பேருந்தில் நடத்துனரின் அத்துமீறல்

ஒரு பேருந்தில் நடந்த கலாட்டாவை எழுதனும்னு ரொம்ப நாளா

நினைச்சுகிட்டு இருந்தேன் ஆனா நேரம் கிடைக்கல!

அன்று முகூர்த்த தினம் ஞாயிறு காலையில் திருப்பூர் பேருந்து நிலையத்தில்
நான் மதுரை செல்லும் வண்டிக்கு காத்து நின்றேன் சும்மா 1000 பேராவது
என்போலவே இருந்து இருப்பார்கள் திருவிழா கூட்டம் மாதிரி இருந்தது.

நானும் கூட வந்த நண்பரும் ஓட்டாமாய் ஓடி (நான் மட்டும்தான் ஓடினேன்

கூட வந்த நண்பருக்கு தொப்பை ஓட முடியாது ;))
ஒரு வண்டியில் இடம்பிடித்தோம் .

சிறப்பு பேருந்துன்னு போட்டு இருந்தான் . ஒரு ஆகாவழி பாட்ட போட்டு
வண்டிய கிளப்பினாரு டிரைவர்.

நடத்துடனர் கூட்டத்தில் மிதந்து வந்தவர் எல்லாருக்கும் சிக்கட்

கொடுத்துகொண்டே வந்தவர் . அங்கே தாராபுரம் செல்லும் நபர் தன்

குடும்பத்துடன் நின்று கொண்டு இருந்தார் அவரிடம் ஒரு டிக்கெட் விலை
60 ரூபாய்(மதுரைக்கு செல்லவே 60 ரூபாய்தான் ) என சொல்லவும் அவர்

அதிர்ந்து சண்டை போட ஆரம்பித்தார்.

நான் ஏங்க மதுரைக்கு டிக்கெட் வாங்கனும் நான் தாராபுரம் இறங்கனும்
17 ரூபாய்தான் டிக்கெட் அதைதான் தருவேன் என கோபமாக சொல்ல

கண்டக்டர் " அதெல்லாம் எனக்கு தெரியாது இந்த வண்டியில் ஏறினாலே
60 ரூபாய்தான் , இஸ்டமுன்னா வா இல்லாட்டி இறங்கு " என அதிரடியாய்
சொல்லவும்

செம்பட்டி(இது மதுரைக்கு அருகில் இருக்கும் ஊர் இந்த ஊருக்கு டிக்கெட்

43 ரூபாய்தான் ) செல்பவர்கள் எல்லா கொந்தளித்து எழுந்து . வண்டியை

நிறுத்து அதென்னா எல்லாருக்கு ஒரே கட்டனம் அப்படி நீ என்ன அரைமணி

நேரத்தில் போயிடுவியா என கேட்க ஆரம்பிக்க ஒரு கலவரமாகி
கண்டக்டர் விசில் ஊதி வண்டியை நிறுத்திட்டார்.

பேசிய பொதுஜனங்கள் இப்போ அமைதியா நின்னாங்க மறுபடியும் வண்டி

கிளம்பியது .

நான் கண்டக்டரிடம் கேட்டேன்

ஐய்யா நீ இது மதுரை போற சிறப்பு பேருந்து இதுல ஏறாதீங்கன்னு சொல்லி

இருக்கனும் .
அப்படி ஏறினவங்க கிட்ட தகறாரு பண்றது கொஞ்சம்கூட சரியில்ல

அப்படின்னேன்.
அவரும் குடும்பத்தோட வந்து இருக்கார் நடு காட்டில் வண்டிய நிறுத்தி

இறங்க சொல்றது சரியில்ல்ல அப்படின்னேன்.

எல்லாம் தெரியும் சார் ஒரு நாளைக்கு நான் ஆயிரம் பேர பாக்குறேன்
தாராபுரம் டிக்கெட் எல்லா உக்கார்ந்து கிட்டா மதுரை போறவங்க என்னா

செய்வாங்கன்னு மடக்கினார் .

அதாவது டிக்கெட் கட்டணத்தை சீட் பிரச்சனையாக மாத்தி பேசினார் .

நான் சொன்னேன் " சரி 60 ரூபாய் கட்டணம் வாங்கிட்டா சரியாக போகுமா"
மதுரை செல்பவர் எல்லாரும் உக்கார்ந்து போயிடுவாங்களா ?

உடனே பிளேட்ட மாத்தி போட்டார் பாருங்கள்

"அதெல்லாம் எனக்கு தெரியாது சார் ஒரு சீட்டுக்கு 60 வந்துட்டா எனக்கு

மதுரை போனா என்ன மாயவரம் போனா என்ன அப்படின்னார் "

என்னடா இந்தாளு லூசுதனமா பேசுறானே .

மதுரை போறவங்கமேல ரொம்ப கரிசனம் காட்டுனமாதிரி பேசினான்
இப்ப அமண்டு வந்தா போதும் அப்படின்னுள்ள சொல்றான் .

நான் சொன்னேன் " இந்த மாதிரி அரசாங்கத்துக்கு அநியாயமா சம்பாரிச்சு

கொடுத்து உங்க விசுவாசத்தை காட்டுவது இருக்கட்டும் , நாளைக்கு

உங்களுக்கு ஏதாவது பிரச்சனைன்னாலும் நாங்கதான் போராட வரனும்
பார்த்துக்கங்க " அப்படின்னேன்.

உடனே "அலோ நாங்களும் யுனியன்லதான் இருக்கோம் தோழா "

அப்படின்னாரெ பாருங்கள் . அதாவது பிளைப்புவாத சி ஐ டி யூ வில்
அவர் இருக்கார் போல ..

நான் ரொம்ப பேச பேச பொதுமக்களின் பேச்சும் அதிகரிக்கவும் .

கண்டக்டர் உடனே " சரிப்பா அந்த அந்த ஸ்டெஜுக்கு நான் டிக்கெட் வாங்கிக்கறேன் மதுரை சீட்டு தவிர மத்தவங்க எல்லாம் சீட்டை விட்டு எழும்புக்கன்னு சொன்ன்னதும் "

என் கூட பேசி கிட்டு இருந்த ஒரு தாராபுரம் சீட்டு அப்படியே ஜகா வாங்குச்சு பாருங்க "
" ம்ம் நான் ஏன் எந்திரிக்கனும் நான் எந்திரிக்க முடியாது வேண்ணா நீ 60 ரூபாய் வாங்கிக்கன்னு தடாலடியா மாத்தி பேசினார் "

இப்போ செம்பட்டி போகும் அனைவரும் 60 ரூபாய்க்கு டிக்கெட் வாங்க வேண்டியாதாகி போச்சு "

அன்னைக்கு தாராபுரம் போக 5 பேர் தான் இருந்தார்கள் அவர்கள் 17 ரூபாய்க்கு மட்டுமே சீட்டு வாங்கினார்கள் ஆனால் இந்த செம்பட்டி போன
13 பேர்கிட்ட எல்லாரும் 60 ரூபாய்க்கு சீட் வாங்கினார்கள்

இப்படி முடிந்தது அந்த சின்ன உரசல்

எனது கேள்வி:

1.ஒரே கட்டணம் வசூலிக்கனும் எனும் வாய்மொழி உத்தரவு செல்லுமா
2.இம்மாதிரி சமயத்தில் காவல் நிலையத்துக்கு வண்டியை கொண்டு செல்வதை விட போக்குவரத்து மேல் வழக்கு போட வாய்ப்பு உண்டா
3. இம்மாதிரி நிலமைகளில் ஒரு பயணி என்ன செய்யனும் என்பது உங்கள் கருத்து


# அந்த இடத்தில் பேருந்தை நிறுத்தி போராட்டம் செய்வதை சுலபமல்ல
ஏனெனில் அனைவருக்கும் அவசர வேலைகள் பல இருக்கலாம்

30 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post