தமிழிசை மரபுகளும் பார்ப்பன திரிபும்

தமிழ் இசை மரபை இருட்டடப்பு செய்து பார்பனீயம் மற்றும் வடமொழி சார்ந்த
"கர்நாடக இசை" மரபே தமிழகத்தின் செவ்வியல் இசை மரபு என பிரசாரம் செய்யப்படுகிறது . இதில் அப்பட்டமான பொய் என்பதைத் தஞ்சையை சேர்ந்த இசையறிஞர் ஆபிரகாம் பண்டிதர் இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் எழுதிய தனது "கருணாமிருதசாகரம்" எனும் இசை ஆய்வு நூலில் (1917) ஆணித்தரமாக நிருவியுள்ளார்.

ஆனால் இசை கல்லூரிகளிலோ இசை விழாக்காளிலோ இது பற்றி மூச்சும் விடுவதில்லை.

இதுவன்றி திரு.மு.அருணாசாம் அவர்கள் எழுதிய "கர்நாடக சங்கீதமும், தமிழிசை
ஆதி மும்முர்த்திகள்" என்ற நூலும், இசை அறிஞர் பா.தண்டபாணி அவர்களின் திராவிட இசை எனும் நூலும் மேலும் பல அறிஞர்களின் ஆய்வு நூல்களும் இதை நிரூபிக்கின்றன.

இசை மட்டுமல்ல கருவிகளும்
தமிழ் இசை வெறும் வாய்ப்பாட்டு மட்டுமல்ல. தமிழிசைக்கு பயன்படும் இசைகருவிகள் கூட தமிழ் நாட்டுக்கும் தமிழ் மக்களுக்குமே உரிமையாயிருந்து இன்று இந்தியா முழுவதுக்கும் ஏன் உலக நாடுகௌங்கும் பரவியிருக்கின்றன. இவையாவற்றுக்கும் அடிப்படையாக குழல் ,யாழ் ,முழவு என்னும் மூன்று கருவிகளே சான்றாக உள்ளன. இம்மூன்றும் தோன்றி வளர்ந்து வாழ்ந்து வரும் இடம் தமிழகமேயாகும். இன்று இவை பல நூறு இசைக்கருவிகளாக பல்கிப்பெருகியுள்ளன.

பரதர் நூலில் ஆதாரம்

"தென்திசை மக்கள் பற்பல நடனங்களிலும் வாய்ப்பாட்டிலும் வாத்திய சங்கீதத்திலும் தனிப்பட்ட கலையார்வம் காட்டுகின்றார்கள். அவர்களின் சாமர்தியமான அபிநயங்கள் பொலிவுடன் விளங்குகின்றன. இவ்வாறு நுண்கலைகள் உலவும் நாடானது வடக்கே விந்தியமலையாலும் மற்ற மூன்று திசைகளில் கடலாலும் சூழப்பட்டுள்ளது." பரதர் எழுதிய நாட்டிய சாஸ்திரம்(5ம் நூற்றாண்டு) பண்டைகாலத் தமிழகத்தில் பண் இசைப்போரைப் பாணர் என்றும் பெண்டிரைப் பாடினி என்றும் குறித்தனர். இசைப் பாடல்களை பாடியவர்கள் இசைபாணர் என்றும் யாழ் இசைத்தவர் யாழ்பாணர் என்றும் அழைக்கப்பட்டனர். நடனமாடிய பெண்கள் விரலியர், கூத்தியர் என்றும் அழைக்கப்படனர் என தமிழிலக்கிய நூல்கள் தெரிவிக்கின்றன. வடமொழியாளர் இசை பாடியதாகவோ நடனமாடியதாகவோ பழந்தமிழ் நூல்களில் குறிப்புகள் இல்லை.

தமிழ்ப் பண்கள்

நிலத்தை உழுது பயிரிடும்பொழுது, உணவுக்காக நெல்லைக்குற்றும் போதும் சுமை சுமந்து செல்லும் போதும், களைப்பின்றி நடக்கவும் ஆணும் பெண்ணும் பாடினர். தோட்டத்தில் குருவியோட்ட ஆலோலப்பாட்டுப் பாடினர். அறுபடையிட்டுப் பொங்கலிட்டு ஆண்களும் பெண்களும் அகமகிழ்ந்து ஆடினர் நெடுஞ்சாலை வண்டியின் பயணத்தின் போது தென்பாங்குபாட்டு பாடினர்.

தொன்றுதொட்டுப் பாடி வந்துள்ள தமிழ் இசைப்பாட்டு வகைகை சில : அக்கச்சி, அச்சோ, அப்பூச்சி, அம்மானை, ஆற்றுவரி, இம்பில், உந்தியார், ஊசல், எம்பாவை, கப்பற்பாட்டு, கழல், சந்துகவரி, சாக்கை, காளம், கானல்வரி, கிளிப்பாட்டு, குணலை, குதம்பை, குயில்குரவை, குறத்தி, கூடல், கொச்சகசார்த்து, கோத்துப்பி, தோழிப்பாட்டு, சங்கு, சாயல்வரி, சார்த்துவரி, சாழல், செம்போத்து, தச்சரண்டு, தச்சாண்டி, தாலாட்டு, திணைநிலைவரி, திருவங்க மாலை, திருவந்திகாப்பு, த்ளோளம், தோளேடக்கம், நிலைவரி, நையாண்டிலா, பகவதி, படைப்புவரி, பந்து, பல்லாண்டு, பலி, பள்ளியெழுச்சி, பாம்பாட்டி, பிடாரன், பொற்சுன்னம், மயங்கு திணை, நிலைவரி, முகச்சார்த்து, முகமில்வரி, முகவரி, மூரிச்சார்த்து, வள்ளைப்பாட்டு, சிந்து, நொண்டிச்சிந்து, கும்மி, கோலாட்டம், ஆணந்த களிப்பு, கீர்த்தனம் முதலியன.

நாடோடி இசைப் பாடல் வகைகள்:

உழவுப்பாட்டு, ஓடப்பாட்டு, நலங்கு, ஆரத்தி, ஊஞ்சல், புதிர்ப்பாட்டு, பழமொழிப்பாட்டு, கோமாளிப்பாட்டு, ஏற்றப்பாட்டு, இறைவைப்பாட்டு, காவடிப்பாட்டு, கப்பற்பாட்டு, படையெழுச்சி, தாலாட்டு, கல்லுளிப்பாட்டு, கவணெறிப்பாட்டு, பாவைப்பாட்டு, வைகறைப்பாட்டு, மறத்தியர்பாட்டு, குறத்தியர் பாட்டு, பள்ளுப்பாட்டு, புலகடைப்பாட்டு, வள்ளைப்பாட்டு, பிள்ளைப்பாட்டு முதலியன.

ஆரிய மாயையின் ஆதிக்கம்

பதின்மூன்றாம் நூற்றாண்டில் சாரங்க தேவர் என்பவரால் இயற்றப்பட்ட்ட "சங்கீத ரத்னாகரம்" என்ற நூலே குறிப்பிடத்தக்க வடமொழியில் இயற்றபட்ட இசையிலக்கண நூலாகும். தமிழ்நாட்டில் வளர்ந்திருந்த இசையை நன்கு பயின்றபின் அந்நூல் இயற்றப்பட்டுள்ளது . அந்நூலில் சாரங்க தேவர் இந்தளம், காந்தாரப்பஞ்சமம், நட்டராகம், பஞ்சமம், தக்கராகம்,
தக்கேசி நட்டபாடை, கெளசிகம், செவ்வழி, செந்துருத்தி, தேவாரவர்த்தினி, காந்தாரம், குறிஞ்சி, மேகராக குறிஞ்சி முதலிய தமிழ் பண்களைக் குறிப்பிட்டு உள்ளார்.

ஒன்பதாம் நூற்றாண்டில் மாதங்க முனிவர் இயற்றிய பிருகத்தேசி என்னும் நூலிலும் தமிழ்ப் பண்கள் குறிப்பிடபட்டுள்ளன. 13 ம் நூற்றாண்டுக்குப் பின் தமிழ்நாட்டிலேயே இசை இலக்கண நூல்கள் வடமொழியில் எழுதும் பழக்கம் ஏற்பட்டுவிட்டது. தமிழகத்தின் ஊர் பெயர்களை வடமொழியில் கும்பகோணம் (தமிழ் பெயர்: குடமூக்கு), வேதாரண்யம் (தமிழ் பெயர்: மறைக்காடு), விருத்தாசலம் (தமிழ் பெயர்: பழமலை) என்று மாற்றியதை போலவே திட்மிட்டு இசைதுறை கலை சொற்களை வடசொற்களாக காட்ட ஆரியர் முற்பட்டனர். தமிழ்நாட்டில் பிறந்து தமிழையே தாய்மொழியாகக் கொண்டிருந்தும் ஆரியர் தாம் பயின்ற இசை முறைகளையும் இசையிலக்கணங்களையும் தமிழ் மொழியில் எழுதாது வஞ்சமாய் வடமொழியில் எழுதி வைத்தனர். (தியாகராஜர் தமிழ் நாட்டில் பிறந்து தெழிங்கில் கீர்த்தனைகள் அமைத்த மாதிரி)

17 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தஞ்சை மன்னரிடம் அமைச்சராய் இருந்த கோவிந்த தீட்சிதர் "சங்கீத சுதா" என்னும் இசை நூலை வடமொழியில் இயற்றினார். இவருடைய இரண்டாவது மகன் வேங்கடமி இராகங்களை புதியதொரு முறையில் வரிசைபடுத்தி "சதித்தண்டி பிரகாசிகை" என்னும் நூலை எழுதினார் . தமிழ் நாட்டில் வழங்கி வந்துள்ள இசைமுறையை சில திரிபுகளுடன் அந்நூலில் எழுதி வைத்துள்ளார் எனினும் அதை தமிழில் எழுதாமல் வடமொழியில் எழுதினார்.

3 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post