Showing posts from July, 2006

என் காதல்

உன் கூந்தலில் வசிக்க ஒற்றைக்கால் தவம் என்தோட்டத்து பூக்கள்! உன் பாசக்காற்றுக்கு தவிக்குமென் பாய்மரங்கள்! கண்ணீரில் கரையும் கவிதை துடுப்புகள் -உன் புன்னகை நங்கூரத்தில்பூத்த காதல். -தியாகு

நீ புதிர்

நேற்றைய கேள்வியின் நாளைய பதில் நீ எவ்வளவு வகுத்தாலும் ஒன்று மிச்சம் வரும் ஒப்பற்ற கணக்கு நீ ஈவு நான் ஒரே பாடலின் இரண்டு விடை நீ எல்லோரா ஓவியம் நீ தூரிகை தொலைத்த ஓவியன் நான் காலற்ற ஊரில் கர…

நான்

எனது வருத்தங்களை புதைத்த இடத்தில் அந்த பூ மலர்ந்தது அதை நீ சூடியாவது ஆறுதல் சொல்!- என் கவிதைகளின் பின்னால் நிற்கும் கதறலை கேட்டால் நீயே காதலிப்பாய் உன்னிடம்எடுத்து சொல்ல யாரும் இல்லை செத்த…

என் காதல்

உன்னுடன் சேர்ந்து உட்கார்ந்து இடத்தில் என்னை தொலைத்தபின் ஊர் ஓரத்து ஆலமரம் தோப்போரம்எங்கும் என்தேடல்! மாட்டின் தடங்களிலும் மயான பாதையிலும் என் உயிரின் மிச்சங்கள்! மீண்டும் பிறக்கும்காலை ப…

பனி

இரவுமுழுதும் என்னுடன் இருந்தாய் பரிதியை கண்டதும் சடுதியில் மறைவாய் கரடியை கண்டதும் மறைந்த அந்த பாட புத்தக நண்பனை போல ! -தியாகு

ஓவியம்

எனது மற்றொரு ஓவியம் இந்த ஓவியம் வாட்டர் கலரில் வரையப்பட்டது

பாதை

கால நாவிதனின் கத்திதளும்புகளை உன்பாத சுவடுகளால் வருடிஅழித்து விடு! பாதையெங்கும் தெறிக்கும் இதய கதறல்கள் மனசின்மேல் நடக்கும் மந்திர காரன் நீ! உன் வெளிச்ச கசிவுகளால் மறையும் விளக்கு கம்பங்கள்…

காத்திருந்து! காத்திருந்து!

காத்திருந்த கணங்களில் மண்ணில் நுழைந்த காதல் மரமாக பின்னால்! நிமிசத்தை தின்னாமல் வேர்களை தின்னும் விரக நாக்குகள்! அசையாத இலைகளால் ஓவிய மரங்கள்! நிழலில் இருந்தும் வேர்க்கும் மனது! பொழுது போக்…

மரணம்

நாளும் முடிவும் நிச்சயிக்கப்பட்டது எனவே நீ ஆரம்பி! சொந்த நாட்டின் தலைகுனிவை -தாய் மொழியில் தொடரும் ஒரு சரிவை பசியில் வாடுமுன் சோதரனை காக்க நீ ஆரம்பி! செத்தபின் சொர்க்கமே நரகமோ வேண்டுமுன் பி…

மரணமே நான் தயார்(போட்டி கவிதை 2)

முடிக்கப்பட்ட கவிதையுடன் முடிவில்லா கனவினையும்-அவளால் தரப்பட்ட புன்னகையும் தரப்படாத சம்மதமும் சேர்த்து புதைப்பதெனில் சாகத்தயார்! மெளனங்களின் அணி வகுப்பில் மறைந்துள்ள அவள் நினைவும் சினேகத்தி…

கால்பந்தாட்டம்

மனித விளையாட்டின் மகத்துவ சிகரம் தகுதி சுற்றுக்கே தகுதியிழந்ததென் தாய் நாடெனினும் பகலில் உறங்கி இரவில் முழித்தே இருக்கிறேன் பார்க்க! சாப்பாத்துகள் வாங்கவும் வழியில்லாத நாட்டில் பந்துகள்வாங்…

மறுப்பு

வழிநெடுக வளர்ந்துள்ள செங்கொன்றை பூக்களிலும் வாகனத்திலும் பிரதிபலிக்கும் உன்விழிகளை பார்த்தபின் விரைகிறேன் கொதிக்கும்சாலையில் குளிர்பானம் கொடுத்து நீசொன்ன மறுப்பில் கொதித்தது குளிர்பானம்! ந…

ஏமாற்றம்

உன் பார்வை கிரணங்களால் என்னுள்பிறந்தன காதலும் கவிதையும்! இரண்டாவதை மட்டும் நீ ரசிப்பதாக சொன்னதும் மேகம் சுமந்து வெறும் கையுடன் திரும்பிய மழைக்காற்றானதுமனம்! "தியாகு"

முத்தம் போதும்

நீ வந்து சென்றதனால் தலைகுனிந்த பூக்கள் நிறைந்ததாய் மாறிய காடு! அன்னங்கள் எல்லாம் பறக்க துவங்கின நடக்கும் உரிமை உனக்கென சொல்…

எனது ஓவியம் ஒன்று

காணி நிலம் வேண்டும் இந்த படத்தை வரையும் எண்ணம் ரொம்ப நாளாகவே இருந்தது கவிதஎழுதுவதை காட்டிலும் படம் வரைதலைமிகவும் ரசிக்கிறேன் ஆனால் இதற்க்கு அதிகமான நேரமும் உழைப்பும் தேவை !. மேலும் நான் மு…

Load More
That is All