Vladimir Lenin

1.A revolution is impossible without a revolutionary situation; furthermore, not every revolutionary situation leads to revolution.
Vladimir Lenin

2.
Any cook should be able to run the country.
Vladimir Lenin

3.
Crime is a product of social excess.
Vladimir Lenin

கர்ம யோகம் கூறுகிறது "கர்மத்தை செய்; பலனை எதிர்பாராதே "என இதை பல்வேறு விதமாக உரைநிகழ்த்தி நியாயபடுத்தி இருக்கிறார்கள்  கீதையின் இந்த போதனையை ”வேலையை செய் பலனை எதிர்பாராதே” என கூறுவதாக வைத்துகொண்டால்,
அது முதலாளித்துவத்துக்கு அல்லது ஒடுக்கும் ஒரு அமைப்புக்கு எப்படி உதவி செய்கிறது என்பதை காணலாம்.

தொழிலாளி தனது வேலையில் இருந்து  முற்றிலும் அந்நியப்பட்டுத்தான் போய் விட்டான் அதை புறாவய உலகமே நிகழ்த்துகிறது தனது ஆன்மீக விடுதலைக்காக அவன் சுய ஈடுபாட்டுடன் நிகழ்த்தவில்லை எங்கெல்ஸ் எழுதுகிறார் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் முதலாளித்துவம் பிறந்த போது

//உழைப்பு, தனித்தனித் தொழிலாளர்களுக்கிடையே மேலும் மேலும் பிரித்துக் கொடுக்கப்பட்டது. எனவே, முன்பெல்லாம் ஒரு முழுப் பொருளையும் உருவாக்கிய ஒரு தொழிலாளி இப்போது அந்தப் பொருளின் ஒருபகுதியை மட்டுமே உற்பத்தி செய்தான். இந்த உழைப்புப் பிரிவினை, பொருட்களை முன்பைவிட விரைவாகவும் மலிவாகவும் உற்பத்தி செய்வதைச் சாத்தியம் ஆக்கியது. இது ஒவ்வொரு தொழிலாளியின் பணியையும், இடையறாது திரும்பத்திரும்ப நிகழும் எளிதான எந்திர இயக்கமாகக் குறைத்தது//

வேலையே (கர்மா) சிறு சிறு பகுதிகளாக பிரித்து செய்யப்படும்போது அதன்மீது அவனின் பற்று அல்லது பாசம் அல்லது அதன் பயன் அவனை சார்ந்ததாக இல்லாமல் போய் விட்டது முடிவாக அவன் செய்வது இப்போது கர்மயோகமே(?) என்றால் அவனுக்கு ஆத்ம விடுதலை கிடைத்து இருக்கனும் ஏன் கிடைக்கவில்லை  எங்கெல்சின் நூல்லில் இருந்து

//ஆனால், அதேவேளையில் அத்தொழில்துறைகள் பெரும் முதலாளிகளின் கைகளில் மாட்டிக் கொள்ளவும் செய்தன. மேலும் அவற்றின் தொழிலாளர்கள் தங்களிடம் மிஞ்சியிருந்த கொஞ்சநஞ்ச சுதந்திரத்தையும் பறிகொடுத்தனர். பெரும் முதலாளிகள் மிகப்பெரிய தொழிற்கூடங்களை அமைப்பதன்மூலம் சிறிய கைவினைத் தொழில் விற்பன்னர்களை மிகப் பெருமளவில் வேலையிழக்கச் செய்தனர். இத்தொழிற்கூடங்கள் பல செலவுகளைச் சிக்கனப்படுத்தின; மிக விரிவான உழைப்புப் பிரிவினைக்கும் வழிவகுத்தன. இதன் காரணமாய்ச் சீரான பட்டறைத் தொழில் மட்டுமல்ல, கைவினைத் தொழில்களும்கூடப் படிப்படியாக ஆலை முறையின் ஆதிக்கத்தின்கீழ் வந்தன.

இவ்வாறாகவே, நாகரிகமடைந்த நாடுகளில், தற்போதைய காலகட்டத்தில், ஏறத்தாழ உழைப்பின் அனைத்து வடிவங்களும் தொழிற்கூடங்களில் நிறைவேற்றப்படுகின்றன. அனேகமாக வேலையின் அனைத்துப் பிரிவுகளிலும், கைவினைத் தொழிலும், பட்டறைத் தொழிலும் விழுங்கப்பட்டுவிட்டன. இந்த நிகழ்ச்சிப்போக்கு, முன்னெப்போதையும்விட மிகப் பெருமளவில், பழைய நடுத்தர வர்க்கத்தைக் குறிப்பாக சிறிய கைவினைத் தொழில்முனைவோரைச் சிதைத்து அழித்துவிட்டது; தொழிலாளர்களின் வாழ்நிலையை முற்றிலுமாக மாற்றி அமைத்துவிட்டது; இரண்டு புதிய வர்க்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன//

இரண்டு புதிய வர்க்கங்கள் உருவான இந்த இடத்தில் கர்மா எப்படி இருவருக்கும் ஒன்றாக இருக்கும் என கீதை சொல்லுமா சொல்லாது ஏனெனில் அது நிலபிரபுத்துவ காலகட்டதில் எழுதப்பட்டு அது கடவுள் சொன்னதாக் ஏற்றிவிடப்பட்ட தத்துவம்

தொழிலுக்கு உரிய கர்மயோகம் இல்லாத போது கர்மயோகம் என்று எதைத்தான் சொல்கிறார்கள் என்பது அந்த கிருஸ்ணனுக்குத்தான் வெளிச்சம்  ஆலை முறை தோன்றியவுடன் இரண்டு பெரும் வர்க்கங்களும் சுரண்டலும் தோன்றிய கட்டத்தில் மேலே சொன்ன கர்மா என்பது இரண்டாகி விட்டது  அதாவது ஒடுக்குபவனின் கர்மா ஒடுக்கப்படுபவனது கர்மா

ஒடுக்கப்படுபவன் தனது கர்மாவை மாற்ற கிளர்ந்தெழுந்து புரட்சி செய்கிறான் இதை எந்த மதமாவது ஆதரிக்கிறதா

மாறாக இந்த உலகம் ஒரு சோதனை சாலை அதில் நீ பாசாவது பரலோகத்தின் இருக்கும் கடவுளை வேண்டுவதில் தான் உள்ளது என அடுத்த குண்டை போடுகிறது  அடடா செயலின் மூலம் விடுதலை என்றீர்களே என நாம் திருப்பி கேட்டால்
திரு திரு வென முழிக்கிறது 

இயந்திரதனமாக வேலை வாங்கப்படுபவனுக்கு தியானம் , பஜனை என்பவை தீர்வாக வைக்கப்படுகிறது

தனது உழைப்பில் இருந்து அன்னியமான மனம் தற்காலிகமாக இந்த தியானபுள்ளியில் தன்னை மறக்கிறது

அல்லது மறைக்கிறது

ஏன் கர்மாவே ஆனந்தமாகவல்லவா இருக்கவேண்டும் ஏன் இல்லை  அந்த கர்ம யோகத்தின் செயல்வடிவம்
ஆனந்த தரவல்லவா வேண்டும்  ஏன் தரவில்லை

அங்குதான் சமூகத்தின் வர்க்கபிரிவினை வருகிறது  ஒருவர்க்கம் உழைப்பில் ஈடுபட
இன்னொருவர்க்கம் சுரண்டுகிறது அவர்களின் சுகபோகவாழ்க்கைக்கு காரணம் கேட்கிறான் முன்சென்ம கர்மா என மழுப்புகிறது மதம்

அதெப்படி பெரும்பான்மையான மக்கள் ஒட்ட சுரண்டப்பட முன்சென்ம கர்மாமட்டும் காரணமாக இருக்கமுடியும் என்ற கேள்வியை வைக்கிறான்

அப்போ உங்க தத்துவங்கள் மிக குறிப்பிட்ட ஒருசாரருக்கானது எனவே அது பாட்டாளிகளுக்கு எதிரானது என முழங்குகிறான்

அந்தோ பரிதாபம் இந்த சாமியார்கள் மீண்டும் அவனை விடுவதாக இல்லை

மதம் எனும் அபினியை மேலும் பலவகையில் ஊட்டுகிறார்கள் நீ பக்தி செய் முக்தியடைவாய் என்கிறார்கள்

பக்தியோ பல்வேறு படிக்கட்டுகளால் ஆனாது முதல் படி குரு குரு பக்தி முக்கியம் என்றால் குருவை தேடு என்கிறது மதம்

குருவோ நித்தியானந்தாவை போல  கார்பரேட் சாமியார்கள்  அவர்களோ பெண்களின் கர்மாவை அறிய அவர்களின் உடல்மீது ஒப்பந்தம் போடுகிறார்கள்  இது ஒருவகை கர்மா என கூறப்படுகிறது

எந்த கர்மத்தை அறிய ஒருவன் பக்தனானானோ அதே கர்மம் அவனை வீழ்த்துகிறது  சாமியார்கள் முதலாளிகளின் கூட்டு புதிதாக என்ன சொல்கிறது  நீ என்னை காப்பாற்று நான் உன்னை காப்பாற்றுகிறேன்

இங்கே இடையில் ஒரு சிலர் வேண்டும் அவர்கள்தான் முதலாளித்துவ எழுத்தாளர்கள்

ஜெயமோகன் போன்றவர்கள் இதை பல்வேறுவிதமாக வியாக்கியானம் செய்யவேண்டும்

-------------------------------------------------------------
---தர்மத்தின் இயக்கமுறையின் நுட்பமான  சித்திரம் ஒன்று இந்த அழகிய பாடலில்

உள்ளது. பிரபஞ்ச நிகழ்வை கூர்ந்து  நோக்கினால் இந்த வினா எழும். 'எப்படி

ஒரு கருத்து பொருள் வயமான  வெளிப்பாடாக ஆகிறது?' இந்தப்

பொருள்வயமான பிரபஞ்சத்தில் ஒரு கருத்து உள்ளுறைந்திருப்பதை நாம்

காண்கிறோம். பொருண்மை விதிகளாகவும் விதிகளுக்குள் உள்ள

ஒத்திசைவாகவும் உள்ளது அந்தக் கருத்து. அவ்வாறு இந்த பிரபஞ்சத்தை

குறுக்கியபடியே சென்றால் இறுதியில் அதை ஒரு கருத்துநிலையாக சுருக்க

முடியுமென்றால் அதை பிரம்மம் என்று கூறலாம். பெளத்த சொற்களில் தம்மம்

அல்லது தர்மம் எனலாம். நவீன மொழியில் பிரபஞ்ச மனம் (Cosmic Mind)

எனலாம்.அந்த பிரபஞ்ச மனம் அல்லது பிரம்மம்  அல்லது தர்மம் எப்படி பொருள்வயமாக 

நாம் காணும் இந்த பெரும் விரிவாக தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது?

அதற்கான விளக்கமே அந்தப்பாடலில் உள்ளது. அதை எளியதோர் கவித்துவ

உருவகமாக கூறிச்செல்கிறது கீதை. இந்த கவியுருவகத்தை அது வேதங்களில்

இருந்து பெற்றுக்கொண்டு தனக்குரிய தத்துவார்த்தமான கோணத்தில்

விரிவாக்கம் செய்கிறது.
------------------------------------------

இவர்கள் சொல்லும் கருத்து எது அந்த கருத்தைத்தான் ஏற்கனவே இரண்டாக உடைத்து விட்டார்கள்


அதாவது :பிரபஞ்ச இயக்கத்துக்கு மழை காரணம்
மழைக்கு காரணம் வேள்வி இங்கு வேள்வி என்பது கர்மா என்றால்
ஒட்டு மொத்த சமூகத்தின் செயலே கர்மா என கொண்டால் அதனை
பற்றற்று செய்ய சொல்கிறார்கள் கர்ம யோகிகள்

அதாவது கூலி உயர்வுக்கான போராட்டமே தவ்றென கொள்ளலாம்
தன் பெண்டாட்டி பிள்ளைக்காக வேலைக்கு போவதே தவறென கொள்ளலாம்
அப்படி செய்தாலும் அதை உலகத்தின் சேமத்துக்கு செய்யவேணும் என்கிறார்கள்

சங்கம் வைப்பது கூலி கேட்பதா மூச் )



ஹெகல் கூறிய கருத்துமுதல் வாதம் இதுதான் பிரம்மம் பிரபஞ்ச மனம் காஸ்மிக்
ஆன்மா கடவுள் இதெல்லாம் என்ன ஏற்கனவே இந்த கருத்து இருக்கிறது அது தன்னை வெளிபடுத்த இயங்குகிறது என சொல்லி அவராவது ஒரு இயக்கவியல் கோட்பாட்டை வைத்தார் ஆனால் இவர்களோ
கருத்து உலகின் புறவய உலகை கடக்க என்ன செய்யவேண்டும் பற்றற்று செயல் செய்ய வேண்டும் என்கிறார்கள்
-----------------------------
கட்டுரையை மறுபடி வாசிக்கவும்
----------------------------------
பூசணிக்காயை இவர்கள் எப்படி மறைத்தாலும் நன்றாக தெரிகிறது
சுயநலம்

ஒரு வர்க்கத்துக்கானது இல்லை என்றால் வர்க்கமாக பிரிந்த சமூகத்துக்கு என்ன விளக்கம் இருக்க முடியும்

இவற்றை ஆராயாமல் பேசாமல் நீங்கள் கர்ம யோகத்துக்குள்ளோ பக்தியோகத்துக்குள்ளோ விழுந்தால்

மனம் பிளவுபடுவது உறுதி பிறகு கஞ்சாதான் மருந்தாகும்



அடுத்து உழைப்பானது ஒரு பண்டமாகி எப்படி அவனது அன்றாட செலவுக்கு மட்டுமே
வாய்பளிக்கும் ஒரு விசயமான பின்பு அதன் மேல் பற்றோ பாசமோ வைக்கமுடியாதென்றும்
அதன் பலனை எதிர்பாராமல் ஒருவன் வாழவே முடியாதெனவும் ஆகிறது

அதெப்படி என கீழே எங்கெல்ஸ் எழுதுவதை பாருங்கள்
//பாட்டாளிகளின் உழைப்பு முதலாளிகளுக்கு விற்கப்படுவது எந்த நிலைமைகளின் கீழ் நடைபெறுகிறது?

உழைப்பு என்பது ஏனைய பண்டங்களைப் போலவே ஒரு பண்டமாகும். எனவே, அதன் விலையும் பிற பண்டங்களின் விலையைத் தீர்மானிக்கும் அதே விதிகளாலேயே தீர்மானிக்கப்படுகிறது. பெருவீதத் தொழில்துறை அல்லது கட்டற்ற போட்டியின் – இந்த இரண்டும் ஒன்றிலேயே முடியும் என்பதை நாம் காண இருக்கிறோம் – ஆதிக்கத்தில் சராசரியாக ஒரு பண்டத்தின் விலை எப்போதும் அந்தப் பண்டத்தின் உற்பத்திச் செலவுக்குச் சமமானதாக இருக்கிறது. எனவே உழைப்பின் விலையும் அந்த உழைப்பின் உற்பத்திச் செலவுக்குச் சமமானதாக இருக்கிறது.

உழைப்பின் உற்பத்திச் செலவு என்பது, தொடர்ந்து வேலை செய்துவருவதற்கான சக்தியைத் தொழிலாளிக்கு வழங்கவும், தொழிலாளி வர்க்கத்தை அழிந்துபோய் விடாமல் தடுக்கவும் தேவைப்படுகின்ற பிழைப்புச் சாதனங்களின் அளவையே துல்லியமாய்க் குறிக்கிறது. எனவே, இந்த நோக்கத்துக்குத் தேவைப்படுவதைக் காட்டிலும் அதிகமாகத் தொழிலாளி தனது உழைப்புக்காகப் பெறப்போவதில்லை. வேறு வகையாகக் கூறுவதெனில், உழைப்புக்கான விலை அல்லது கூலியானது, ஆகக் குறைந்ததாக, வாழ்க்கைப் பராமரிப்புக்குத் தேவைப்படுகின்ற குறைந்தபட்ச அளவாக இருக்கும்.

என்றபோதிலும், வணிக நிலைமை சிலவேளை நன்றாகவும், சிலவேளை மோசமாகவும் இருப்பதால், தொழிலதிபர் தமது பண்டத்துக்குச் சிலவேளை அதிகமாகவும், சிலவேளை குறைவாகவும் பெறுவதைப் போன்றே தொழிலாளியும் சிலவேளை அதிகமாகவும், சிலவேளை குறைவாகவும் பெறுகிறார். ஆனால் தொழிலதிபர் சராசரியாக, நல்ல நிலைமையிலும் சரி, மோசமான நிலைமையிலும் சரி தமது பண்டத்துக்கு அதன் உற்பத்திச் செலவைக் காட்டிலும் கூடுதலாகவோ குறைவாகவோ பெறுவதில்லை. அதுபோலவே தொழிலாளி சராசரியாக, அவனது குறைந்தபட்சத் தேவைக்கு அதிகமாகவோ குறைவாகவோ பெறுவதில்லை.

உற்பத்தியின் அனைத்துப் பிரிவுகளையும் பெரும் தொழில்துறை எந்த அளவுக்கு அதிகமாகத் தன் வசப்படுத்திக் கொள்கிறதோ அந்த அளவுக்குக் கண்டிப்பாக, கூலி தொடர்பான இந்தப் பொருளாதார விதி செயல்படுகிறது.//


உழைப்பு சக்தி என்பதை அழிந்துவிடாமல் இருக்கத்தான் கூலி தரப்படுகிறது

எனவே அந்த கூலியை எதிர்பார்க்காமல் வேலை செய்ய முடியாது

//உழைப்பின் உற்பத்திச் செலவு என்பது, தொடர்ந்து வேலை செய்துவருவதற்கான சக்தியைத் தொழிலாளிக்கு வழங்கவும், தொழிலாளி வர்க்கத்தை அழிந்துபோய் விடாமல் தடுக்கவும் தேவைப்படுகின்ற பிழைப்புச் சாதனங்களின் அளவையே துல்லியமாய்க் குறிக்கிறது.//

ஆக சமகாலத்தில் நிலவும் சமூகத்தினை அதன் செயலினை எடுத்துரைக்க இயலாததாக கீதை இருக்கிறது

1.பலனை எதிர்பார்க்காத செயல் என ஒன்று இருக்கமுடியாது
2.வர்க்கமாக பிரிந்த சமூகத்தில் செயல்களின் பலனும் வர்க்கத்தின் சார்பானது
3.ஆசையை ஒழித்தால் துன்பமில்லை என்பது எப்படி குறைபட்ட கருத்தோ
அதை போலவே பற்றற்ற செயலும் விடுதலை தரும் என்பதும் குறைபட்ட கருத்தே
--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================
[ Read More ]

எளிமையான மனிதன் பாசமிகு படைப்பாளி

மெல்லிய உணர்வுகளை தூவிடும் மழை
எனது நண்பன் நிலாரசிகன்

அவரின் புத்தக வெளியீட்டு விழாவுக்கு

அனைவரையும் அழைக்கிறேன்
------------------------------------------------------
சுட்டி:http://www.nilaraseeganonline.com/2010/12/blog-post_09.html


முன் கவிதைச்சுருக்கம்:

ஒரு நீண்ட பயணத்தின் துவக்கம் சில வருடங்களுக்கு முன்பு துவங்கியது. சிற்றிதழொன்றில் படித்த கவிதையொன்றின் வரிகள் உயிரெங்கும் வியாபித்து என்னை ஆட்கொண்டு நர்த்தனமாடிக்கொண்டிருந்த நேரம்...அவ்வரிகளை எழுதிய கவிஞனுடன் பேச வேண்டும்  என்கிற ஆவலில் தொடர்புகொண்டபோது கவிதை குறித்து அவன் பகிர்ந்துகொண்ட விஷயங்கள் புதியதொரு பரிணாமத்தை உணர வைத்தது. அவன் சி.வெங்கடேஷ். அதன் பிறகு அவன் மூலமாக அறிமுகமான கவிஞர்.க.அம்சப்ரியா,மு.ஷரிகிருஷ்ணன் வழியே பல கவிதை நூல்களும் கவிதை பற்றிய விவாதங்களும் என்னை வந்தடைந்தன.புதியதொரு கவிதையுலகத்தின் சாளரத்தை திறந்துவிட்ட இம்மூவர்களுக்கும் இந்நேரத்தில் நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன்.குறிப்பாக நவீன கவிதை குறித்த பல கேள்விகளுக்கு சளைக்காமல் "புன்னகை"யுடன் பதிலிட்ட அம்சப்ரியாவிற்கு எப்போதும் என் அன்பும் நட்பும். மற்றும் நட்சத்திரங்களாய் என் வானம் நிறைத்திருக்கும் அனைத்து நண்பர்களுக்கும், இந்நூலை சாத்தியப்படுத்திய அன்பர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்..

இணையத்தால் இணைந்த இதய நண்பர்களுக்கு,

இம்மாதம் 26ம் தேதி  என் கவிதை தொகுப்பு "வெயில் தின்ற மழை" வெளியாகிறது. உயிர்மை பதிப்பகம் இதனை வெளியிடுகிறது. தமிழின் முக்கிய/முன்னணி இலக்கிய ஆளுமைகள் கலந்துக் கொள்கிறார்கள். அனைவரும் வெளியீட்டு விழாவிற்கு வந்திருந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறேன்.

நட்புடன்,
நிலாரசிகன்.
nilaraseegan@gmail.com


--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================
[ Read More ]

சுட்டி:வினவு கட்டுரை

//செக்ஸ்னா அது ஐஞ்சு நிமிசத்து மேட்டரு, வந்தமா, முடிச்சமான்னு போறதுக்கே ஜனத்துக்கு டைம் இல்ல, அதப்போயி இந்த நைனா 26மணிநேரமும் பேசிக்கினு, எழுதிக்கினு, போய் ஒரு நல்ல டாக்டரப்பாருயா வெண்ணை!////

வினவில் வந்த ஒரு கட்டுரையில் வந்த வரிகள் இவைதாம்

எல்லாமே பரிணாம வளர்ச்சியின் வழி வளரும் போது செக்ஸில் மட்டும் மிருக த்தின் உணர்வு அளவுக்கே தோழர்கள் சிந்தனை செய்வது வியப்பளிக்கிறது

நாம் தொடர்ந்து இவர்களை படித்து பார்த்து வருவது வேண்டுமென்றே நொட்டை சொல்வதற்கல்ல

மனிதனின் பல்வேறு உணர்வுகளுக்கு இவர்களின் பதில் என்னவாக இருக்கிறது என்பதை காணவே

சாரு நிவேதிதா அவரது தேகம் நாவல் இவற்றை விட்டு விடலாம் (அதை படித்து அதன் மீது விவாதிக்கலாம் )

ஆனால் கலவி என்கிற விசயத்தில் பார்பனியம் எத்தகைய  டக்குமுறைகளை கொண்டு இருந்ததோ மதம் எந்தமாதிரியான கருத்து கொண்டு இருந்ததோ அதையே ஒரு புரட்சிகர  கட்சியின் தோழர்களும் கொண்டிருப்பது
நம்பமுடியாத உண்மை

வந்தமா முடிச்சமா என ஐந்து நிமிட கலவி முடியும் வேலை என்கிற போது

அதை எந்த பரிணாமத்தில் சொல்கிறார்கள் என நாம் யோசிக்க வேண்டி இருக்கிறது

இன்றைய சூழலில் ஒரு தனிநபருக்கு மன உடல் ஓய்வுக்கான மிகப்பெரிய விசயமாக கலவி பார்க்கப்படும் சூழலில்

நிறைய பிரச்சனைகளுக்கு கலவி அருமருந்தாக அமைகின்ற வேளையில்

ஒரு விஞ்ஞானபார்வையே இல்லாத மடையர்களை போல பேசும் இவர்கள்

லீணாவின் கவிதையில் வெளிப்படும் எள்ளலை எப்படி புரிந்துகொண்டு இருப்பார்கள என நாம் யோசிக்க  தூண்டுகிறது

காதலை குறித்து முன்னர் ஒரு கருத்தை வெளியிட்டு இருந்தார்கள் அதை கொண்டே

அடுத்து ஒரு கட்டுரையில் முதலாளித்துவ உலகில் இருக்கும் அன்பு பாசம் போன்றவை எல்லாம் பொய் என்பதுபோல ஒரு கட்டுரையும் படித்து

புதிய கலாசார நோக்கில் இந்த உணர்வுகளை இவர்கள் எப்படி அனுகுவார்கள் என்கிற தோராயமான கருத்துக்கு வராவிட்டாலும்

மனித மனம் அதன் வெளிப்பாடுகள் அதன் ஏக்கம் தனிமனிதனின் விருப்பு வெறுப்புக்கள் அவனது வெளிப்பாடுகள்
அவனது இலக்கியம் அவனது தனிமை

இவற்றின் மீது வெறும்  வெற்றிடம் மட்டுமே கொண்டு கடந்து செல்கிறார்கள்

நாளைய மனிதனுக்கு இவர்கள் கொண்டு செல்வது வெறும் வறட்டு தத்துவம் தான் என்பது தெளிவாக விளங்கிட்டு 

1.மனிதனின் செக்ஸ் என்பது இவர்கள் சொல்வதுபோல இச்சை தீர்பதற்கு மட்டுமல்ல
(நான் காமத்திலிருந்து கடவுளுக்கு என போதிக்கவில்லை )என்றாலும்
காமம் அதன் பரிணாமத்தை புரிந்து கொள்ளாமல் உளரும் உளரல்களை கண்டிக்கிறேன்

2.இலக்கியவாதிகளின் அற்பதனத்தை விமர்சிக்கும் இவர்கள்
இலக்கியமே அற்பத்தனமானது என சொல்வதன் மூலம்
மீண்டும் இலக்கியத்தை குறித்த அறியாமையில் இருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துகிறார்கள்

3.சமகால இலக்கியத்தின் நிழலை கூட தொடாத இவர்கள்
வாழும் காலத்திலேயே பின்நோக்கியே செல்கிறார்கள்

--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================
[ Read More ]

சுட்டி: http://www.jeyamohan.in/?p=10813


//ஒருவேளை மார்க்ஸிய இலட்சியவாதம் மற்றும் தத்துவத்தின் பங்களிப்பு காலம்செல்லச் செல்லக் குறையலாம்.
ஆனாலும் மானுடச் சிந்தனையின் வளர்ச்சியில் அதன் பங்களிப்பை எவரும் மறுக்க முடியாது// ஜெயமோகனின் கட்டுரை இந்த இடத்தில் முடிகிறது இவ்வாறு விசயங்களை பிரித்து பிச்சி போடுகிறது

மார்க்சியத்தை இலட்சியவாதம் என சொல்வதும் மதம் என சொல்வதும் ஒன்றுதான்

நடைமுறைக்கு ஒத்துவராத எதுவுமே மார்க்சியமல்ல நாம் நடைமுறைக்கு ஒத்துவருவதாக எதை கோருகிறோம் என்பது அவர்கள் எதை கோருகிறார்கள் என்பதும்தான் இங்கே வேறுபாடு தவிர மார்க்சியத்தில் எந்த வேறுபாடும் இல்லை

பாட்டாளி வர்க்கமே இழப்பதற்கு ஏதுமில்லாத வர்க்கம் என்ற நிலையில் அதன் முன்னனி பங்கை வகிக்கிறது புரட்சிகர மாறுதல் மூலமே நிலவும் ஒடுக்குமுறையான அரசை ஒடுக்கும் வர்க்கங்களை ஒடுக்கமுடியும் என்பதை இலட்சியவாதம் என சொல்லிவிட்டு

அதற்கான செயல்முறையை செய்த செய்துகாட்டிய மார்க்சியத்தை வளர்த்தெடுத்த லெனின் ,ஸ்டாலின் , மாவோ வை மறுக்கும் இவர்கள் வேறொரு நடைமுறையை முன்வைக்கவேண்டும்

இனியும் ஒரு காலத்தில் அமையும் சமூகம் கூட மார்க்சியத்தை புறந்தள்ள முடியாதென ஆருடம் கூறுபவர் ஏன் நடைமுறையை ஏற்றுகொள்ளவில்லை

ஏனெனில்  தத்துவத்தின் உரைகல் நடைமுறைதான் சொகுசாக பேசி திரிய இன்றைக்கு பலநூறு தத்துவங்கள் இருக்கலாம் ஆனால் அதனுடன் வைக்கப்பட்டு பூசிக்கப்பட வேண்டியதல்ல மார்க்சியம்

அடுத்து

//மார்க்ஸ் சொன்ன மார்க்ஸியம் என்பது ஒரு வரலாற்றுவாதம். அன்றைய சமூகவியல் தரவுகளின் அடிப்படையில் மனித குலத்தின் வரலாற்றை ஒட்டுமொத்தமான நகர்வாக உருவகித்துக்கொண்ட மார்க்ஸ் அந்த வரலாற்றுக்குள் உள்ளுறையாக ஒரு வளர்ச்சிப்போக்கு இருப்பதாக ஊகித்தார். அது பழங்குடி வாழ்க்கையில் இருந்து நிலப்பிரபுத்துவத்துக்கும் அதில் இருந்து முதலாளித்துவத்துக்கும் நகர்கிறது.//

மார்க்சியத்தின் இரு பெரும் பிரிவுகள் அல்லது விளக்கங்கள் என நாம் மார்க்ஸ் முன்னிருத்தியது

வரலாற்றியல் பொருள்முதல்வாதம்
அடுத்து இயக்கவியல் பொருள்முதல்வாதம்

வரலாற்றை புரிந்துகொள்ளவே மார்க்சுக்கு உதவியது இயக்கவியல் பொருள்முதல்வாதம் எனும் நிலையில்

காலை மறுத்து இவர் தலையை மட்டும் பார்க்கையிலெயே தெரிகிறது மார்க்சியத்தை அரைகுறையாக புரிந்து கொண்டு இருக்கிறார் அல்லது
கபடமாக மார்க்சியத்தை திரித்து சொல்கிறார் என்பதே

இயக்கவியலின் படி ஒரு பொருளுக்குள் உள்ளுறைந்த முரண்பாடுகளே அதன் வளர்ச்சிக்கு காரணம் அது அனுவானாலும் அண்டமானாலும் சரி என்கிற கோட்பாட்டில் இருந்தே

அதை வரலாற்றுக்கு பொருத்தி பார்த்து வரலாற்றில் இந்த முரண்பாடு வர்க்க முரண்பாடாக இருப்பதை உரைக்கிறார்

முதலாளியும் தொழிலாளியும் நிலவுவது சமூகத்தின் முரண் இயக்கமே என்பதை நாம் மறுத்துவிட்டு மார்க்ஸ் சொல்லும்
தத்துவத்தை சரி என எப்படி சொல்வது
சொல்கிறார் அதுதான் ஜெயமோகன்

//லெனின் ருஷ்யாவின் அன்றையநிலைக்கு ஏற்ப ஒரு விளக்கம் அளித்தார். அன்று அரசு பலவீனமானதாக இருந்தது. படைவீரர்கள் அரசுக்கு எதிராக கிளர்ந்தார்கள். அவர்களின் உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டு அவர்கள் விரும்பிய கோஷத்தை எழுப்பிச் சட்டென்று தலைநகரைத் தாக்கி அரசைக் கைப்பற்றினார் லெனின். உற்பத்தி சக்திகளில் உற்பத்தி உறவுகளில் எந்த மாற்றமும் உருவாகவில்லை. //

ஒரு பெரிய புரட்சியையே மறுத்தலிக்கும் இவர் சொல்கிறார் அவர்கள் விரும்பிய கோசத்தை சொன்னால் புரட்சி வந்துவிடுமாம் இதைவிட கேலிகூத்து இருக்குமா

இந்தியாவில் ஆர் எஸ் சின் கோரிக்கையை ஏற்றுகொண்டதாக சொல்லி கம்யூனிஸ்டு கட்சி ஆட்சியை பிடிக்க முடியுமா ?

//அரசைக் கைப்பற்றியபின் இந்த மாற்றங்களை அரச அதிகாரத்தின் துணையுடன் மேலிருந்து கீழே கொண்டு செல்லலாம் என்றார். அதாவது மார்க்ஸ் சொன்னதற்கு நேர் தலைகீழ். இதுவே லெனினியம். லெனின் செய்தவற்றை மார்க்ஸ் அறிந்தால் கல்லறையில் நெளிவார் என்ற ஃபூக்கோவின் சொற்றொடரின் பின்புலம் இதுவே.//

மேலிருந்து செயல்பட வேண்டிய அவசியத்தை லெனின் ஏன் வலியுறுத்தினார்

கீழிருந்து அரசதிகாரம் கட்ட முடியாமல் இருப்பதன் காரணம் என்னவென நாம் ஆராயாமல் கீழிருந்து கட்ட சொல்வது சரியல்ல

நிலவுகிற சமூகத்தின் அதிகாரத்தை மாற்றி பாட்டாளி வர்க்கத்தின் கையில் கொடுப்பதே கீழிருந்து அதிகாரத்தை மாற்றுவதுதான்

அதல்லாமல் மேலே வேறு யார் இருப்பார்கள் என ஜெமோவுக்கே வெளிச்சம்

நாளையே புரட்சி நடத்தான் பாட்டாளி வர்க்க படை ஆட்சியை கைபற்றி ஆவண செய்யும் இதற்கு மேலிருந்து கீழிருந்து என் பாகுபாடில்லை

அறிவில் சிறந்த பாட்டாளிகளை மூட்டை சுமக்க வைப்பது என கம்யூனிசத்தை புரிந்து கொண்டால் உங்களை ஒரு முட்டால் என துணிந்து கூறலாம்
ஏனெனில் மூளை உழைப்புக்கும் உடல் உழைப்புக்கும் வித்தியாசத்தை கலைந்த நிலையில் ரெடிமேடாக இருக்கவில்லை புரட்சி நடந்து முடிந்தவுடன் அந்த அரசு

அது நீண்ட கால போராட்டத்தின் பிரசவித்த குழந்தை அதன் கைகளிக் அம்பாரத்தை ஏற்ற இயலாது

மார்க்சிய தத்துவம் , லெனின் அரசியல் , ஸ்டாலினின் அரசமைப்பு எல்லாமே மார்க்சியத்தின் வழியமைக்கப்பட்ட வடிவங்களே ஒன்றை ஏற்றுகொண்டு மற்றொன்ற தள்ள முடியாது

நமக்கு ஸ்டாலின் மேலும் மற்றவர்களின் மேலும் விமர்சனம் இருக்கு என்பது மார்க்சியத்தின் மீதான விமர்சனம் அல்ல

முடிவாக ஒரு சமூக மாற்றத்தை விஞ்ஞான ரீதியாக அமைக்கையில் அது தோற்று போவதற்கான வாய்ப்புகளை கம்யூனிச மூலவர்கள் அறிந்தே இருந்தார்கள்

அது தோற்று போவதில் பெரும்பங்கு வகிப்பது எதிர்புரட்சி மற்றும் மற்ற முதலாளித்துவ நாடுகளின் சதி உள்ளடங்கியதாகும்

இவரை போன்ற வலதுசாரிகள் இதை முழுக்க மறைத்து மொத்தமாக சோசலிச கட்டமைப்பு என்பதே ஒத்துவராது எனத்தான் சொல்லி திரிகிறார்கள்

ஒரு ராக்கெட்டை ஏவுதல் என்பது ஒரு மின்னனு சாதனைத்தை படைத்தல் என்பது எப்படி தவறு நேராமல் செய்ய முடியாதோ அதைபோலவே ஒரு விஞ்ஞான அடிப்படை யான சமூகத்தின் விசயத்தில் நூற்றுக்கு நூறு சரியாக நடக்கவேண்டும் என சொல்வது சிறுபிள்ளைத்தனம்


--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================
[ Read More ]


மொக்கை இல்லாத உலகத்திலே
நிம்மதி இல்லை
உன் பதிவில்லாத உலகத்திலே
சிந்தனை இல்லை சிந்தனை இல்லை

இணையத்திலே பவனிவந்தால்
கண்ணுறங்கவில்லை
உன் பதிவை கண்ட நாள் முதலாய்
கணினி மூடலை கணினி மூடலை


உன் பதிவை பார்ப்பதற்கே
கணினி வந்தது
பின்னூட்டம்  போடவென்றே
கை துடித்தது
பதிவர்மனம் உனக்கெனவே
காத்திருக்குது  இந்த கணினி
தாண்டி நாடி உனை
தேடி ஓடுது தேடி ஓடுது

மொக்கை யென தெரிந்துமுன்னை
படித்து வைத்தேனே
மொக்கையாக பின்னூட்டமும்
போட்டு வைத்தேனே

இன்று நாளை என்று நானும்
காத்திருக்கிறேன்
என்று நீயும் நிறுத்துவாயோ
உன் பதிவை உன் பதிவை
--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================
[ Read More ]



சுட்டி:http://www.jeyamohan.in/?p=7305

தெரிந்தோ தெரியாமலோ சாதிய  கலாசாரத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம் ஆனாலும் படித்து நாகரீகமாக வாழும் நம்மிடம் நமது சொந்த சாதி பற்றிய  பெருமையோ தாழ்மையோ வேண்டாம் என ஒதுக்கி இருக்கிறோம் .

சாதி மூலம் நமக்கு ஏதும் வரலாறு  இருந்தால் அது தேவையற்றது . ஏனெனில் சாதி ஒழிக்கப்படவேண்டிய
இடத்துக்கு நாம் வந்துவிட்டோம் ஆனால் செயமோகன் போன்ற வலதுசாரிகளுக்கு அது பிடிப்பதில்லை
நாலுபேர் கூடுமிடத்தில் சாதியை  சொல்லாமல் உரையாடுவது முட்டையை கக்கத்தில் இடுக்கிட்டு பேசுவது போல
இருக்கிறது என்கிறார். 


ஒருவேளை தனது சொந்த அனுபவத்தில் அப்படி சொல்லலாம் அவர் ஆனாலும் தமிழகத்தின் நாலுபேர்
கூடுமிடங்களில் சந்திப்புகளில் சாதியை  சொல்லிவிட்டு அறிமுகம் செய்வது முட்டையை அல்ல கோழியை கக்கத்தில்
இடுக்கிட்டு பேசுவது போலத்தான் ஏனெனில் இறங்கிய இரண்டு கோழிகளும் சண்டைபோட ஆரம்பிக்கும்
பிறகு அது மனிதர்களுக்கிடையேயான சண்டையாக மாறிவிடும் .

//ஆனாலும் சாதி சார்ந்த இழிவு, மேன்மை இரண்டில் இருந்தும் எளிதில் விலகிவிட முடியாது. அது மனப்பழக்கமாக அடிமனத்தில் நீடிப்பது. அதை வெல்ல மிகச்சிறந்த வழி என்பது அதை கேலியாக, பகடியாக ஆக்கிக்கொள்வதே. ஒளித்து வைப்பதல்ல.//

சாதிசார்ந்த தாழ்மை ,உயர்வு என்பது மனபழக்கமென்றால் அதை பகடியாக்கி பேசுவதும் மனபழக்கமாகிவிடும்

ஜெயமோகன் சொல்கிறார் சாதியை ஒழிப்பதற்கான மனபழக்கத்தை அல்ல அதை தொடர்வதற்கான மனபழக்கத்தை குறித்து
சிகரெட்டை குறித்து நமக்கு மன பழக்கம் இருக்கலாம் கஞ்சாவை குறித்து மனபழக்கம் இருக்கலாம் அதற்காக விளையாட்டாக
கஞ்சா குடிப்பது அதிலிருந்து மனபழக்த்தை விடுவிக்காது மற்றொரு பழக்கமாக்கிடும்

அடுத்து சாதி குறித்த ஜெயமோகன் நினைப்பதை அனைவரும் நினைக்க இயலாது அவர்கள் சாதி குறித்து கட்டமைத்த பிம்பம் மட்டுமே இருக்கும் குறிப்பாக செயமோகன் இப்படி சொல்கிறார்

//சாதி சார்ந்து புறவயமாக ஆராயும் ஒருவர் இரு விஷயங்களில் இருந்து எளிதில் விடுபட முடியும். ஒன்று சாதிமேன்மை அல்லது கீழ்மை என்பது வெறும் ஒரு பொருளியல் கட்டுமானமே. நிலத்தை அடைந்த சாதி மேல்சாதி. இழந்த சாதி கீழ்சாதி. இந்த மிக எளிமையான வாய்ப்பாடு சாதிகளின் அடுக்கதிகாரத்தை எளிதில் விளக்குகிறதென்பதை காணலாம். இந்த அடுக்குமுறைக்கு இன்று பொருளே இல்லை.
//


நிலத்தை இழந்த சாதி கீழ் சாதி என்றால் அவன் இழந்த நிலத்தை பெறாமல் கருத்து ரீதியாக விடுபட முடியாது
அதற்கு போராடவே செய்வான்

போராடுபவனுக்கு சாதி பற்றிய பேச்சு ஒரு பகடி அல்ல அது இரத்தத்தில் எழுதப்பட்ட வரலாறு

கக்கூஸ் அள்ளுபவன் சாக்கடை சுத்தம் செய்யும் சகோதரனுக்கு சாதி பேச்சு மாலை நேர விருந்தில் தெரிக்கும் பகடியாக இருக்காது ஆக இந்த மனிதர்களுக்கு செயமோகன் பேசவில்லை  அவர் மேல் சாதியிலேயே சம அந்தஸ்தில் இருக்கும் சாதிகளை கலந்துறவாட சொல்கிறார்.

எப்படி சாதி குறித்து கேலி பேசிக்கொண்டு  சாதியை தக்கவைப்பது என்பதே அது
ஏன் சாதியை தக்க வைக்கனும் சாதியை தக்கவைக்காமல் பார்பனியத்தை தக்கவைக்க முடியாதெனும் கவலை ஜெயமோகனுக்கு
--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================
[ Read More ]

இணையம் பலரை எழுத வைக்கிறது அதில் எழுத்தாளனும் அடக்கம் ஏன் இப்படி கூறுகிறேன் என்றால் எழுத்தாளர்களும் அறிவு ஜீவிகளும் மட்டுமே பகிர்ந்து கொள்ள கூடியதான விசயங்களும் அதற்கான தளமும் மட்டுமே எண்பதுகளில் அதற்கு முன்பு இருந்தது .

பல்வேறு அரசியல் சமூக தனிமனித விருப்பு வெறுப்புக்களை கொட்டும் இடமாக தீர்வு தேடும் அதை அடிப்படையாக கொண்டு விவாதிக்கும் இடமாக இணையம் உருவாகி கிடப்பதை ஜெயமோகன் போன்றவர்கள் ரசிப்பதில்லை என தெரிகிறது http://www.jeyamohan.in/?p=10748

ஏனெனில் இவற்றுள் எழுப்பப்படும் பல கேள்விகள் இவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் மாயையை உடைக்கிறது இந்திய தேசம் , மகாத்மா காந்தி பாரதி போன்ற எந்த கருத்து நிலையிலும் கட்டமைக்கப்பட்ட பிம்பமானது உடைகிறது .

இவற்றை யார் விரும்புவதில்லை என்றால் வலது சாரிகள் விரும்புவதில்லை
அவர்களுக்கு இந்த வாழ்க்கையே போதுமானதாக மாலை நேர விருந்தாக அமைகிறது

புரட்சி பத்தி பேசுவது பீர் புரட்சியாக நக்கலடிக்கப்படுகிறது காரணம் இணையத்தில் எழுதுபவர்களின் சம்பளம் ;ஐம்பதினாயிரம் சம்பளம் வாங்குபவன் புரட்சி பத்தி பேசகூடாதென தடைவிதிக்கிறார்கள்.

ஏன் பேச கூடாது எனும் கேள்வி ஒரு புறமும் ,ஏன் பேச வேண்டும் என்ற கேள்வி இன்னொரு புறமும் எழுப்புவோம் பொதுவுடமை புரட்சி வர்க்க , சாதி ஒழிப்பு இவை எல்லாம் அனைவருக்கும் பொதுவானவை .

சிந்தனை என்பது எப்படி மூளை இருக்கிற எல்லா மனிதனுக்கும் வேண்டுமோ அதை போல மாற்றம் கோரும் புரட்சிகர கருத்துக்கள் எல்லா மனிதனுக்கும் வேண்டும் வாங்குகிற சம்பளமா ஒரு மனிதனின் வர்க்க சார்பு நிலையை தீர்மானிக்கிறது ? இல்லை அவரது செயல்பாடுகள் ஆமாம் இணையம் செயல்பாடுகளை கண்காணிக்க கூடிய முறையில் அமைக்கப்பட்டதல்ல .

அப்படியே இதழியலை எடுத்துகொண்டாலும் எத்தனை எழுத்தாளர்களின் வாழ்க்கை பொதுவெளியில் வந்துள்ளது என்பது கேள்விக்குறி ;வாங்குகிற சம்பளம் தீர்மானிப்பதில்லை என்ற முடிவுக்கு பிறகு நாம் அடுத்த கேள்விக்கு போனால்

ஏன் பேச வேண்டும் என்ற கேள்வியை எதிர்கொள்கிறோ ம்தற்போது இணையத்தில் இருக்கும் நண்பர்களும் தோழர்களும் யார் ?

அவர்கள்  எல்லாம் இரண்டாயிரம் சம்பளம் வாங்கி கொண்டு இருந்தவர்கள் தான் தனது திறமையால் ஐம்பதாயிரம் வாங்கிறார்கள் .

இவர்கள் சம்பளம் அதிகமானவுடன் தனது அரசியல் சார்பு நிலையை மறந்து
பூர்வா தன்மை ஆனாதால் தவறே ,

ஆனால் தனது சார்பு நிலையை மாற்றி கொள்ளாமல் இருப்பதற்காக இவர்களை நாம் பாராட்ட வேண்டும்
//இவர்கள் எழுதுவதை அப்படியே விழுங்கி அதே மனநிலையை பங்குபோட்டுக்கொள்ளும் நடுத்தர, உயர்நடுத்தர வாசகர்கள் நம் சமூகத்தில் கணிசமானவர்கள் இருக்கிறார்கள். இந்துவிலோ டைம்ஸ் ஆஃப் இண்டியாவிலோ அவுட்லுக்கிலோ ஒரு மாவோசஆதரவுக் கட்டுரையை வாசித்து ஆவேசமாக ஆதரித்து பேசிவிட்டால் தங்களை முற்போக்கினராக எண்ணி நிறைவுகொள்ளக்கூடியவர்கள் இவர்கள்.//

அறிவு பூர்வமாக பேசவேண்டிய இடத்தில் ஏன் இந்த எழுத்தாளன் மனநிலை உணர்வு என போகிறான் உணர்வு பூர்வமாக பேசவேண்டிய இடத்தில் கலை எழுத்து என்ற போர்வையில் தப்பிக்கிறான் என்பதெல்லாம் அவர் வலதுசாரியாக இருக்கிறான் என்பதே காரணம்

ஒரு மனநிலையை பங்கு போட்டு கொள்ளா முடியுமா முக்கியமாம மாவோயிசத்தை எல்லாம் மனநிலை சார்ந்த விசயமாக பார்க்கவே முடியாது
அதில் பங்கு போட்டு கொள்ள என்ன இருக்கிறது

"உலகில் எங்காவது ஒரு மூலையில் துயரபடுபவர்களுக்கு ஆதரவாக எவன் சிந்தித்தாலும் அவன் என் தோழனே "

என்ற சேகுவேராவின் வரிகள் எதை பங்கு போட சொல்கிறது

உதவும் மனப்பான்மையை அன்பைத்தானே தவிர மனபான்மை என மூடி மறைக்கும் ஒரு ஹிப்பி மனநிலையையா சொல்கிறது அப்படி சொல்லி தப்பிப்பதுதான் ஜெயமோகன் போன்றவர்களது வேலை .


ஆக செயமோகன் கோரும் உண்மை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரானது
ஒடுக்கும் வர்க்கத்தின் கட்டமைப்பை பாதுகாக்கு வகையானது .

எந்த தகுதியின் அடிப்படையில் இதை கோருகிறார்

அரசியல் வாதியாக இல்லாமல் வழிப்போக்கனாக இல்லாமல்
எழுத்தாளனாக இதை எப்படி பிரிக்கமுடியும் யாருக்காவது கடமையில் படிநிலைகள் பொறுப்பு கூட குறைய இருக்கிறதா

இந்த இடத்தில் தான் தனது அரசியல் சார்பு நிலையை மறைக்கிறார் செயமோகன்

எழுத்து என்பது எப்படி வர்க்க சார்பற்றதாக இருக்க முடியாதோ அப்படியே எழுத்தாளன் என்பவனும் வர்க்கசார்பற்றவன் இல்லை

ஆகவே வர்க்க சார்பு இல்லாதா எழுத்தில்லை என முடிவான பின்பு

வர்க்க சார்பற்ற எழுத்தாளன் என்பது கற்பனையே

செயமோகன் குட்டி பூர்சுவா என்பது
அவரது சார்புநிலையில் விளைவுதான்

அவர் கோரும் உண்மை என்பது நடப்பில் இருக்கும் ஒடுக்குகிற உண்மை
ஆனால் அது பல வேடம் தாங்கி வருகிறது



--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================
[ Read More ]




தரகர்கள் ஆட்சி


விபசாரம் செய்யும் தரகனை  தமிழ் சினிமாக்கள் சித்தரிக்கும் விதத்தை பார்த்திருப்பீர்கள் கையில் ஒரு ஆல்பம் ,வெத்திலை டப்பாவை கக்கதில் இடுக்கி பட்டு வேட்டி பட்டு சிப்பா சகிதமா ஒரு கோண நடையை நடப்பார் ,தில்லாணா மோகனாம்பாள் நாகேஸில் இருந்து சமீபத்தில் வந்த படம் வரை இவர்கள் எல்லா பெரிய இடத்திலும் நுழைந்துவிடுவார்கள்

பதவி புரோக்கனை ஏனோ எந்த சினிமாவும் காட்டவில்லை .

இந்நாட்டின் பாராளுமன்றம் ஸ்தம்பிக்கிறது மக்கள் என்ன நடக்கிறதென்ற ஆவலுடனும் தானே தம்போக்கில் விசயங்கள் முடிந்துவிடும் என்ற அதே அசால்டான நடையுடனும் அன்றாட அலுவல்களை முடித்து கொள்கிறார்கள்

ஒரு உழவன் தான் நிலத்தில் விதைத்தது முளைக்குமா என்ற கவலையுடனும் ஒரு
தொழிலாளி இந்த மாதம் சம்பளாம் சிறிது கூட்டி கொடுப்பார்களா என்ற கவலையுடனும் முக்கால் வாசி இந்தியா அதே ஏழ்மை கோலத்தில் தினம் தினம்
இந்தியா உறங்க செல்கிறது .

இவர்களுக்கு ஓட்டு போட்ட அன்றைக்கிலிருந்து நாட்டை யாரோ பாத்துகொள்வார்கள் என்ற நப்பாசையும் தனக்கு தினம் சோறு கிடைப்பதில் சுணக்கம் இருப்பதில்லை என்ற நம்பிக்கையும் நாளை ஓட்ட போதுமானதாக இருக்கிறது

ஆனால் இதெல்லாம் தலைகீழாக நடக்கும் இந்தியா ஒன்று இருக்கிறது அதன் நடைமுறையே வேறு யாரை பதவியில் இருத்துவது ,யாரை இறக்குவது  முதலாளிகளையும் அரசியல் வாதிகளையும் இணைக்கும் புள்ளி எது ,அந்த புள்ளியை அணுக என்ன செய்யவேண்டும் தொடர்புகளை பராமரிப்பது எப்படி தொடர்புகளை பெறுவது எப்படி தொடர்புகள் மூலம் சாதித்து மீண்டும் தொடர்புகள் பெறுவது அதன் மூலம் லாபமடைவது எப்படி என
மக்கள் தொடர்புதுறையில் இருந்த ஒரு பெண் பெயர் நீரா ராடியா இந்தியாவின்
முக்கியமான பதவிகளுக்கு நியமணம் செய்வதில் ஈடுபட்டுள்ளார் அல்லது ,முக்கிய கண்ணியாக செயல்பட்டுள்ளார்

//இந்திய அரசியலைக் கலக்கி வரும் நீரா ராடியாவின் அரசியல் தொடர்புகள் தலையைச் சுற்ற வைக்கின்றன. அவருக்குத் தொடர்பு இல்லாத அரசியல் தலைவர்களோ, பிசினஸ் தலைவர்களோ இல்லை என்று கூறும் அளவுக்கு மிகப் பெரிய நெட்வொர்க்கின் பின்னணியில் செயல்பட்டுள்ளார் நீரா ராடியா//

இப்படி எழுதுகிறார்கள் இவருக்கு தொடர்பில்லாத அரசியல் வாதிகள் இல்லையாம்

---------------------------
(இந்த பகுதிகள் வேறொரு தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது )

முன்பு இவரது பெயர் நீரா சர்மா. இவரது தந்தை விமானத் துறையில் இருந்தவர். இவரது கணவர் பெயர் ஜனக் ராடியா. இவரை விவாகரத்து செய்து விட்டார். இவர் மூலம் மூன்று மகன்கள் உள்ளனர். ஜனக் ராடியா இங்கிலாந்தைச் சேர்ந்த வர்த்தகர் ஆவர்.

லண்டனில் செட்டிலாவதற்கு முன்பு கென்யாவில் இருந்தார் நீரா. பின்னர் 70களில் லண்டன் சென்றார். அங்கு பள்ளிப் படிப்பையும், வார்விக் பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பையும் முடித்தார்.

1995ம் ஆண்டு இந்தியா திரும்பினார். சஹாரா நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அதிகாரியாகப் பணியாற்றினார். பின்னர் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், கேஎல்எம், யுகே ஏர் ஆகிய நிறுவனங்களின் இந்தியப் பிரதிநிதியாக பணியாற்றினார்.

2000மாவது ஆண்டு கிரவுன் ஏர் என்ற நிறுவனத்தைத் தொடங்கிஅதன் நிர்வாக இயக்குநராக இருந்தார். அவருடன் சகோதரி கருணா மேனன் பார்ட்னராக சேர்ந்தார்.

2001ல்தான் தற்போது நடத்தி வரும் வைஷ்ணவி கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தைத் தொடங்கினார். பின்னர் நோயஸிஸ், விக்டம், நியூகான் கன்சல்டிங் ஆகியவற்றையும் தொடங்கினார். டாடா குழுமத்தின் 90 கணக்குகளை கையாளும் உரிமையைப் பெற்றார். 2008ல் இவரிடம் வந்து சேர்ந்தது ரிலையன்ஸ் நிறுவனம்.

2005ம் ஆண்டு மேஜிக் ஏர் என்ற விமான நிறுவனத்தைத் தொடங்கி முயற்சித்தார். ஆனால் அது தோல்வியில் முடிந்தது. இதற்குக் காரணம், இந்திய குடியுரிமை இவரிடம் இல்லாததால்.

டாடா நானோ பிரச்சினை சிங்கூரில் வெடித்து வெளிக் கிளம்பியபோது அதைத் தணிக்கும் முயற்சியில் பல மாதங்கள் தீவிரமாக ஈடுபட்டார். தற்போது 2ஜி ஸ்பெக்ட்ரம் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

வெறும் பிஆர் அதிகாரியாக இருந்து வரும் நீராவின் தொடர்புகளைப் பார்த்தால் மலைக்க வைக்கிறது. காற்று புக முடியாத இடத்திலும் கூட நீராவின் பேச்சு புகுந்திருப்பதை உணர முடிகிறது. அந்த அளவுக்கு பல்வேறு பிரமுகர்களுடனும் வெகு சரளமான தொடர்பைப் பராமரித்து வந்துள்ளார் நீரா.
------------------------------------------------------
இந்தியாவின் மிகப் பெரிய தொழிலதிபரான ரத்தன் டாடாவுடன் அவர் பேசிய பேச்சில், நமக்கு நேரம் சரியில்லை என்று நினைக்கிறேன். சவாலான தருணங்கள் வந்து கொண்டுள்ளன என்று படு கூலாக கூறியுள்ளார் நீரா.

உண்மையில் இப்போது நீராவுக்குத்தான் நேரம் சரியில்லை. ஆனால் இது அத்தோடு நிற்காது போலத் தெரிகிறது. ராடியா பல்வேறு பிரமுகர்களுடன் பேசியதொலைபேசி அழைப்புகளின் 5800 பதிவுகளை அமலாக்கப் பிரிவு தோண்டி துருவிக் கொண்டிருக்கிறது.

50 வயதுகளில் இருக்கும் நீரா பஞ்சாபைச் சேர்ந்தவர். இவரது தந்தை சர்மா கென்யாவில் வசித்து வந்தார். 70களில் லண்டனுக்கு இடம் பெயர்ந்தார். லண்டனில் இருக்கும்போதுதான் குஜராத்தைச் சேர்நத் ஜனக் ராடியாவை மணந்து கொண்டார் நீரா. பின்னர் அவர் மூலம் மூன்று மகன்கள் பிறந்த பின்னர் விவாகரத்து செய்து விட்டு இந்தியா திரும்பினார். நீராவின் மகன்களில் ஒருவரான கரண், கடந்த 2003ம் ஆண்டு இந்தியா மீடியாக்களில் பரபரப்பாக அடிபட்டவர் ஆவார். அப்போது நீராவின் பிசினஸ் பார்ட்னரான தீரஜ் சிங் என்பவரால் கரண் கடத்தப்பட்டார். தீரஜ் சிங், மறைந்த ஹரியானா முதல்வர் ராம் பிரேந்தர் சிங்கின் பேரன் ஆவார். அன்று முதலே மீடியா வெளிச்சத்தில் விழுந்தார் நீரா.

2003ம் ஆண்டு அப்போதைய பிரதமர் வாஜ்பாயுடன் நெருங்கும் வாய்ப்பு நீராவுக்குக் கிடைத்தது. கர்நாடக மாநிலம் பெஜாவார் மடாதிபதியுடன் அவருக்கு ஏற்கனவேஅறிமுகம் இருந்ததால் அதை வைத்து வாஜ்பாயியின் மருமகன் ரஞ்சன் பட்டச்சார்யாவுடன் நெருங்கினார் நீரா.

அதேபோல பாஜகவைச் சேர்ந்த ஆனந்தகுமாரும்நீராவின்நெருங்கிய நண்பர் ஆவார். அப்போது ஆனந்த் குமார் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராக இருந்தார். அந்த சமயத்தில்தான் ஆனந்த்குமாருடன் நீரா நட்பை ஏற்படுத்திக் கொண்டார். நேரடியாக ஆனந்த்குமாரை போய்ப் பார்க்கும் அளவுக்கு அவருடன் நட்பு கொண்டிருந்தார் நீரா. உண்மையில் ஆனந்த்குமார் மூலமாகத்தான் பெஜாவர் மடாதிபதியின் நட்பு கிடைத்தது நீராவுக்கு.

கூறப்படுகிறது. இதன் மூலம் ரிலையன்ஸ் நிறுவனத்துடனும் அவருக்கு நெருக்கமான தொடர்புகள் ஏற்பட்டது. அதன் மக்கள் தொடர்புப் பணிகளையும் நீரா கவனிக்க ஆரம்பித்தார். அதேசமயம், அனில் அம்பானியின் வில்லியாக மாறிப் போனார். டாடா குழுமமும், ரிலையன்ஸும் இணைந்து வருடத்திற்கு ரூ. 30 கோடி கட்டணத்தை நீராவுக்குத் தருவதாக கூறப்படுகிறது.

இப்படி இந்தியாவின் பெரும் பெரும் புள்ளிகளுடன் வெகு சரளமானநட்பையும், தொடர்புகளையும் ஏற்படுத்தி வைத்திருந்த நீரா முன்பு இன்று ஏகப்பட்ட கேள்விகள் வரி சை கட்டி காத்துள்ளன. ஆனால் இதில் நீராவை மட்டும் சேர்த்துப் பார்க்க முடியாது. மிகப் பெரிய புள்ளிகள் எல்லாம் இதில் தொடர்பு கொண்டுள்ளனர். நீரா ஒரு கருவி மட்டுமே.ஆனால் அவரை முன்னிறுத்தியது, அவரை பயன்படுத்திக் கொண்டது யார் என்பதையும் சேர்த்துப் பார்த்தால்தான் இதன் விஸ்வரூபம் தெரிய வரும் என்கிறார் இந்த விவகாரத்தில் அனுபவமுடைய ஒருவர். மேலும் ஆடியோ டேப்புகளை கோர்ட்டில் ஆதாரமாக சமர்ப்பிக்க முடியாது. அதேசமயம், நீரா மிகப் பெரிய சிக்கலில் உள்ளார் என்பது மட்டும் உண்மை என்றும் அவர் கூறுகிறார்.
//

மேற்கண்ட விபரங்களில் இருந்து அவர் ஒரு கருவியாகவும் செயல்பட்டுள்ளார்

ஆனால் மிக எளிதில் நுழையும் பேச்சு திறமை உள்ள கருவி இவருக்கு பின்னே பெரிய திமிங்கலங்கள் இருக்க கூடும் .

கனிமொழிக்கு பதவி கிடைக்கவில்லையா இவர் ஆறுதல் கூறுகிறார்

ராசாவுக்கு பதவி போகுமா இல்லையா என்பதை இவர் ஆருடம் கூறுகிறார்

என்ன நடக்கிறது இங்கே ;மொத்தமாக ஒரு இரயிலை மறைக்கிறேன் என சொல்லும் ஒரு மேஜிக்காரனை நான் நம்புவேன் அவனை விட திறமையாக அரசியல் வாதிகள் ஊழலை மறைக்கிறார்கள் .

மக்கள் பாவம்

இதோ ஆட்சியை நாமதான் தேர்ந்தெடுத்தோம் தப்பு நடந்தால் நாம்தானே பொறுப்பென்று அப்பாவியாக நம்பிக்கொண்டுள்ளார்கள்


சினிமா திரை விலகும் போதும் விலகியது உண்மை திரை இல்லை
என நம்ப வைக்கப்படுகிறார்கள் .



--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================
[ Read More ]

புதியஜனநாயகத்தில் ஜவுளி தொழில் நெருக்கடி தொழிலாளிக்கா முதலாளிக்கா ttp://www.vinavu.com/2010/10/19/textile/

என்ற கட்டுரையில் பஞ்சு ஏற்றுமதியை எதிர்க்கும் முதலாளிகளும் அவர்களுக்கு வால்புடித்து செல்லும் சங்கங்களும்
/ “ஆடை ஏற்றுமதிதான் உங்களுக்கு வேலையைக் கொடுக்கும்” என்று கூறும் ஜவுளி ஆலை முதலாளிகளின் மோசடியில் தொழிலாளர்களும், விசைத்தறி நெசவாளர்களும் மயங்குகிறார்கள்./
என பல உளறல்களோடு பிரச்சனையின் பரிணாமத்தை குட்டையாக புரிந்து கொண்டு தட்டையாக அனுகியது .


அதில் பின்னூட்டமிட்ட சூரபுலிகளும் தீர்வாக உள்நாட்டு உற்பத்தி என உளறி கொட்டினார்கள்

உள்நாட்டு உற்பத்தியும் பஞ்சு ஏற்றுமதி யானால் நடக்காது என எவ்வளவோ எடுத்து சொல்லியும் புரியாதமாதிரி நடித்தார்கள் .


இந்நிலையில் ஜவுளி தொழில் நசிந்துவிடும் என்ற தொழிலாளர்களின் போராட்டம் பல கட்டங்களை கடந்தது (இந்த காகித புலிகள் இணையத்தில் உளறுவதோடு சரி)
வேறு வழியில்லாம அரசு தொடர்ந்து சில வாரங்களில் இப்போது அரசு பஞ்சு ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது

எனவே ,

இதை எதிர்த்து
1. விவசாயிகளுக்கு ஒரு நியாயம் தொழிலாளிகளுக்கு ஒரு நியாயமா
2.தொழில் நட்டம் என்பது முதலாளிக்கே தொழிலாளிக்கல்ல
3.லாபம் குறைவுக்காக போராடும் முதலாளிக்கு ஆதரவளிக்கும் அரசே

எனும் அறிவுபூர்வமான கோசத்துடன் மக இக பஞ்சு ஏற்றுமதியை ஆதரித்து திருப்பூரில் இருக்கும் நாலு பேரையும் கோவையில் இருக்கும் இரண்டு பேரையும் கொண்டு மாபெரும் கடையடைப்பு ஆர்பாட்டம் அதை தொடர்ந்து கைது ஆகியவை செய்ய போவதாக செய்தி !

(நமது நிருபர் கோவையில் இருந்து)
[ Read More ]

உடன் பிறப்பே

ஊழல் ஊழல் என கூவுகிறார்கள்
ஊழலின் கரைபடாத
கருணாநிதியை பார்த்து ஊழலென
சொல்வது யாரென பார்

ஒடுக்கப்பட்டவன் மந்திரியாய்
வரகூடாதென நினைக்கும் -
பார்ப்பனர்
ஊழலை சொல்லி
ஒடுக்குகிறார்கள் நம்மை

அலைக்கற்றை ஊழலாம்
அலைக்கற்றையை யாரும்
கரைபடுத்த இயலுமா
சிறைபடுத்த இயலுமா
கேளடா தம்பி
கீழ் மதியோரை!

இருந்த விதிகளை
ஏற்றது தம்பியின் தவறாம்
முதலில் வந்தவர்கு பரிசென
ஓட்ட விதி சொல்லி
இருக்கையில்
முதலில் வந்தவர்கு கொடுத்தது
தவறாம்

ஆரியர்கள் முதலில் வந்த
திராவிடர்களை அழித்தார்கள்
ஆ ராசாவையும்
அழிக்க நினைக்கிறார்கள்

கேடிலும் துயரிலும் ஆரியம்
நம்மை வீழ்த்த பார்க்கிறது

துயில் நீங்கி தம்பி புறப்படு
சூரியன் உதித்துவிட்டான்

டான்சி நில ஊழலை செய்தவர்
சான்சி ராணி மாதிரி பேசுகிறார்

லண்டனில் ஓட்டல் வாங்கியவர்
குண்டன் டிவியில் பேசுகிறார்

கருணா நிதி ஊழல் செய்துவிட்டானா?

ஓட்டுக்கு ஐநூறு கொடுத்தோம் என்கிறார்கள்

என்வீட்டில் கள்வர் வந்து கவர்ந்து
செல்லுமளவு காசும் பொன்னும்
கொட்டி கிடந்ததை யார் அறிவார்

இத்தனை ஆண்டு ஆட்சியில்
செய்த நன்மைகள் எத்தனை
என எண்ணி பார்க்காதவர்கள்

ஒரே ஒரு ஊழலை சொல்கிறார்கள்

அம்மையார் செய்த அனைத்து
ஊழலும் பெரிதா என் அன்பு தம்பி
செய்த ஒரு ஊழல் பெரிதா

இனியும் பொறுக்காதே
வீணர்களை அழித்து திராவிடம் படைப்போம்
[ Read More ]

ஒரு விஞ்ஞானிக்கு உலகின் அற்புத திறன்களை கொண்ட அதிமானுடன் ஒருவன் தேவை படுகிறான் அப்படி எந்த மனிதனும் பிறக்கமுடியாதென்பதால் இயந்திர மனிதனை படைக்கிறான் .

ஏன் இவ்ளோ திறன்களுடன் கூடிய ஒரு இயந்திரமனிதன் தேவைபடுகிறான்.

காரணம் போரில் ஈடுபடுத்தப்பட ஆக அறிவியலின் வளர்ச்சி கூட அறிவை வளர்க்கவில்லை அந்த விஞ்ஞானிக்கு.

சரி உருவாக்கிவிட்டார் பிறகு அடுத்த கட்டத்தை பார்த்தால் அந்த இயந்திரமனிதனுக்கு உணர்வை கொடுக்கிறார்கள்.

கிட்டத்தட்ட கிழக்கையும் மேற்கையும் இணைத்து இடையில் திசைகள் இல்லாமல் செய்வது போன்றது!

இயந்திரம் என்றாலே உணர்வற்றது அதற்கு உணர்வா என நிமிர்ந்தால்

அது செய்யும் வேலை அடுத்தவன் காதலியை லவுட்டுவது

அட இங்கேயும் பிற்போக்கான்னு பார்த்தால் ஆம் பிற்போக்கேதான்

ஏற்கனவே எழுதப்பட்ட இதிகாசங்கள் டிராய் நகரம் அழிந்தது முதல் இலங்கை அழிந்தது வரை அடுத்தவன் பெண்டாட்டியை தொட்டதால்தான் என்றால்;இங்கும் இந்த அதிநவீன ரோபோட்டும் அதைத்தான் செய்கிறது.

என்ன வித்தியாசம் இதற்கு ஆணுறுப்பில்லை என்பது மட்டும் இந்த படத்தை விஞ்ஞான படமாக்குகிறது.

மற்றபடி இத்தகைய ஒரு படமெடுக்க செலவிடப்படும் திறன்கள் செலவுகள் எல்லாம் எந்த அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது என்றால் அந்த படம் சொல்லும் விசயத்தை வைத்து மட்டுமே

1.காதலியை அல்லது நண்பியை காப்பாற்ற போராடும் ரோபோ

2.பிட்டு அடிக்க உதவும் ரோபோவென

அதி உயர் அறிவியலை கூட அசட்டுதனங்களுக்கு உபயோகிப்பது அறிவியல் வளர்ந்தாலும் அறிவின்
உன்னதம் தெரியாதவர்களிடம் கிடைக்கும் கடலை மிட்டாய்தான் என்பது விளங்கிறது

மனிதன் செல்லமுடியாத சாக்கடை குழிகளுக்கும் சென்று அடைப்பெடுக்கவும்

மனிதனால் செய்ய முடியாத அறுவை சிகிச்சைகளை செய்யவும்

மனிதனால் நடக்கமுடியாத வெப்பநிலையில் குளிர் நிலையில்
நின்று வேலை செய்யவும் நமக்கு இயந்திர மனிதன் தேவைப்படலாம்

அப்போது அவனை இயக்கும் மனிதன்
சமூக கலாசாரரீதியாக அதி உன்னத நிலையில் இருப்பான்

அவனுக்கு போர் என்பதே தேவைப்படாத ஒரு விசயமாக இருக்கும்
[ Read More ]







இலண்டனுக்கு வந்த இனவெறியனை துரத்தி துரத்தி அடிக்காத குறையாக போராட்டம் நடத்தி விரட்டி இருக்கிறார்கள் .http://www.youtube.com/watch?feature=player_embedded&v=

இந்தியாவுக்கு தடையில்லாமல் எதிர்ப்பில்லாமல் வந்து செல்ல முடிகிறது தமிழர்களுக்கு எதிராக இனவெறி கொடுமைகள் நடத்திய ஒரு மனிதனால்
//ri Lankan President Mahinda Rajapaksa is to begin a three-day visit to India on Tuesday and will meet with his counterpart Pratibha Patil and Prime Minister Manmohan Singh. The visit comes amid growing concern in Sri Lanka over a proposed Comprehensive Economic Partnership Agreement (CEPA) between
related stories

* Vaiko, 1000 others detained for protest over Lanka prez visit

the two neighbours.

Both opposition members as well as some in the government have called on Rajapaksa not to go ahead with the agreement, which goes beyond bilateral trade and also includes providing services, the Sunday Times reported. //

தினந்தோறும் மீனவன் தாக்கப்படுகிறான் அதற்காகவேனும் ஒரு கருப்பு கொடியோ எதிர்ப்போ தமிழர்களிடம் இல்லை

அலைவரிசை ஊழல் அலைவரிசையாக செய்து வருகிறார் தமிழர்களின் தன்மான தலைவர்

ஈழத்தை மீட்க எனக்கு வாக்களியுங்கள் என சொன்ன மாமி இப்போ காங்கிரசுடன் கூட்டனி அமைக்க போகிறார்

தில்லை தீட்சிதர்களுக்கு எதிராக போராடிவரும் மக இக போன்ற அமைப்புகள் கூட ராஜபக்சேவுக்கு ஒரு வலுவான எதிர்ப்பை வருகையின் போது காட்டாமல் வெறும் வாய்ஜாலம் காட்டிவரும் நிலையில்

இலண்டன் வாழ் தமிழர்களை பாருங்கள்
கடுங்குளிரையும் பொருட்படுத்தாத அவர்களின் போராட்டத்தை பாருங்கள்

எனக்கு நம்பிக்கை இருக்கு நிச்சயம் ஈழம் மலரும்

போர்குற்ற படங்கள் கீழே:
-----------------------
[ Read More ]

பெரும்பாலும் விபத்துகள் நிகழாமல் தவிர்க்க என்னால் முடிந்த மட்டும் எப்படி ஓட்டனுமோ அவ்வளவு வேகமாக மட்டுமே வண்டியை ஓட்டுவேன் .

இரண்டுநாட்களாக பெய்யும் மழையானது வண்டி ஓட்டுவதற்கு மிக மிக இடைஞ்சலாகத்தான் இருக்கிறது

அந்த வளைவில் மெதுவாக சிக்னல் போட்டு திரும்பிய வேளையில் வந்து இடித்து தள்ளி விட்டார் இன்னொரு பைக் ஓட்டிய நண்பர் .

வண்டியை தூக்கி பார்த்தால் முன்புற மக்காடு உடைந்து இருக்கிறது

அப்படியே வாங்க ஓரமா அழைத்து சென்று தப்பு உங்கமேலதான் எனவே இதுக்கு ஆகிற செலவை செய்துடுங்க என்றேன் சரி என்றார் நான் ஓடமாட்டேன் நீங்க முதலில் போங்க என்றார்.

அவர் வண்டியில் அவரும் எனது வண்டியில் நானும் அமர்ந்து மக்காடு வாங்க கிளம்பியதும் வண்டியை விரட்டிய பறக்க ஆரம்பித்தார் .

என்னது நம்மகிட்டயேவா என நானும் விரட்டி சென்று சுமார் மூன்றாவது கிலோமீட்டரில் பிடித்தேன்

மன்னிப்பு கேட்டுவிட்டு திரும்ப வந்தார்
மக்காடு வாங்கி கொடுத்து விட்டு அவர் வண்டியை நிறுத்திய இடத்திற்கு அழைத்து சென்று விட்டேன்

தப்பிச்சு ஓடிடலாம்னு நினைச்சீங்களா என்ற கேள்விக்கு அவர் இன்னும் பதில் சொல்லவே இல்லை .................

என்ன புரியலை என்றால் ஒரு சிறுவிசயத்தில் கூட படித்த நபர்கள் என தன்னை சொல்லிகொள்ளும் இவர்களை போன்றோர் ஏன் நேர்மையாக இருப்பதில்லை

சரி அடிபட்டு எனக்கு கை கால் உடைந்து இருந்தால் இவரை விரட்டி சென்று பிடித்து இருக்க இயலுமா?

நேர்மை ஹமாம் சோப்புமாதிரி கரைஞ்சுட்டே வருது
[ Read More ]