங்களை தமக்கு எதிராகவும் தமது மூலதனத்திற்கு எந்த விதத்திலும் பாதிக்காமலும் இருக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு அரசியல் தந்திரங்களை கையாள்கிறது.

    அதை புரிந்துகொள்ள வேண்டுமென்றால், பிரிட்டிஷ் காரரை வைத்து எப்படி காங்கிரஸ் கட்சி இந்தியாவில் தொடங்கி அதையே அதிகாரமாற்றமாக நிகழ்த்தி ஏகாதிபத்தியங்கள் இந்தியாவில் மூலதனத்தை தக்கவைத்துகொண்டார்களோ, அதேபோல் அப்படி கிளர்ந்தெழும் நாடுகளிலும், அதற்கு வாய்ப்புள்ள நாடுகளிலும் தமக்கு தோதான அமைப்புகளை நிறுவவேண்டிய அவசியம் ஏகாதிபத்தியங்களுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது. அதற்கான தகவல்கள் இன்று நாளிதழ்களில் நிறைய வந்துக்கொண்டிருக்கிறது.//

    அன்னா ஹ்சாரே வை தங்களது கைப்பாவையாக வைத்து கொள்வதற்கும் மன்மோகன் சிங்கை வைத்து கொள்வதற்கும் பெரிய வேறுபாடுகள் இருக்கு

    மன்மோகன் சிங்கை தங்கள் கைக்குள் எளிதாக வைத்து கொள்ளலாம் மாறாக ஒரு அன்னாவை உருவாக்கி
    மக்கள் போராட்டத்தை உருவாக்கி அரசை மிரட்டுவதை விட

    //ஆனால் அந்த நாட்டில் ஜனநாயகத்தினை அடைவதற்கு அந்த ஆளும் மையங்களை எதிர்த்து மக்கள் போராடினானல் அதற்கு எதிராக ஏகாதிபத்தியங்கள் கூட்டுவைத்துக்கொண்டு காப்பாற்றிக்கொண்டிருக்கிறது. மக்கள் இப்படி எழுந்து போராடும்போது அவைகள் ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும் கிளர்ந்து எழுந்து விடுவார்களோ என்ற பிரச்சனை அச்சம் அந்த ஏகாதிபத்திய நாடுகளுக்கு உண்டு.//

    இதான் காரணம் இந்த லஞ்ச எதிர்ப்பு நாளை ஏகாதிபத்திய எதிர்ப்பாக ஏன் மாறாது என்கிற சிந்தனை அவர்களுக்கு வரும் ஆகவே அவர்கள் சாய்ஸ் போராட்டமாக இருக்க முடியாது

    ஆகவே உங்கள் கற்பனை கோட்டையில் ஓட்டை விழுந்து விட்டது வெளியே வாருங்கள்

  12. Anonymous says:

    விவாதகன்:

    //1. நீங்கள் சொல்ல வருவது இந்த லஞ்சபணத்தை குறைக்கவே லஞ்ச ஒழிப்பு என்கிற போராட்டத்தை அன்னா ஹசாரே மூலம் செய்கிறது//
    கண்டிப்பாக எந்த வகையில் லஞ்சத்தை குறைக்காது. உலகமயம் தாராளமயம் என்ற ஏகாதிபத்தியத்திற்கு சேவை கொள்கை இருக்கும் வரையில் இதனுடைய பரிமாணம் உயர்ந்துகொண்டே போகும். அதுமட்டும் இல்லாம இதனுடைய நுணுக்கங்கள் கூட உயர்ந்துகொண்டே போகும்.

    // நான் சொல்வது ஏகாதிபத்தியம் லஞ்சம் கொடுத்து சாதிக்க வேண்டிய காரியத்தை லஞ்சம் கொடுக்காமல் சாதிக்க நினைக்காது என்கிறேன்
    அதற்கான போராட்டதை எல்லாம் அது செய்யாது
    இது முற்றிலும் கற்பனையான வாதம் என்கிறேன்//

    லஞ்சத்தை ஒழிக்கும் என்று நான் எங்கும் சொல்லவில்லை.

    ஹசாராவை புரிந்து கொள்ள வேண்டுமென்றால் ஏகாதிபத்தியம் உருவாக்கிய காந்தியை புரிந்துகொள்ள வேண்டும்.

    // பிரிட்டன் ஆட்சியின் போது பார்சிகளும் பணியாட்களும் பிரிட்டனுடன் பெருமளவு வியாபாரம் செய்யத் தொடங்கினர். அவர்கள் மத்தியில் இருந்து தான் தரகர்கள் உதித்தனர். ஏராளமான வியாபாரிகள் தென்னாபிரிக்காவில் தங்கி வியாபாரம் செய்து வந்தனர். அங்கு அவர்கள் நலன்களைப் பாதுகாக்க ஒரு வக்கீல் தேவைப்பட்டார். காந்தியைத் தென்னாபிரிக்காவிற்கு அழைத்துக் கொண்டனர். அவர் அங்கு தங்கியிருந்த போது ‘போயர்’கள் என்ற பிரிட்டன் ஆளுகைக்குட்பட்ட மக்களுக்கும், தென்னாபிரிக்காவை ஆண்டுவந்த வெள்ளையர்களுக்கும் யுத்தம் நடந்தது. இந்த போயர் யுத்தத்தில் பிரிட்டனுக்கு ஆதரவான இந்தியர்களைக் கொண்ட ஒரு தொண்டர்படை அமைத்து படை காக்கும் வேலை செய்தார். இதனை அயர்லாந்து விடுதலை இயக்கப் பத்திரிகைகள் ”காந்தி என்ற நோட்டால் ( ஆபிரிக்காவில் காந்தி தங்கியிருந்த இடம்) இந்தியனின் கீழ்த்தரமான செய்கைகளைச் சொல்ல வார்த்தையில்லை” எனக் கடுமையாகத் திட்டியது.

    முதல் உலகயுத்தம் முடிந்தபின் ஒக்டோபர் புரட்சிக்குப் பின்பு இந்தியா வில் இருந்த நிலைமைகள் காந்தியை மகாத்மா ஆக்கிவிட்டன. பயங்கரமான வறுமை, விலைவாசியேற்றம், வேலையின்மை, கறுப்புச்சந்தை என இந்தியா மோசமான நிலையில் இருந்தது. மான்போர்ட் சீர்திருத்தங்கள் வந்தது. பிரிட்டீஸ் ராஜ்யத்துக்குள்ளேயே தன்னாட்சி அளிப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது. இது ஏகாதிபத்திய விசுவாசிகளை வென்றெடுத்து புரட்சியாளர்களை நசுக்குவதற்கான திட்டமாகும்.

    எனவே தரகுமுதலாளிய வர்க்கம் மக்களைத் தமது கைகளிலேயே அடக்கி வைத்திருக்கவும், மக்களைக் காட்டி அரசாங்கத்தை நிர்ப்பந்தித்து காலனியை அரைக்காலனியாக மாற்றுவதற்கும் உகந்த ஒரு தலைவனைத் தேடியது. காந்தியை அரசியலுக்கு வருமாறு வேண்டிக் கொண்டனர். அவரும் ஏற்றுக் கொண்டார். அவர் வருவதற்கு முன்பே பெரும் முதலாளித்துவப் பத்திரிகைகள் அவரை ’மகாத்மா காந்தி’ என வானளாவப் புகழ்ந்தன. காந்தி வந்ததும் தனது திட்டத்தை வெளியிட்டார். அது முழுக்க நிலப்பிரபுக்களின், தரகுமுதலாளிகளின் கோரிக்கைகளாகும்.

    இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் சவ்வுரி சவுராவில் ஒரு பொலீஸ் நிலயத்தைத் தாக்கி 22 பொலீஸ்காரர்களைக் கொன்றுவிட்டனர். இது ஒத்துழையாமை இயக்கத்தின்போது நடந்தது. உடனே காந்தி வன்முறையை கண்டித்து ஒத்துழையாமை இயக்கத்தை வாபஸ் வாங்கிக் கொண்டார். அப்பொழுது அவர் “நான் ஒரு இமாலயத்தவறு செய்துவிட்டேன். சுயராஜ்யத்தின் நாற்றம் மூக்குவரை அடிக்கிறது” என்றார். அப்போது சிறையில் இருந்த சுபாஸ் சந்திரபோஸ் கோபத்துடன் ‘நீ ஒரு தலைவனாக இருப்பதற்கு லாயக்கு இல்லை. இமயமலையில் சந்நியாசியாக இருக்கவே லாயக்கு.” என்றார். இதற்கு காந்தி திமிராக பதில் அளித்தார். “நீ ஒரு கைதி, உனக்கு பேச உரிமை இல்லை, கைதி என்பவன் அரசியல் ரீதியாக இறந்தவன்!’

    1930 இல் ஏகாதிபத்திய எதிர்ப்பு வெகுஜன இயக்கங்கள் இந்தியாவைச் சூழ்ந்து கொண்டன. சில நகரங்களை ஆயுத எழுச்சிகள் மூலம் மக்கள் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விட்டனர். இந்த வெகுஜன இயக்கங்களைத் தடுப்பதற்காகத்தான் காந்தி ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கினார். அப்போது வைஸ்ராய்க்கு எழுதிய கடிதத்தில் காந்தி கூறுகிறார், “ஒரு வன்முறையற்ற இயக்கம் தொடங்கப்படாவிட்டால் வன்முறை இயக்கம் தொடங்கி விடும். வன்முறை ஆட்சி வளர்ந்து வருகிறது. எனவே வளர்ந்து வருகிற கட்சியின் கட்டமைக்கப்படாத வன்முறைக்கும், பிரிட்டிஸ் பேரரசின் கட்டமைக்கப்பட்ட வன்முறைக்கும் எதிராக அகிம்சா சக்திகளை அவிழ்த்து விடுவதற்கு இதுதான் தருணம்.”

    இதுதான் காந்தியின் அகிம்சையின் வர்க்க உள்ளடக்கம். காலனிய அமைப்பு முறைக்குச் சேதம் விளைவிக்காமல் இந்தியத்தரகுப் பெருமுதலாளிய நிலப்பிரபுத்துவ வர்க்கங்களின் நலன்களை அடையக் காந்தியின் ஏகாதிபத்திய மூளை கண்டுபிடித்த தத்துவமே அகிம்சை ஆகும்.
    //
    முழுவதும் படிக்க http://senthanal.blogspot.com/2011/09/blog-post_29.html

  13. Anonymous says:

    விவாதகன்:


    மக்கள் போராட்டங்களை திசை திருப்பவும் சரியான பாதைக்கு திரும்பாமல் இருக்கவும் அனைத்து வகையாகவும் தடையும் செய்வார்கள் அல்லது மடைமாற்றி விடுவார்கள்.

    எகிப்தில் இருந்த அதிபரை அமெரிக்காதான் தன் கைப்பாவையாக வைத்திருந்தது. இருந்தும் அந்த அரசாங்கம் (கட்சி) மக்கள் மத்தியில் அம்பலப்பட்டப் பிறகு வேறு ஒரு ஏகாதிபத்தியத்திற்கு சாதகமான ஒரு அரசை கொண்டு வரும் நோக்கத்திலிருந்து அந்த இராணுவத்தை தனக்கானதாக கொண்டு வந்தது. அதுபோல் அரபு நாடுகளின் அம்பலப்பட்டுப்போன மக்கள் திரண்டு எழுந்து போராடுவதற்கு தயாராக இருந்த நாடுகளை எல்லாம் ஆள் மாற்றம் மட்டும் ஏற்படுத்தி அரசு ஆளும் வர்க்கத்தினை காப்பாற்றுவதும் தன் நலத்திலிருந்துதான்.

    அதெ போல் இப்படி வெளியேறி அமெரிக்காவின் தயவில் வாழ்ந்து வந்த ஒரு ஆப்கான் மன்னரை மீண்டும் தனக்கு தேவையான பொம்மையாட்சிக்கு அங்கு அதிபராக கொண்டுவந்தது. அது போல் எல்லா நாட்டிற்கும் அதை நடைமுறைப்படுத்தும். ஆக மொத்தத்தில் இறுதியில் தன் இருப்பை ஏகாதிபத்திய இருப்பை தக்கவைத்துக்கொள்வதில் இறுதி வரை திட்டங்கள் தீட்டும். இப்போது இந்தியாவில் மோடியை தயார் செய்யவில்லையா. அதற்காக அமெரிக்கா மோடியை புகழ்ந்த்து சிறந்தவர் என்ற பிம்பத்தை தயார் செய்துகொண்டிருக்கிறது.

    இரண்டு கட்டுரை Frontline, Outlook ஆகிய இதழ்களின் பின்னூட்டத்தை இதில் கொடுத்தபோதும் அதை படிக்காமல் எப்படி என் கருத்தை மறுக்கிறீர்கள்.

    அன்னா ஹசாரேவுக்கு முன் போராடவில்லை என்று யார் சொன்னது. ஹவாலா ஊழல், போபர்ஸ் ஊழல் என்று எல்லா ஊழலை எதிர்த்தும் போராடியிருக்கிறார்கள். அதைவிட முக்கியம் ஏகாதிபத்தியத்தியம் காலனியாக்கும் ஒவ்வொரு முயற்சியை எதிர்த்து போராடுவதும் ஊழலை எதிர்த்தப் போராட்டம்தான். உலகமயத்தை எதிர்த்த, தனியார்மயத்தை எதிர்த்த ஒவ்வொரு போராட்டமும் லஞ்சத்தை ஊழலை எதிர்த்த போராட்டம்தான். இதை ஒழிக்கப்படும் போதுதான் இன்று உள்ள ஊழலின் மாபெரும் பரிமாணத்தை ஒழிக்கமுடியும். தனியுடமை சொத்தினை (நிலப்பிரபுத்துவத்தையும், முதலாளித்துவத்தையும்) முழுமையாக ஒழிக்கப்படும் போதுதான் ஊழல் முற்றிலும் ஒழிக்க முடியும்.

    திட்டமிட்டே காந்திக்கு கொடுத்த அதே விளம்பரத்தை இன்று அன்னாவுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. மற்றப்படி ஏதோ இவர்தான் எடுத்தார் என்பது சுத்தப் பேத்தல். அதே போல் இன்று மக்கள் மத்தியில் வெட்ட வெளிச்சமாகி முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அம்பலமாகியிருக்கிறார்கள்.
    2010 காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஊழல்(8000 கோடி)
    2010 2ஜி அலைவரிசை ஊழல்(60,000 கோடி)
    2010 கர்நாடகா நிலா ஊழல்
    2010 ஐ.பி.எல் ஊழல்
    2010 ஆதர்ஸ் அடுக்கு மாடி குடியிருப்
    2010 தேவாஸ் மல்டிமீடியா வான்வெளி ஊழல்
    2011 இயற்கை தாதுவளம் ஊழல், ரெட்டி சகோதரர்கள்
    2011 இயற்கை வளம் பெட்ரோல் ஊழல், ரிலையன்ஸ் அம்பானி
    இதனை மதிப்பிட்டால் உலக பட்ஜட்டையே போட்டுவிடலாம். இந்தளவிற்கு எப்போதும் இந்தியா நாற்றமெடுத்தது இல்லை. அதனால் மக்களின் எதிர்ப்பு முன்பைவிட பெரிய அளவில் பிரதிபலிக்கத்தான் செய்கிறது. ஆனால் இது ஒரு முன்னறிவிப்பு. இதுதான் மக்கள் இன்றுள்ள நிகழ்கால பிரச்சினை. அதை எதிர்த்துதான் ஆளும் வர்க்கத்தில் இருக்கிற இன்னொரு கட்சி தன் ஓட்டுக்காக அம்பலப்படுத்தி ஓட்டுக்கேட்கிறது. அந்தளவுக்கு அம்பலமாகியிருக்கிறது. ஆகையால் ஏகாதிபத்தியவாதிகள், இங்குள்ள ஆளும் வர்க்கங்கள் அடுத்த மாற்றுக்கு முன்னெச்சரிக்கையாக தயார் செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறது. அதை மேற்கண்ட நிலையிலிருந்து தெரிந்து கொள்ளலாம். ஊழலில் ஆசியாவில் 4ஆவது இடத்தை இந்தியா பிடித்திருக்கிறது.

    //இப்போது மிக சிக்கலான நிலமையில் நீங்கள் நிற்கிறீர்கள் அதாவது லஞ்சம் என்பது தனிமனிதன் பிரச்சனையாக இருந்தாலும் அதற்கெதிராக போராடினால் அது ஏகாதிபத்தியத்தின் நலனுக்கு சாதகமாகிடும் என்பதால் போராடாமல் வாலாதிருப்பது என்கிற நிலைபாட்டை நீங்கள் எடுக்கலாம்// இப்படி பிதற்ற உங்களால் எப்படி முடிகிறது.

    //ஒர அரசையே ஆளும் வர்க்கங்கள் எவ்வாறு கட்டுப்படுத்துகிறது என்ற பிரச்சினை. இதைதான் மையப் பிரச்சினை என்று கூறுகிறோம். லஞ்சத்தை ஒழிப்பது என்பது ஏகாதிபத்தியத்துக்கு எதிரானது, இங்குள்ள பெரும் நிறுவனங்களுக்கெதிரானது, அதிகாரவர்க்கத்தின் அனைத்துப் பிரிவினருக்கு எதிரானது, பண்ணை உடமையாளருக்கு எதிரானது, ஆகையால்தான் இவர்களை ஒழிப்பதற்கு எப்பொழுது போராடிகிறோமோ, இவர்களை எந்தளவுக்கு பலவீனமாக்குகிறோமோ, வெற்றிகொள்கிறோமோ அந்தளவுக்குத்தான் லஞ்சத்தை ஒழிக்க முடியும், அதுபோன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு வழிகாண முடியும். // என்று என் கருத்தை படித்த பிறகும் கூட என்ன விவாதிகிறீர் என்று தெரியவில்லை.

  14. Anonymous says:

    விவாதகன்:

    மன்மோகன் சிங்கை கைப்பாவையாக அவர்கள் வைத்துக்கொண்டிருப்பது சிறப்பானது எளிமையானதாக நம்பிக்கையானவராக இருக்கலாம். அவர் அம்பலமாகாமல் மக்கள் அவரை எதிர்த்து கிளர்ச்சி செய்யாமல் இருக்கும் வரையில்தான். பிறகு மாற்று ஏற்பாடு செய்யாமல் அவர்கள் எப்படி தன் மூலதனத்தை இந்தியாவில் தக்கவைத்துக்கொள்ள முடியும். தன் காலனியை எவ்வாறு தக்கவைத்துக்கொள்ள முடியும்.

    மிரட்டுவது, பணியவைப்பது, அல்லது மாற்றை தயார் செய்வது. இப்படி எல்லா கோணங்களிலும் அது சிந்திக்கவே செய்யும்.

    ஏகாதிபத்திய எதிர்ப்பாக மாறுவதற்கான போராட்டங்கள் இருப்பதால்தான் நம்மை மடைமாற்றி விடுகிறார்கள். எப்படி பிராக்‌ஷ்னாக அதாவது தனிதனிப் பிரச்சினையாக பார்ப்பது லஞ்சம், மதம், சாதி, இனம், பெண்ணடிமை, பொருளாதாரப் பிரச்சனை, சுற்று சூழல் என்று எல்லா வகையிலும் தனித்தனியாக உடைத்து விடுவது. அதாவது இவற்றுக்கெல்லாம் ஒரு பொதுவான கொள்கையிருக்கிறது. அந்த பொதுவான கொள்கையான ஏகாதிபத்திய ஆதரவு கொள்கையான உலகமயக் கொள்கை இருக்கிறது என்பதெல்லாம் மூடிமறைத்து விட்டு, லஞ்சமா இங்குள்ள அதிகாரி, அரசியல் வாதி மட்டும் காரணம் என்பது (இவர்களும், பெருமுதலாளிகளும், ஏகாதிபத்தியவாதிகளும் ஒன்றாக சேர்ந்த கூட்டு என்பதை மறைப்பது), மத பிரச்சினையா இங்குள்ள மதங்கள் ஒன்றுக்கு ஒன்று காரணம் என்று தூண்டிவிடுவது, அதற்காக தனியாகப் போராட மற்றொரு மதத்தின் மீது காரணம் கற்பிப்பது. ஆனால் இந்தியாவை ஜனநாயகப் படுத்துவது அதாவது மதத்திலிருந்து அரசை பிரிப்பது என்பதை மறைப்பது. சாதி பிரச்சினையா சாதியில் உள்ள ஆளும் வர்க்கங்கள் ஒன்றுபட்டு, ஒடுக்கப்படும் மக்களை பிரித்து மோதவிடுவது, தனி அணியாக கட்டுவது, ஆனால் சாதிக்கு அடிப்படையான பண்ணையடிமைமுறையை ஒழிப்பது, முதலாளித்துவத்துக்கு முந்தைய உற்பத்தி முறையை ஒழிப்பது என்பதை மறைப்பது. பெண்ணடிமைத் தனமா ஆண்களுக்கு எதிராக போராட சொல்வது, ஆனால் பின் தங்கிய உற்பத்தி முறையும், சந்தை உற்பத்தி முறையும் பெண்களை அடைத்து வைப்பது அல்லது அவர்களையே சந்தையாக மாற்றுவது என்ற உண்மையை மறைப்பது. இப்படி துண்டு துண்டாக உடைப்பது. இனப் பிரச்சினையா இரண்டு இனத்திற்குள்ளே மோத விடுவது அல்லது ஒரே இனத்தையே ஏற்றத்தாழ்வான வளர்ச்சியை காட்டி மோதவிடுவது, தெலுங்கானா போல் ஒரு இனத்திற்குள்ளே ஏற்றத்தாழ்வான வளர்ச்சிக்கு ஏகாதிபத்தியத்தாலும், இங்குள்ள பின் தங்கிய உற்பத்திமுறையாலும் இந்த ஏற்றத்தாழ்வான வளர்ச்சி என்பதை மூடிமறைப்பது. இப்படி இருக்கும் பிரச்சினைகளை கண்டிப்பாக ஏகாதிபத்திய எதிர்ப்பாக மாறாமல் பார்த்துக்கொள்வது. ஆகையால் இவை எல்லா வற்றிலும் எந்த மையப்பிரச்சினையையும் தொடாமல் பார்த்துக்கொள்வது என்பதுதான் என்.ஜி.ஓ.க்களின் வேலை. தேவைப்பட்டால் காங்கிரஸ் ஆரம்பித்ததுபோல் ஒரு கட்சியைகூட ஆரம்பிப்பார்கள்.

    எடுத்துக்காட்டாக லஞ்சம், ஊழல் ஆகியவைப் பற்றி சொலும்போது, லஞ்சம் கொடுத்து தனது மூலதனத்தை பரப்பி அடிமைப் படுத்தும் ஏகாதிபத்தியத்தையோ அதனுடைய நிறுவனங்களையோ தண்டிப்பதோ, அல்லது இங்குள்ள பெரும் நிறுவனங்கள், தீர்மானிக்க கூடிய அதிகாரிகள், ஆட்சியாளர்கள் ஆகியோரது சொத்துக்களை பறிமுதல் செய்வது என்ற விசயத்தின் மையப் பிரச்சினைக்கே வராமல், வெறும் நீதிபதி, பிரதமர் ஆகியவற்றை சேர்ப்பது பற்றியே பேசி மக்களை திசைமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
    ஆகையால் உங்கள் கோட்டையில் இருப்பது ஓசோன் படலம் கிழிந்த அளவுக்கு ஓட்டை. பொறுமையாக என்னுடைய கட்டுரையை பயிலவும். அனைத்து கருத்துக்களையும் உள்வாங்கவும். பிறகு விமர்சனம் செய்யவும். ஆனால் எந்த காலத்திலும் என்.ஜி.ஓ வாக இருந்து விமர்சனம் செய்யாதீர்கள். அவர்கள் நாட்டின் போராட்டத்தை திசைதிருப்பி துரோகம் செய்திகொண்டிருப்பவர்கள். அவர்கள் நம் நாட்டின் துரோகிகள். அவர்களை விலக்கி எப்போது நாம் செயல்படுகிறோமோ அப்போதுதான் சரியானவை சாத்தியமாகும். அப்படி போராட புரட்சிகர அமைப்புகள் உள்ளன. அவர்களுடைய கருத்துக்களை உள்வாங்கவும். மார்க்சியத்தை பயிலவும். சரியாக புரிந்துகொண்டு இணைந்து செயல்படுங்கள். வாழ்த்துக்கள்.

  15. //வர்களுடைய கருத்துக்களை உள்வாங்கவும். மார்க்சியத்தை பயிலவும். சரியாக புரிந்துகொண்டு இணைந்து செயல்படுங்கள். வாழ்த்துக்கள்//

    நீங்களே இங்கு வந்து அனானியாக பேசுகிறீர்கள்

    உங்களின் அடையாளத்தை மறைத்து கொண்டு இணைந்து செயல்படுங்கள் என்றால் எப்படி செயல்படுவது

    உங்கள் அரசியல் செயல்திட்டம் என்ன என்பன போன்ற விபரங்கள் எங்கே சென்று தேடுவது

    நான் கேட்பது நியாயமான கேள்விதானே இது ஏன் உங்களுக்கு தோன்றவில்லை

  16. விவாதகன்:

    இப்போது ஏதாவது அமைப்பில் ஆதரவாளராகவோ அல்லது உறுப்பினராகவோ சேர்ந்து செயல்படுகிறீர்களா என்பது தெரியவேண்டும். ஏனென்றால் புதிதாக அமைப்பைத் தேடுகிறீர்களா அலல்து நீங்கள் ஏற்கெனவே இருக்கும் அமைப்பில் நிறைவடையாமல் வழி தேடுகிறீர்களா என்பது அறியவேண்டும். அப்படி இருந்தால் கருத்துக்களை விவாதிப்பது என்ற அடிப்படையிலேயே இருக்கும். எந்த அடிப்படையில் உங்களை அனுகுவது என்று முடிவு செய்யும் முன் உங்கள் அரசியல் தகவலை தெரிந்துகொள்ள வேண்டும். இந்த பின்னூட்டம் என்னை தொடர்புகொள்ள வழி ஏற்படுத்தும்.

  17. cWP என்கிற கம்யூனிஸ்டு ஒர்க்கர்ஸ் பிளாட்பார்மில் ஆதரவாளனாக உள்ளேன்

    விவாதகன் என்கிற ஐடிக்கு மட்டும் செல்கிறது (புரொபைலுக்கு செல்கிறது )

    உங்கள் மெயில் ஐடி கொடுங்கள்

    விவாதத்தை தொடருவோம்

  18. netwebdiscuss@gmail.com

    இதுதான் எனது மெயில் முகவரி. மேற்கண்டவர்கள் தனிப்பட்ட முறையில் எனக்கு விமர்சனங்கள் அனுப்பலாம்.

    நன்றி, தொடருவோம்....