யார் அந்த பாரதி கண்ணன்????
சமீபத்தில் டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் நடந்த வன்முறை சம்பவம் குறித்த உண்மையறியும் விசாரணையை நடத்தி அறிக்கை தந்திருக்கிறார். -ஆனந்த் டெல்டும்பட்
12.11.2008 அன்று சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் நடந்த வன்முறை சம்பவம் ஒவ்வொருவரையும் உலுக்கியிருக்கிறது. நிச்சயமாக இச்சம்பவம் கண்டிக்கத்தக்கது. எதிர்கால வழக்கறிஞர்களையும், நீதிபதிகளையும் உருவாக்குமிடத்தில் நடந்த சம்பவம் என்பதால், பின்னணியில் நடந்தவற்றை இங்கே பொதுவில் சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகிறது.
சட்டக்கல்லூரியில் இதுபோன்ற மோதல்கள் நடைபெறுவது புதிதல்ல. கடந்த நான்காண்டுகளாக பல மாணவர்களின் இதயங்களுக்குள் குமுறிக்கொண்டிருந்த எரிமலை சம்பவத்தன்று வெடித்து சிதறி நெருப்பாறாய் ஓடியிருக்கிறது. சென்னையில் தலைமையகம் அமைத்து இயங்கிக் கொண்டிருக்கும் 'தேவர் பேரவை' சட்டக்கல்லூரியை தொடர்ந்து அவதானித்து வருகிறது. குறிப்பாக தென் தமிழகத்திலிருந்து படிக்க வந்த தேவர் சமுதாய மாணவர்கள் இப்பேரவைக்கு பலிகடாவாக்கப்பட்டு வருகிறார்கள். இம்மாணவர்களைக் கொண்டு 'முக்குலத்தோர் மாணவர் பேரவை' என்ற அமைப்பும் ஏற்கனவே நிறுவப்பட்டிருக்கிறது. முக்குலத்தோர் மாணவர் பேரவையின் முக்கிய நோக்கமே தலித் மாணவர்களை குறிவைத்து தாக்குவதாக இருந்திருக்கிறது.
மற்ற நான்கு அரசு சட்டக்கல்லூரிகளும் 'அரசு சட்டக்கல்லூரி' என்ற பெயரில் இயங்கும்போது சென்னையில் இருக்கும் சட்டக்கல்லூரி மட்டும் ஏன் டாக்டர். அம்பேத்கர் சட்டக்கல்லூரி என்ற பெயரில் இயங்குகிறது என்றும் இப்பேரவை மாணவர்கள் பிரச்சினை செய்து வந்திருக்கிறார்கள். டாக்டர் அம்பேத்கர் ஒரு தலித் என்பதாலேயே அவரது பெயர் நீக்கப்படவேண்டும் என்று கடந்த நான்காண்டுகளாக இவர்களால் பேசப்பட்டு வந்தது. இம்மாணவர்கள் கல்லூரி பெயரை குறிப்பிட வேண்டிய இடங்களிலெல்லாம் 'சென்னை சட்டக்கல்லூரி' என்று மிகக்கவனமாக டாக்டர் அம்பேத்கர் பெயரை தவிர்த்து வந்திருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட அசாதாரண சூழலில் தான் கடந்த 12.11.2008 அன்று தங்களின் சுயபாதுகாப்புக்காக தலித் மாணவர்கள் ஆயுதம் ஏந்தி கல்லூரிக்கு வந்திருக்கிறார்கள். தூங்கிக்கொண்டிருந்த கல்லூரி நிர்வாகம் தலித் மாணவர்கள் ஆயுதமேந்தியதுமே விழித்தெழுந்து பிரச்சினையை பெரியதாக்கவேண்டாம் என்று வலியுறுத்தியிருக்கிறது. ஆயுதமேந்திய சில மாணவர்களோ மற்ற தலித் மாணவர்களின் பாதுகாப்புக்காக தான் நாங்கள் ஆயுதமேந்தியிருக்கிறோமே தவிர முக்குலத்தோர் பேரவை மாணவர்களை தாக்க அல்ல என்று விளக்கமளித்திருக்கிறார்கள். தேர்வு எழுத வந்த தலித் மாணவர்களை அடையாளம் கண்டுகொண்ட பாரதிகண்ணன், ஆறுமுகம் மற்றும் அய்யாதுரை உள்ளிட்டவர்கள் குறைந்தது ஐந்து பேரையாவது கொல்லும் நோக்கத்தோடு இரண்டு அடி நீள கத்தியோடு எகிறிக்குதித்து, பலமாக குரலெழுப்பி ஓடிவந்திருக்கிறார்கள். இதைக்கண்ட தலித் மாணவர்கள் சிதறி ஓடியிருக்கிறார்கள்.
புகை படம் ஆதாரம் :
http://www.orkut.co.in/Main#Album.aspx?uid=17766463706336935098&aid=1227155989
Nandri Mr. Paul
--
தியாகு
-
""உலகின் எங்கோ
ஒரு மூலையில்
நடக்கும் அநியாயத்தைக்
கண்டு உங்கள்
மனம் கொதித்தால்
நாம் இருவரும் தோழர்களே........""
--- சே குவேரா
============================
"இலங்கைத் தமிழர்கள் இந்தியாவிடம் பிச்சை கேட்கவில்லை. அவர்கள் எதிர்பார்ப்பது அச்சமில்லாத வாழ்க்கை. மற்றபடி நிவாரணம் எனும் பெயரில் பிச்சை கேட்கவில்லை. பழ.நெடுமாறன் சேகரித்த நிவாரணப் பொருட்களை மட்டும் ஏன் அங்கு கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை.?
ஈழத் தமிழனின் பசி இப்பொழுதுதான் கருணாநிதிக்கு தெரிந்ததா?இலங்கையில் நடைபெறும் இனப் படுகொலையை தடுக்காமல், நிவாரணப் பொருட்கள் வழங்குவதால் ஈழத் தமிழன் வாழ்ந்துவிடமுடியாது. ஈழத் தமிழர்களுக்கு அத்தியாவசியத் தேவை எது? என்பதை தமிழக முதல்வர் புரிந்து கொள்ளவில்லை என்பதையே இது காட்டுகிறது.
இலங்கையில் அப்பாவி தமிழர்களைக் கொல்வதையும், இந்துக் கோவில்களை இடித்து நொறுக்குவதையும் ஒரு சாதனையாகவே சிங்கள ராணுவம் செய்து வருகிறது. இதனை இந்து மதப் பிரச்சனையாக இங்குள்ள பாஜக, வி.எச்.பி, சிவசேனா போன்ற அமைப்புக்கள் பார்க்கவேண்டும். ஒருமுறை அதிபர் ஜெயவர்த்தனே, தமிழர்கள் அனைவரும் பௌத்த மதத்திற்கு மாறிவிட்டால் பிரச்சனையே வராது என்றார். ஆகவே இங்கு மொழி இல்லை பிரச்சனை. மதமே முக்கியப் பிரச்சனை. எனவேதான் இதனை மதப் பிரச்சனையாக பார்க்கவேண்டும் என்று நான் கூறிவருகிறேன்.
இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள் வழங்குவது அறவே பலன் தராது. அவை அனைத்தும் ஈழத் தமிழனின் கைகளுக்கு கிட்டப் போவதில்லை. எனவே சேரிக்கும் நிவாரணப் பொருட்களை எல்லாம் இங்குள்ள அகதிகளிடம் கொடுத்தாலாவது அவர்களுக்கு உதவியாக இருக்கும். அவர்கள் வாழ்க்கைக்கு பயனுள்ளதாக இருக்கும். மற்றபடி அங்கு சென்று சேரும் பொருட்கள் எல்லாம் இலங்கை ராணுவத்துக்குத்தான் உதவப் போகிறது.
இந்தியாவிற்கு அகதிகளாக தப்பி வருபவர்களை கூட இங்கே வரமுடியாமல் இலங்கை கடற்படை தடுத்து வருகிறது. அதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். ஈழப்பிரச்சனைக்கு தமிழகத்தில் உள்ள 6 கோடி மக்களால் மட்டும் தீர்வு காண முடியாது. இது ஒட்டு மத்த இந்துக்களின் பிரச்சனை. எனவே இந்தியாவில் உள்ள 85 கோடி இந்துக்களும் ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுக்க வேண்டும்.
தமிழ் ,சிங்கள கலாசாரம் ஒன்றுக்கொன்று முரண்பட்டது. இவை இரண்டும் எப்போதும் ஒத்துப்போகாது. எனவே கலாசார முரண்பாடு கொண்ட இவ்விவாகரத்தை மதரீதியான பிரச்சனையாக இந்துக்கள் அணுக வேண்டும்".
ஈழத்தமிழ் விவகாரத்தில் இப்படி ஒரு அணுகுமுறையா..?
நன்றி: அதிகாலை வெப்
--
தியாகு
-
""உலகின் எங்கோ
ஒரு மூலையில்
நடக்கும் அநியாயத்தைக்
கண்டு உங்கள்
மனம் கொதித்தால்
நாம் இருவரும் தோழர்களே........""
--- சே குவேரா
============================

